Published:Updated:

ஓலா, ஊபரில் ஷேரிங் சேவை தற்காலிகமாக ரத்து! #corona

வாடிக்கையாளர்களும் ஷேரிங் முறையில் இன்னொருவரோடு பயணிப்பதற்கு அச்சப்படக்கூடும். இதைத் தவிர்ப்பதற்காகத் தற்காலிகமாக ஷேரிங் சவாரி முறையை ரத்து செய்வதாக ஓலா, ஊபர் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காகப் பொது இடங்களில் ஒன்றுகூடுவது, மற்றவர்களைச் சந்திப்பது உள்ளிட்டவை கூடுமானவரை தவிர்க்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்த விழிப்புணர்வுக்காக நாளை, ஞாயிறன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வீட்டைவிட்டு வெளியேறாமல் இருக்கும்படி நாட்டு மக்களுக்குப் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், ஓலா, ஊபர் ஆகிய வாடகைக் கார் நிறுவனங்கள், தங்களது சவாரியில் இருக்கும் ஷேரிங் என்ற முறையைத் தற்காலிகமாக ரத்து செய்வதாக அறிவித்துள்ளன. ஷேரிங் முறையில் முன்பின் தெரியாதவர்களோடு அருகில் அமர்ந்து பயணிக்க வேண்டியிருக்கும். இதனால், கொரோனா தொற்று பரவுவதற்கும் வாய்ப்பிருக்கிறது.

மேலும், வாடிக்கையாளர்களும் ஷேரிங் முறையில் இன்னொருவரோடு பயணிப்பதற்கு அச்சப்படக்கூடும். இதைத் தவிர்ப்பதற்காகத் தற்காலிகமாக ஷேரிங் சவாரி முறையை ரத்து செய்வதாக ஓலா, ஊபர் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. மீண்டும் இந்த முறையை எப்போது கொண்டுவருவதென்பதை கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டபின் அறிவிக்கப்படும்.

ஓலா, ஊபர் நிறுவனங்கள்
ஓலா, ஊபர் நிறுவனங்கள்

ஷேரிங் முறை ரத்து செய்யப்பட்டாலும், வழக்கமான சவாரிகளை ஏற்றிச்செல்வதில் எந்த மாற்றமும் இல்லை. கொரோனா வைரஸ் அச்சம் வந்தபின்னர் வாடகைக்கார்களைப் பயன்படுத்தும் மக்கள் குறைந்துள்ளனர். இந்த நிலையில் ஷேரிங் முறையும் ரத்தாவதால் தங்களுக்கு வருமான இழப்பு அதிகரிக்கும் என்று ஓலா, ஊபர் ஓட்டுநர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு