Published:Updated:

பெருந்தொற்றும் விலைவாசி உயர்வு பிரச்னைகளும்..! என்னென்ன காரணங்கள்..?

விலைவாசி உயர்வு
பிரீமியம் ஸ்டோரி
விலைவாசி உயர்வு

I N F L A T I O N

பெருந்தொற்றும் விலைவாசி உயர்வு பிரச்னைகளும்..! என்னென்ன காரணங்கள்..?

I N F L A T I O N

Published:Updated:
விலைவாசி உயர்வு
பிரீமியம் ஸ்டோரி
விலைவாசி உயர்வு

கோவிட்-19 என்கிற பெருந் தொற்று உலகத்தையே கடந்த 15 மாதங்களாகச் சுழற்றி அடித்துக் கொண்டிருக்கும் வேளையில் பல சிரமங்களுக்கு இடையில் மக்களின் வாழ்க்கை நகர்ந்துகொண்டிருக்கிறது. எப்போது ஊரடங்கு முடியும், வாழ்க்கை பழைய நிலைக்குத் திரும்பும் என எண்ணிக் கொண்டிருக்கும் நேரத்தில், புதிதாக முளைத் திருக்கும் பிரச்னை விலைவாசி உயர்வு.

சித்தார்த்தன் 
சுந்தரம்
சித்தார்த்தன் சுந்தரம்

நுகர்வோர் விலை பணவீக்கம் 6.3 சதவிகிதமாகவும், மொத்த விலை பணவீக்கம் 12.9 சதவிகிதமாகவும் உயர்ந்திருக்கிறது. இதனால் நுகர் வோர்களாகிய நாம் அன்றாடம் உபயோகிக்கும் அடிப்படைத் தேவைக்கானப் பொருள்கள் வேகமாக ஏறிக்கொண்டிருக்கிறது. ஐந்து லிட்டர் சமையல் எண்ணெயின் விலை சுமார் 50% உயர்ந்திருக்கிறது. சமையல் எண்ணெய் இல்லாமல் `அடுக்களை’யில் என்ன வேலை செய்ய முடியும்?

ஊரடங்கால் அனைவரும் வீட்டிலேயே பெரும்பாலும் முடங்கி இருப்பதால் மற்ற செலவுகள் குறைவு என்றாலும் இந்த விலைவாசி உயர்வைச் சமாளிப்பது பெரும் பாலானவர்களுக்கு சிரமம்தான்.

ஏற்கெனவே பொருள்களுக்கான `டிமாண்ட்’ குறைவாக இருப்பதால், நுகர்வோர் பொருள்களை உற்பத்தி செய்துவரும் நிறுவனங்கள் சிரம திசையில் இருந்துவரும் வேளையில் இப்போது மூலப்பொருள்களின் விலையும் அதிகரித்திருக்கிறது. நுகர்வோர்களின் நிலைமையை உணர்ந்த சில நிறுவனங்கள் இந்த விலை அதிகரிப்பு அனைத்தையும் அவர்கள் தலையில் கட்டாமல், தங்களது லாப சதவிகிதத்தைக் குறைத்துக்கொள்வது, பொருள்களின் விலையை ஏற்றாமல் எடையைக் குறைப்பது, அதிகமாக விற்பனை யாகும் அலகுகளில் (Units – அது விலை சார்ந்தோ, பேக்கிங் சார்ந்தோ, ஃப்ளேவர் சார்ந்தோ இருக்கலாம்) மட்டும் கவனம் செலுத்துவது, விளம்பரச் செலவுகளையும் விநியோகச் செலவு களையும் குறைப்பது எனப் பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.

பெருந்தொற்றும் விலைவாசி உயர்வு பிரச்னைகளும்..! என்னென்ன காரணங்கள்..?

இந்த விலைவாசியில் அதிகமாகப் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் பொருள் சமையல் எண்ணெய். இதில் கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், வனஸ்பதி, சோயா, சூரியகாந்தி, பாமாயில் ஆகியவை முக்கியமானவை. கடந்த ஓராண்டில் இதன் விலை சுமார் 13-லிருந்து 52% வரை அதிகரித்திருக்கிறது. அதுபோல, சாமான்ய மக்கள் அருந்தும் தேநீருக்கான `டீத்தூள்’ விலையும் சுமார் 20 - 50% உயர்ந்திருக்கிறது. இதற்கான மூலப் பொருள்கள் எல்லாம் விலை உயர்ந்ததால் அதன் தாக்கம் பிராண்டுகளிலும் ஏற்பட்டிருக்கிறது.

குளிப்பதற்குப் பயன்படுத்தும் சோப்புகள் 15 - 20 சதவிகிதமும், துணி துவைக்கப் பயன்படுத்தும் டிடர் ஜென்ட்கள் சுமார் 7% அளவுக்கும் உயர்ந் திருக்கின்றன. அதுபோல கோதுமை மாவு விலையும் 10 - 20% அதிகரித்திருக்கிறது. இத்துடன், சமையல் வாயு விலையும் டெல்லியில் (ஜனவரி 21) ரூ.694-லிருந்து ரூ.809-க்கு (ஜூன் 21) உயர்ந்திருக்கிறது. ஏறக்குறைய இதே அளவிலான உயர்வு, மற்ற நகரங்களுக்கும் பொருந்தும்.

இதற்கெல்லாம் காரணம் என்ன?

சமையல் எண்ணெயைப் பொறுத்த வரை, உலகளவில் அதிகமாக நுகரும் நாடு இந்தியாதான். கடந்த 20 ஆண்டு களில் நமது உணவுப் பழக்கவழக்கங்களில் ஏற்பட்ட மாறுதல் சமையல் எண்ணெய் தேவையை மேலும் அதிகரித்தது. 1993/94-ம் ஆண்டுகளில் தனிப்பட்ட நபரின் சமையல் எண்ணெய் நுகர்வானது மாதம் 370 கிராமாக இருந்தது. இதுவே 2011/12-ம் ஆண்டில் நகர்புறத்தில் வசிப்பவர்களின் நுகர்வு 850 கிராமாகவும் கிராமப் புறத்தில் வசிப்பவர்களின் நுகர்வு 670 கிராமாகவும் உயர்ந்தது.

இதனால் டிமாண்ட் – சப்ளை பிரசனை ஏற்பட்டது. 2020-ம் நிதி ஆண்டில் வெஜிடபிள் எண்ணெய்க்கான டிமாண்ட் 25.92 மில்லியன் டன்னாக இருந்தது. ஆனால், சப்ளையின் அளவோ, 10.65 மில்லியன் டன்தான். இதனால் கிட்டத்தட்ட 56% அளவுக்கு இந்த எண்ணெய்கள் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. அர்ஜெண்டினா, பிரேசில் நாடுகளிலிருந்து சோயாபீன் எண்ணெயும், இந்தோனேசியா, மலேசியா விலிருந்து பாமாயிலும், உக்ரைன், அர்ஜென்டினாவிலிருந்து சூரியகாந்தி எண்ணெயையும் இறக்குமதி செய்து வருகிறோம்.

இந்தப் பெருந்தொற்றால் பாதிக்கப்படாத நாடுகளே இல்லை என்பதால், பொருள்கள் விநியோகத்திலும் பல இடர்ப்பாடு கள் ஏற்பட்டிருக்கிறது. மலேசியா வில் பாமாயில் தொழிலில் ஏற்பட்டிருக்கும் தொழிலாளர்கள் தட்டுப்பாடு, அர்ஜென்டினாவில் வறட்சி, உக்ரைனில் சூரியகாந்தி எண்ணெய் உற்பத்தியில் பாதிப்பு, அதோடு முன் எப்போதும் இல்லாததைவிட சீனா அதிகமாக சமையல் எண்ணெய் வாங்க ஆரம்பித்தது இந்த அனைத்துக் காரணங்களாலும் சர்வதேச அளவில் இதன் விலை அதிகரிக்க ஆரம்பித்தன. இதிலிருந்து ஓரளவுக்கு விடுபட வேண்டு மெனில், உள்நாட்டுத் தயாரிப்பை அதிகப்படுத்த வேண்டும் ஆனால், அது ஒரே நாளில் நடந்துவிடக் கூடியதில்லை.

சரி, சமையல் வாயு விலை உயர்வுக்கானக் காரணங்கள் என்ன? உலக கச்சா எண்ணெயின் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கம் இந்தியாவின் சமையல் வாயு விலையிலும் வழக்கமாக பிரதி பலிக்கும். 2020-ம் ஆண்டு மே மாதம் 30.61 டாலராக இருந்த பேரலின் விலை, 2021-ம் ஆண்டு மே மாதம் 66.95 டாலரைத் தொட்டது. விலை உயர்வால் ஏற்பட்ட பாதிப்பைவிட, நுகர்வோர்களை அதிகமாகப் பாதிக்க ஆரம்பித்திருப்பது அதற்கென்று கொடுக்கப்பட்ட மானியத்தை நிறுத்தியதுதான்.

இந்தியாவில் சுமார் 28.95 கோடி சமையல் வாயு உபயோகிப் பாளார்கள் இருக்கிறார்கள். 2014/15-ம் ஆண்டில் இவர்களின் எண்ணிக்கை 14.8 கோடியாக இருந்தது. கடந்த ஆறு, ஏழு ஆண்டுகளில் உபயோகிப்பாளர் களின் எண்ணிக்கை கிட்டத் தட்ட 95% அதிகமாகியிருக்கிறது. இதற்கு முக்கியமான காரணம், 2016-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட `பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY)’ என்ற திட்டமாகும். இதன் மூலம் வறுமைக் கோட்டுக்குக்கீழ் வாழும் மக்களுக்கென்று எட்டு கோடி இணைப்புகள் தரப் பட்டன. இதற்கான செலவு சுமார் ரூ.12,800 கோடி. இவர்களுடன் மீதமுள்ள சுமார் 18 கோடி உபயோகிப்பாளர்கள் மானியம் பெறத் தகுதி யானவர்கள். ஏனெனில், இவர்களது ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்துக்கும் கீழ் ஆகும். 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் இவர்களுக்கு ரூ.805 சந்தை விலையிலான சிலிண்டருக்கு ரூ.252 மானியமாகக் கொடுக் கப்பட்டது. ஆனால், இன்றைக்கு மானியம் இல்லாமல் இவர்கள் ரூ.805 செலவிட வேண்டியிருக்கிறது.

2020-ம் ஆண்டு கச்சா எண்ணைய் விலை குறைந்தபோது மானியம் நிறுத்தப்பட்டது. ஆனால், கச்சா எண்ணெய் விலை உயர்ந்தபோது மானியம் திரும்பத் தரப்படவில்லை. இப்போது PMUY திட்டத்தின் கீழ் இருக்கும் உபயோகிப்பாளர்களுக்கு மட்டுமே மானியம் தரப்படுகிறது. உபயோகிப் பாளர்களின் எண்ணிக்கை அதிக மானாலும், இலவச இணைப்புகள் தரப்பட்டாலும் சமையல்வாயு உபயோக மானது அதிகமாவதைவிட 3.8% குறைந் திருக்கிறது.

நுகர்வோர் பொருள்களை உற்பத்தி செய்துவரும் நிறுவனங்களில் சில அவற்றின் பிரபலமான அதிகம் விற்பனை யாகும் சிறிய பேக்குகளின் விலையை உயர்த்தாமல் 500 கிராம், 1 கிலோ பேக்குக்கான விலையை உயர்த்தி யிருக்கின்றன. சில நிறுவனங்கள் விலையை உயர்த்தாமல் தங்களது பொருள்களின் எடையைக் குறைத் திருக்கின்றன. உதாரணமாக, பிரபலமான நூடுல்ஸ் தயாரிக்கும் நிறுவனம் அதனுடைய ரூ.10 பேக்கின் எடையை 70 கிராமிலிருந்து 60 கிராமாகக் குறைத்திருக்கிறது. சில சோப்பு பிராண்டுகளின் எடையும் குறைக்கப்பட்டு இப்போது சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது.

ஊரடங்கு முடிந்து சந்தை வழக்கமான நிலைக்குத் திரும்பும் இந்தச் சமயத்தில் நுகர்வோர் பொருள்கள் விற்பனையில் நன்கு வளர்ச்சி இருக்குமென உற்பத்தியாளர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். நிறுவனங்கள் விலையை அதிகமாக உயர்த்தி நுகர்வோர்களைப் பாதிப்புக்கு உள்ளாக்காமல் கணிசமான அளவுக்கு உயர்த்தி பொருள்களை விற்க நினைத்தாலும் நுகர்வோர்கள் இன்னொரு சுற்று விலை உயர்வுக்குத் தங்களைத் தயார்படுத்திக்கொள்வது நல்லது என்றே தோன்றுகிறது.