Published:Updated:

உற்பத்தித் துறையில் சைபர் அட்டாக்... நம் நாட்டிலும் நடக்குமா? உஷாரய்யா உஷாரு!

சைபர் அட்டாக்
பிரீமியம் ஸ்டோரி
சைபர் அட்டாக்

C Y B E R A T T A C K

உற்பத்தித் துறையில் சைபர் அட்டாக்... நம் நாட்டிலும் நடக்குமா? உஷாரய்யா உஷாரு!

C Y B E R A T T A C K

Published:Updated:
சைபர் அட்டாக்
பிரீமியம் ஸ்டோரி
சைபர் அட்டாக்

டி.எல்.அருணாசலம், இயக்குநர், பாரத் ரீ இன்ஷூரன்ஸ் புரோக்கர்ஸ் (பி) லிமிடெட்

ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஜெர்மனியில் உள்ள ஒரு இரும்பு உருக்காலையில் ஒரு சம்பவம்... அந்த உருக் காலையின் உலைகளை இயக்கும் கம்ப்யூட்டர்களைத் திடீரென்று இயக்க முடியாமல் போனது. என்ன காரணம் என்று அலசி ஆராய்ந்து பார்த்தபோது, நிறுவனத்தின் அனைத்து கம்ப்யூட்டர்களும் ஹேக்கர்கள் வசம் போயிருந்தது தெரிந்தது. இதெப்படி சாத்தியமானது?

டி.எல்.
அருணாசலம் 
இயக்குநர், 
பாரத் ரீ
இன்ஷூரன்ஸ்
புரோக்கர்ஸ் 
(பி) லிமிடெட்
டி.எல். அருணாசலம் இயக்குநர், பாரத் ரீ இன்ஷூரன்ஸ் புரோக்கர்ஸ் (பி) லிமிடெட்

எல்லாம் கம்ப்யூட்டர் மயம்...

பெரும்பாலும் உலகெங்கிலும் தொழிற்சாலைகளில் பொருள்கள் உற்பத்தி செய்ய கம்ப்யூட்டர்கள் பல வகையில் உதவுகின்றன. ரசாயன ஆலைகளில் கொதிகலன்களை இயக்க, மோட்டார் வாகனங்கள் செய்யும் ஆலைகளில் ரோபோக்கள், பிரின்டட் லாஜிக் சர்க்யூட் (PLC) எனப்படும் உதவியுடன் இயங்கும் இயந்திரங்கள், ஆர் & டி போன்ற ஆராய்ச்சி வேலைகள், தரக் கட்டுப்பாடு, லாஜிஸ்டிக்ஸ் துறையில் மற்றும் ஆபத்தான அணுசக்தி நிறுவனங்களின் அணுஉலைகள் எனப் பலப்பல வேலைகளுக்கு கம்ப்யூட்டரின் பயன்பாடும் மிகவும் இன்றியமையாததாக இருக்கிறது.

இது தவிர, பெரும்பான்மையான தொழிற்சாலைகளில் கணக்கு வரவு செலவு, தணிக்கை, இறக்குமதி, ஏற்றுமதி, சேமிப்புக் கிடங்குகளில் உள்ள சரக்கு விவரங்கள், வாடிக்கை யாளர் மற்றும் மூலப்பொருள் விற்பனையாளர் விவரங்கள், இன்வாய்ஸ், பில் நகல்கள், பொருள் களின் விலை விவரங்கள், ஜி.எஸ்.டி வரி வசூல் மற்றும் வரி செலுத்திய விவரங்கள், அதற்கான ஆவணங்கள் போன்றவை நூற்றுக்கு நூறு சதவிகிதம் கம்ப்யூட்டர்களிலேயே சேமித்து வைக்கப்படுகின்றன.

இப்போது பெருகிவரும் கவலை என்னவென்றால், உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப் படும் கம்ப்யூட்டர்களில் ஃபிஷ்ஷிங் எனப்படும் ஏமாற்று வேலையால் வைரஸ் மூலம் ஹேக்கர்கள் நுழைந்தால், அதன் விளைவுகளை எதிர்கொள்ள முடியுமா என்பதுடன் அந்த நிகழ்வால் ஏற்படும் பணச் செலவு எவ்வளவாக இருக்கும், அதை அந்த நிறுவனத்தின் உரிமையாளர் அல்லது நிர்வாகம் சமாளிக்க முடியுமா என்பதுதான்.

உற்பத்தித் துறையில் சைபர் அட்டாக்... நம் நாட்டிலும் நடக்குமா? உஷாரய்யா உஷாரு!

ஹேக்கர்களின் பல்வேறு அட்டாக்குகள்...

2010-ம் ஆண்டு இரான் நாட்டின் அணு சக்தி ரியாக்டரை சேதப்படுத்தியதும், 2012-ல் சவூதி அரேபியாவின் ஆராம்கோ எனும் உலகத்திலேயே மிகப்பெரிய எண்ணெய் நிறுவனத்தின் அலுவலக கம்ப்யூட்டர்களில் புகுந்து பின்னர் சுத்திகரிப்பு ஆலையில் புகத் தெரிந்ததும், 2015-ல் உக்ரேயின் நாட்டின் மின் சக்தி கிரிட்டை இயக்கும் கம்ப்யூட்டரில் புகுந்து விளையாடி ஆறு மணி நேரம் மின்சாரம் இல்லாமல் துடிக்க வைத்ததும் ஹேக்கர் கும்பல்கள் அனுப்பிய பல விதமான வைரஸ் மென்பொருள்தான்.

ஹேக்கர்கள் குறிவைக்கும் ஓ.டி...

இப்போது நம்ப ஊரில் மணலியிலோ, ஒரகடத்திலோ இயங்கும் ஒரு தொழிற் சாலையின் இயல்பான செயல்பாட்டை எப்படிப் பாதிக்கக்கூடும் என்று பார்ப்போம். அந்தத் தொழிற் சாலையில் உள்ள நிர்வாக அலுவலகம், கணக்குப் பிரிவு, மனிதவளத் துறை போன்றவை பயன்படுத்துவது ஐ.டி எனப்படும் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி. அதே சமயம், அந்தத் தொழிற் சாலையில் இயங்கும் இயந்திரங் களையோ, உபகரணங்களையோ கட்டுப்படுத்தி செயல்பட செய்வது ஓ.டி (OT) எனப்படும் ஆபரேஷனல் டெக்னாலஜி. இன்றைய கம்ப்யூட்டர் வில்லன்கள் கைவைக்க விரும்பு வது அந்த ஓ.டி-யில்தான்.

அதை ரேன்சம்வேர் எனும் கம்ப்யூட்டர் வைரஸ் மூலம் தன் வசப்படுத்தி, ‘மொத்தத் தொழிற்சாலையை இயங்க விடாமல் செய்வேன்’ என்றோ, ‘இயந்திரங்களை சேதப்படுத்தி விடுவேன்’’ என்றோ பயமுறுத்தி 100 பிட்காயின் தந்தால் மட்டுமே இயந்திரங்களை இயங்க அனுமதிப்போம் என கண்டிஷன் போடலாம். ஒரு பிட்காயின் விலை, ரூ.27 லட்சம். அப்படி யானால், மொத்தமாக எவ்வளவு பணம் தர வேண்டி இருக்கும் என்பதை நீங்களே கணக்குப் போட்டுப் பாருங்கள்.

இப்படியெல்லாம் தொழிற் சாலைகளில் உள்ள கம்ப்யூட்டர் களைக் குறிவைத்து தாக்க முடியுமா எனில், உலகெங்கும் பல முறை நடந்திருக்கிறது. ஏன் நமது கூடங்குளம் அணுமின் நிலையம் வரை கம்ப்யூட்டர் வைரஸ் வந்திருக்கிறது. அந்த தொழிற்கூடங்கள் கம்ப்யூட்டர் கயவன்களிடம் சென்றுவிட்டால் அவன் சொல்படி இயந்திரங்கள் இயங்க வேண்டும். எனவே, இதெல்லாம் வெளிநாடுகளில்தான் நடக்கும். நம் நாட்டில் நடக்காது என்று நினைத்து, நாம் அஜாக்கிர தையாக இருக்க முடியாது.

குடிநீரில் 100 மடங்கு ரசாயனம்...

வைரஸ் மூலம் உக்ரைன் நாடு மின்விநியோக சப் ஸ்டேஷன்களை முடக்கி ஆறு மணி நேரம் பவர் கட் செய்தது போல, இந்த வருடம் பிப்ரவரி மாதம் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஒரு தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தில் தண்ணீரை சுத்தம் செய்ய கலக்கப்படும் ஒரு ரசாயனத்தை ஒரு பங்குக்கு பதில் நூறு மடங்கு அதிகம் கலக்கச் செய்தார்கள் இந்த வெறியர்கள். அந்த நிலையத்தின் கம்ப்யூட்டர் களை வைரஸ் மூலம் அடிமை ஆக்கியதால், இது நிகழ்ந்தது. நல்லவேளையாக, இதை ஒரு ஊழியர் தக்கசமயத்தில் கண்டு பிடித்ததால், பொதுமக்களுக்கு அந்தக் கலப்பட தண்ணீர் செல்லாமல் தடுக்க முடிந்தது.

இதைத் தடுக்க அந்தந்தத் தொழிற்சாலையின் நிர்வாகம் பெரும் செலவு செய்து ஃபயர் வால் எனும் மென்பொருள் மூலமாகவும் இயந்திரங்களைக் கட்டுப்படுத்தும் கம்ப்யூட்டர் களை இன்டர்நெட் இணைப்பு இல்லாமல் தனிமைப்படுத்தியும் பல பாதுகாப்பு முயற்சிகளை எடுக்கிறது. இதையும் மீறி எப்படியோ உள்ளே வந்து நாசம் செய்து, மென்பொருள் வல்லுநர்களுக்கே ட்ஃப் ஃபைட் தருகிறார்கள் இந்த ஹேக்கர்கள்.

உற்பத்தித் துறையில் சைபர் அட்டாக்... நம் நாட்டிலும் நடக்குமா? உஷாரய்யா உஷாரு!

கைமேல் காசு பார்க்கும் ஹேக்கர்கள்...

இப்போதெல்லாம் ஹேக்கர் களுக்கு ஒரு வங்கியிலோ, ஒரு ஐ.டி கம்பெனியிலோ வைரஸ் மென்பொருள் மூலம் அத்துமீறி கணினி நெட்வொர்க்கில் நுழைந்து பணத்தையோ, முக்கியமான தகவல்களையோ திருடவும், கை மேல் காசு பார்க்கவும் மிக எளிதாக இருப்பதாகப் படுகிறது. அதே போல், வைரஸ் மூலம் உள்ளே புகுந்து எல்லா கம்ப்யூட்டர் களையும் முடக்கி மென்பொருள் மற்றும் தகவல்களை பெயர் மாற்றம் செய்வதும், என்கிரிப்ஷன் எனும் குறியாக்கம் மூலம் லாக் செய்து பிட்காயின் கேட்டு மிரட்டுவதும் வாடிக்கையாகிவிட்டது. இரண்டு மாதம் முன்பு கொலோனியல் பைப் லயன் எனும் அமெரிக்க கம்பெனி 5 மில்லியன் டாலர்களும் ஜெ.பி.எஸ் (JBS) எனும் மாட்டிறைச்சி கம்பெனி 11 மில்லியன் டாலர்களும் பிட்காயின் களாகப் பணயத்தொகை கொடுத்து தங்கள் கம்ப்யூட்டர்களை மீட்டெடுக்க வேண்டியதாயிற்று.

2020-ல் ஜப்பானிய கார் கம்பெனி ஹோண்டாவின் அமெரிக்கா, துருக்கி, ஜப்பான் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் உள்ள கார் தயாரிப்பு தொழிற் சாலைகள் நிறுத்தி வைக்கக் காரணம், இகான்ஸ் (Ekans) எனும் வைரஸ் மென் பொருளை ஹேக்கர்கள் பயன்படுத்தியதே.

இழப்பைத் தடுக்கும் சைபர் இன்ஷூரன்ஸ்...

இப்படித் தொழிற்சாலைகள் முடங்கி உற்பத்தி பாதிக்கப்பட்டாலும், இதனால் ஏற்படும் வருமாய் இழப்பையும், இந்த சம்பவத்தை வல்லுநர்கள் மூலம் துப்பறிய ஆகும் செலவினங்களையும் பெற முடியும். ஆனால், அதே சம்பவத்தில் ஹேக்கர்கள் இயந்திரங்களைத் தாறுமாறாக இயங்க வைத்து சேதம் ஏற்படுத்தினால் அந்த நஷ்டத்தை சைபர் இன்ஷூரன்ஸ் மூலம் பெற வழி இல்லை. அதேபோல, அப்படிச் சேதம் ஏற்பட்டு அதனால் உற்பத்தி பாதிக்கப்படும் வேளையில் அந்த வருவாய் இழப்பையும் சைபர் இன்ஷூரன்ஸ் ஈடு செய்யாது. வரும் நாள்களில் சைபர் இன்ஷூரன்ஸ் பாலிசி உருமாறி இந்த நஷ்டத்தையும் ஈடு செய்ய வாய்ப்பிருக்கலாம்.

இது போன்ற சைபர் தாக்குதல் நிகழ வாய்ப்புக்கள் நிச்சயம் உள்ளன. எனவே, உஷாராக இருப்பது நம் கடமை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism