Published:Updated:

7 ஆண்டுகளில் காணாத உச்சத்தில் கச்சா எண்ணெய் விலை; பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்குமா?

கச்சா எண்ணெய்...

உக்ரைன் எல்லையில் ரஷியா ராணுவத்தைக் குவித்து வைத்திருப்பதால், ரஷியாவில் இருந்து ஐரோப்பாவிற்கான ஏற்றுமதி தடைபடும் சூழல் உருவாகி உள்ளது. இதனால் எண்ணெய் நிறுவனங்கள் திடீரென விலையை உயர்த்தியுள்ளன. இதனால் கச்சா எண்ணெய் விலை கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது.

7 ஆண்டுகளில் காணாத உச்சத்தில் கச்சா எண்ணெய் விலை; பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்குமா?

உக்ரைன் எல்லையில் ரஷியா ராணுவத்தைக் குவித்து வைத்திருப்பதால், ரஷியாவில் இருந்து ஐரோப்பாவிற்கான ஏற்றுமதி தடைபடும் சூழல் உருவாகி உள்ளது. இதனால் எண்ணெய் நிறுவனங்கள் திடீரென விலையை உயர்த்தியுள்ளன. இதனால் கச்சா எண்ணெய் விலை கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது.

Published:Updated:
கச்சா எண்ணெய்...

2020-ல் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்ததும், பல நாடுகளில் முழுமையான ஊரடங்கு போடப்பட்டது. அதனால் மக்கள் யாரும் வெளியில் செல்ல முடியாத நிலை உருவானது. விமானப் போக்குவரத்து உள்பட அனைத்து போக்குவரத்துகளுக்கும் தடை செய்யப்பட்டன. இதன் காரணமாக, பெட்ரோல், டீசல் மீதான தேவை குறைந்தது. அப்போது கச்சா எண்ணெய் விலை மைனஸில் வர்த்தகமானது.

கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அன்றிலிருந்து இன்றுவரை கச்சா எண்ணெய் விநியோகம் முழுமையாக சீரடையாத நிலையில், ரஷியா, உக்ரைன் போர் பதற்றத்தால், சிக்கல் மேலும் அதிகரித்துள்ளது. உக்ரைன் எல்லையில் ரஷியா ராணுவத்தைக் குவித்து வைத்திருப்பதால், ரஷியாவில் இருந்து ஐரோப்பாவிற்கான ஏற்றுமதி தடைபடும் சூழல் உருவாகி உள்ளது. இதனால் எண்ணெய் நிறுவனங்கள் திடீரென விலையை உயர்த்தியுள்ளன. இதனால் கச்சா எண்ணெய் விலை கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சர்வதேச சந்தையின் ஒரு பீப்பாய் பிரென்ட் கச்சா எண்ணெய் 1.11% உயர்ந்து, 91.03 டாலராக விலை அதிகரித்து வர்த்தகமாகிறது. டபிள்யு.டி.ஐ கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 0.33% உயர்ந்து, 87.15 டாலராக வர்த்தகம் ஆகிறது!

Petrol
Petrol
Photo: Vikatan / K.Rajesekaran

டீசல் மற்றும் பெட்ரோலியப் பொருள்களுக்கு மூலப்பொருளாக இருக்கும் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்து வருவது, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலையை இன்னும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், இந்திய அரசாங்கம் தற்போது வரியைக் குறைத்து விலையை கட்டுக்குள் வைத்திருப்பது போல, இனி எதிர்வரும் காலங்களிலும் அதே நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டால், இதே விலையில் பெட்ரோல் டீசல் விலை வர்த்தகமாக வாய்ப்பு இருக்கிறது.

மார்ச் மாதத்தில் ஐந்து மாநிலங்களுக்கும் சட்டமன்றத் தேர்தல் முடிந்து, கச்சா எண்ணெய் குறையாமல் இருக்கும்பட்சத்தில் பெட்ரோல், டீசல் விலை மத்திய அரசாங்கம் கட்டாயம் உயர்த்தவே செய்யும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism