Published:Updated:

கொரோனாவால் முடங்கிய விமானப் போக்குவரத்து... மீட்க 200 பில்லியன் டாலர்கள் தேவை!

விமானப் போக்குவரத்து
விமானப் போக்குவரத்து

இந்த நிதி நெருக்கடியைச் சமாளிக்க விமான நிறுவனங்களுக்கு அரசிடமிருந்து 200 பில்லியன் டாலர்கள் தேவைப்படுவதாக உலக விமான நிறுவனங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் உலகம் முழுவதும் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால், மோசமாக நிதி நெருக்கடியை விமான நிறுவனங்கள் சந்தித்துள்ளன. உலக பொருளாதாரத்தின் மிக முக்கிய பங்களிப்புக் காரணியாக விமானப் போக்குவரத்து சேவை இருந்து வருகிறது .

கொரோனாவின் பிறப்பிடமாகக் கருதப்படும் சீனாவிலிருந்து இன்று உலகம் முழுவதும் பரவி இருக்கிறது கொரோனா. அதற்கு முக்கிய காரணம் விமான போக்குவரத்துதான் என்று கூறப்படுகிறது. தற்போது உலகம் முழுதும் பெரும்பாலான விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் விமான நிறுவனங்கள் பெரும் நிதி நெருக்கடிக்குள்ளாகி இருக்கின்றன.

விமானப் போக்குவரத்து
விமானப் போக்குவரத்து

இது குறித்து (IATA) சர்வதேச விமானப் போக்குவரத்து கூட்டமைப்பின் தலைவர் அலெக்ஸாண்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் 9,000-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. இந்தப் பாதிப்பு பேரிடராக அறிவிக்கப்பட்டு உலக நாடுகளில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இந்த அவசர நிலை காரணமாகவும் பாதுகாப்பு நடவடிக்கைகளாலும் உலகப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, விமான நிறுவனங்கள் இதுவரை கண்டிராத மிகப்பெரும் நெருக்கடியைச் சந்தித்துள்ளன. சார்ஸ் நோய் தாக்கியபோதும் 2008-ல் உலகப் பொருளாதாரம் மிகப் பெரும் சரிவைக் கண்டபோதும்கூட இந்த அளவுக்கு நிதி நெருக்கடி விமானத்துறைக்கு ஏற்படவில்லை.

இந்த நிலையிலிருந்து தங்களை மீட்டுக்கொள்ள விமான நிறுவனங்கள் அனைத்தும் போராடி வருகின்றன.மேலும், இதனால் விமான நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் லட்சக்கணக்கான ஊழியர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா: தமிழத்தில் செயல்படும் ஆய்வகங்கள் போதுமா? மருத்துவர்கள் கருத்தும் அரசுத் தரப்பு பதிலும்

கொரோனா தொற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள இந்த நிதி நெருக்கடி பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்காக விமான நிறுவனங்கள் செலவீனக் குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நோய்த்தொற்றால் உலகம் முழுவதும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தாலும், குறிப்பாக ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில்தான் மிகுந்த நிதி நெருக்கடி நிலவுவதாகக் குறிப்பிட்டுள்ள சர்வதேச விமானப் போக்குவரத்துக் கூட்டமைப்பு, மொத்தத்தில் விமான நிறுவனங்கள் கொரோனாவால் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியிலிருந்து மீண்டுவர 200 பில்லியன் டாலர் தேவைப்படுவதை சுட்டிக்காட்டி அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு