Published:Updated:

செக் மோசடியில் சிக்கிய கிரிக்கெட்டர் சேவாக்கின் மனைவி; என்ன உண்மை?

ஆர்த்தி சேவாக் ( Photo: Instagram / @aartisehwag )

இந்த விசாரணை நீண்ட நாள்களாக நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஆனால், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்துள்ள ஆர்த்தியின் நடவடிக்கையைக் கண்டித்து நீதிமன்றம் அவருக்கு எதிராக ஜாமீனில் வெளியே வரமுடியாத வாரண்ட்டை பிறப்பித்தது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான வீரேந்திர சேவாக்கின் மனைவி, ஆர்த்தி சேவாக். இவரின் மீது ரூ.2.5 கோடி மதிப்பிலான செக் மோசடி வழக்கு பதிவாகியுள்ளது. இந்த வழக்கு தற்போது உத்தரப்பிரதேச மாநிலம், கௌதம் புத் நகரிலுள்ள நொய்டா மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

ஆர்த்தி சேவாக்
ஆர்த்தி சேவாக்
Photo: Instagram / @aartisehwag

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பழப் பொருள்களைத் தயாரித்து விற்று வரும் நிறுவனம் எஸ்.எம்.ஜி.கே. இந்த நிறுவனத்தில் பங்குதாரராக உள்ளார் ஆர்த்தி. லக்கன்பால் புரொமோட்டர்ஸ் மற்றும் பில்டர்ஸ் நிறுவனத்திடம் இருந்து எஸ்.எம்.ஜி.கே நிறுவனம் ஆர்டரை எடுத்துள்ளது. இதற்காக வழங்கப்பட்ட செக்கை வங்கியில் கொடுத்தபோது பவுன்ஸ் ஆகியுள்ளது. இதனால் இந்த நிறுவனத்தோடு தொடர்புடைய ஆர்த்தி சேவாக் மீது செக் மோசடி வழக்கு நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்டது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த விசாரணை நீண்ட நாள்களாக நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஆனால், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்துள்ள ஆர்த்தியின் நடவடிக்கையைக் கண்டித்து நீதிமன்றம் அவருக்கு எதிராக ஜாமீனில் வெளியே வரமுடியாத வாரன்ட்டை பிறப்பித்தது.

ஆர்த்தி சேவாக்
ஆர்த்தி சேவாக்
Photo: Instagram / @aartisehwag

இந்நிலையில், நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகிய ஆர்த்தி, ஜாமீன் கோரி மனுவைத் தாக்கல் செய்தார். மேலும், நீதிமன்றத்தின் வாரன்டைத் திரும்ப பெறும்படியும் விண்ணப்பித்தார். அவரது மனுவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism