பங்குச் சந்தை
தொடர்கள்
நடப்பு
Published:Updated:

தொழில் வளர்ச்சி 4.0 மாநாடு... உற்பத்தித் திறன் உயருமா..?

தொழில் துறை...
பிரீமியம் ஸ்டோரி
News
தொழில் துறை...

தொழில் துறை

தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் நடத்திய ‘நாளையை நோக்கி இன்றே – தலைநிமிர்ந்த தமிழ்நாடு’ எனும் தொழில் வளர்ச்சி 4.0 மாநாடு அண்மையில் சென்னை டைடல் பார்க்கில் நடந்தது. இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு டான்செம் (TANSAM) மற்றும் டாம்கோ (TAMCOE) நிறுவனங்களின் சிறப்பு மையங்களைத் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், 2022-க்கான தமிழ்நாடு விண்வெளி மற்றும் பாதுகாப்புக் கொள்கையை வெளியிட்டார். இந்தக் கொள்கையில், ``மாநிலத்தில், உற்பத்தி மேற் கொள்ளும் வான்வெளி மற்றும் பாதுகாப்பு முதலீட்டாளர்களுக்கு சிறப்பான ஊக்கத் தொகுப்பு சலுகை அளிக்கப்படும்; அதன் வளர்ச்சியும் ஊக்குவிக்கப்படும். மேலும், இந்தக் கொள்கையின் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் புத்தொழில் நிறுவனங்களுக்கு, பெருமளவில் ஆதரவு வழங்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.

இந்தக் கொள்கையில், வரும் 10 ஆண்டுகளில் வான்வெளி மற்றும் பாதுகாப்புத் துறையில் ரூ.75,000 கோடி முதலீடு செய்யவும், ஒரு லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொழில் வளர்ச்சி 4.0 மாநாடு...
உற்பத்தித் திறன் உயருமா..?

தவிர, டிட்கோ மற்றும் ஜி.இ ஏவியேஷன் நிறுவனம் இணைந்து, ரூ.141 கோடி முதலீட்டில் உருவாக்கியுள்ள, 3D பிரின்டிங் தொழில் நுட்பத்தில், உலகத்தரம் வாய்ந்த சேர்க்கை உற்பத்திக்கான (Additive Manufacturing Centre) டாம்கோவின் திறன்மிகு மையத்தை முதல்வர் திறந்து வைத்தார். இந்தியாவில் இப்படியொரு திறன்மிகு மையம் அமைப்பது இதுவே முதல்முறை எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்தப் பொதுவசதி மையங்கள் அமைக்கப் படுவதன் மூலம், தொழிலகங்களுக்கான உற்பத்திச் செலவுகள் அதிகமாகக் குறைக்கப் பட்டு, உற்பத்தித் திறன் பல மடங்கு உயர வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.