Published:Updated:

சைபர் மோசடிகள் மூலம் பணம் பறிப்பா? இனி நீங்கள் புகார் செய்ய வேண்டிய எண் இதுதான்!

Cyber Crime - Representational image
Cyber Crime - Representational image

பணம் மோசடி செய்யப்பட்ட 24 மணி மணி நேரத்துக்குள் இந்த எண்ணுக்கு அழைத்து, சம்பந்தப்பட்டவர்கள் புகார் அளித்தால், அவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து, மோசடி நபரின் வங்கிக்கணக்குக்கு செலுத்தப்பட்ட பணத்தை அவர்கள் எடுக்காதவாறு முடக்கலாம்.

வாடிக்கையாளர்களின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளை புதிப்பிப்பதாகச் சொல்லி, கார்டு எண், சி.வி.வி எண், ஒன் டைம் பாஸ்வார்டு போன்ற விவரங்களைக் கேட்டு வரும் மோசடி அழைப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, மூத்த குடிமக்களை அதிகம் குறிவைத்து, அவர்களிடம் கார்டு விவரங்களை வாங்கி, அவர்களுக்கு தெரியாமலேயே அவர்களுடைய வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை சில மோசடி கும்பல் கொள்ளை அடித்து வருகிறது.

Cyber Crime
Cyber Crime
Manuel Breva Colmeiro
`இன்டர்நெட் பேக்கிங்கில் நூதன மோசடி; உஷார்..!' - SBI வாடிக்கையாளரின் நேரடி அனுபவம்

இது தொடர்பான புகார்கள், நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக சென்னை சைபர் கிரைம் குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. ஓ.டி.பி மூலமாகவோ, வேறு வகையிலோ மோசடியாக வங்கி வாடிக்கையாளர் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுவிட்டால், உடனே புகார் தெரிவிக்க `National Cyber Crime Helpline - 155260' என்கிற புதிய எண்ணை சென்னை தி.நகர் சைபர் கிரைம் பிரிவு அறிமுகம் செய்துள்ளது.

``பணம் மோசடி செய்யப்பட்ட 24 மணி மணி நேரத்துக்குள் இந்த எண்ணுக்கு அழைத்து, சம்பந்தப்பட்டவர்கள் புகார் அளித்தால், அவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து, மோசடி நபரின் வங்கிக் கணக்குக்கு செலுத்தப்பட்ட பணத்தை அவர்கள் எடுக்காதவாறு முடக்கலாம்" என தி.நகர் சைபர் கிரைம் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், வேறு ஏதேனும் சைபர் குற்றங்கள் சம்மந்தமான காவல் நிலையத்துக்கு நேரில் வராமலேயே www.cybercrime.gov.in என்ற வலைதளத்தில் புகார் அளிக்கலாம்.

மோசடியில் சிக்காமல் இருக்க..!

புகார் தெரிவிக்கும் இணையதளம்
புகார் தெரிவிக்கும் இணையதளம்
கும்பகோணம்: நிதி நிறுவன அதிபர்களான ஹெலிகாப்டர் சகோதரர்கள் மீது ரூ.15 கோடி மோசடி புகார்!

வங்கிகள் எப்போதுமே, வாடிக்கையாளர்களின் கே.ஒய்.சி தகவல்களை, அதாவது வங்கிக் கணக்கு எண், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு விவரங்களை போன், எஸ்.எம்.எஸ் மூலம் கேட்காது. அதனால் யாராவது உங்களின் வங்கிக் கணக்கு விவரம், ஓ.டி.பி கேட்டால் கண்டிப்பாகப் பகிர வேண்டாம். மோசடி பேர்வழிகள் காட்டும் கைவரிசையில் சிக்காமல் இருக்க ஏ.டி.எம் கார்டு பின் நம்பர் மற்றும் இன்டர்நெட் பேங்கிங் பாஸ்வேர்டுகளை அடிக்கடி மாற்றவும். மேலும், ஒரே பாஸ்வேர்டுகளை பல வலைதளங் களுக்கு பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

அடுத்த கட்டுரைக்கு