Published:Updated:

சைபர் செக்யூரிட்டியில் கலக்கும் சென்னை ஸ்டார்ட்அப் செக்யூர்டென்!

குமரன், பாலா வெங்கடரமணி
பிரீமியம் ஸ்டோரி
குமரன், பாலா வெங்கடரமணி

ஸ்டார்ட்அப்

சைபர் செக்யூரிட்டியில் கலக்கும் சென்னை ஸ்டார்ட்அப் செக்யூர்டென்!

ஸ்டார்ட்அப்

Published:Updated:
குமரன், பாலா வெங்கடரமணி
பிரீமியம் ஸ்டோரி
குமரன், பாலா வெங்கடரமணி

டெக்னாலஜி வளர்ந்து வரும் வேலையில் அது சார்ந்த சிக்கல்களும் சவால்களும் வளர்ந்து வருகின்றன. சைபர் செக்யூரிட்டி என்பது அனைவருக்கும் தற்போது தேவையான ஒன்றாக இருக்கிறது. செக்யூர்டென் (Securden) என்கிற சென்னையைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம், சைபர் செக்யூரிட்டி பிரிவில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு முன்னணி வென்ச்சர் கேப்பிடல் நிறுவனமாக டைகர் குளோபல் இதில் முதலீடு செய்தது. மேலும், ஆக்செல் பார்ட்னர்ஸ், டுகெதர் ஃபண்ட் ஆகிய நிறுவனங்களும் இணைந்து மொத்தமாக 10.5 மில்லியன் டாலர் முதலீடு செய்தது.

இந்த நிறுவனத்தின் நிறுவனர்கள் பாலா வெங்கடரமணி மற்றும் குமரன் ஆகியோருடன் பேசினோம். நிறுவனத்தின் ஆரம்பகாலம், நிதி திரட்டுதல் மற்றும் அடுத்தகட்ட வளர்ச்சி உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து விரிவாகப் பேசினார்கள். முதலில் பாலா பேசத் தொடங்கினார்.

குமரன், பாலா வெங்கடரமணி
குமரன், பாலா வெங்கடரமணி

ஐ.ஏ.எஸ் To சாஃப்ட்வேர் இன்ஜினீயர்...

‘‘இன்ஜினீயரிங் முடித்து ஐ.ஏ.எஸ் எழுத வேண்டும் எனத் திட்டமிட்டேன். 1999-ம் ஆண்டு டெல்லியில் உள்ள பயிற்சி மையத் தில் இணைந்து இரு ஆண்டுகள் படித்தேன். இரு வாய்ப்புகளிலும் அடுத்தகட்டத்துக்குச் செல்ல முடியவில்லை. வேலைக்குச் செல்லலாம் எனத் திட்டமிட்டு, சென்னைக்கு வந்தேன். தெரிந்தவர் ஒருவர் மூலமாக ஜோஹோ நிறுவனத்தில் (அப்போது அதன் பெயர் adventnet) இணைந்தேன்.

அப்போது முதல் செக்யூர்டென் ஆரம்பிக்கும் வரை 16 ஆண்டுகளுக்கு மேல் ஒரே நிறுவனம்தான். இடையில் சில ஆஃபர்கள் இருந்தாலும், அங்கேயே இருக்க வேண்டும் என இருந்துவிட்டேன்.

2005-ம் ஆண்டு என்னுடைய குழுவில் குமரன் இணைந்தார். எனக்கும் அவருக்கும் அலைவரிசை ஒன்றாக இருந்தது. 2010-ம் ஆண்டுக்குப் பிறகு பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவானது. அதனால் நாங்களும் ஏதாவது தொடங்க வேண்டும் எனத் திட்டமிடுவோம். ஆனால், நாங்கள் ஜோஹோவில் கம்பர்டாக இருந்த காரணத்தால் தொடர்ந்து வேலையில் இருந்தோம்.

பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உருவாகின. ஜோஹோவில் இருந்தும் பலர் புதிய நிறுவனங்களை உருவாக்கினார்கள். அதனால் நாங்களும் அதற்கான வேலையில் இறங்கினோம். 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் வேலையை விட்டோம்.

நாங்கள் பல ஐடியாக்களைப் பரிசீலனை செய்து இரண்டு விஷயங்களை இறுதி செய்தோம். முதலாவது, இ-காமர்ஸ் நிறுவனம். ஃபேஷன் தொடர்பான நிறுவனம் அமைக்கலாம் என அதற்கான அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்கினோம். கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் இதற்கான வேலையைச் செய்தோம். ஆனால், இ-காமர்ஸ் நிறுவனம் தொடங்குவது அவ்வளவு எளிதல்ல என்பது புரிந்தது. தவிர, அப்போது தொடங்கப்பட்ட சில இ-காமர்ஸ் நிறுவனங்கள் மூடப்பட்டன. சில சிக்கலில் இருந்தன. அதனால் இ-காமர்ஸ் வேண்டாம் என முடிவெடுத்தோம்.

வேலை இல்லை. எட்டு மாத உழைப்பும் வீண் என்னும் நிலையில் குடும்பத்தினரும் உற்சாகம் இழந்துவிட்டனர். நண்பர்களும் வேலைக்குப் போகலாம் என ஆலோசனைகளை வழங்கத் தொடங்கினார்கள்.

இந்த நிலையில், அடுத்தகட்ட திட்டத்தை கையில் எடுத்தோம். அதுதான் செக்யூரிட்டி. நிறுவனங்களுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்கலாம் எனத் திட்ட மிட்டேன்’’ எனப் பாலா கூறினார். ஏற்கெனவே ஆன்டி வைரஸ் நிறுவனங்கள் இருக்கும்போது நீங்கள் புதிதாக என்ன செய்ய முடியும் என்னும் கேள்விக்கு குமரன் பதில் அளிக்கத் தொடங்கினார்.

15,000 டாலர் செலவழித்து...

‘‘ஆன்டி வைரஸ் சாஃப்ட்வேர் வைத்திருப்பார்கள். ஆனால், ஏற்கெனவே இருக்கும் வைரஸ் களை மட்டுமே அது தடுக்கும். ஆனால், தற்போது புதிது புதிதாக சைபர் அட்டாக்குகள் வரும் போது அதைத் தடுக்காது. நாங்கள் என்ன செய்கிறோம் எனில், ஒரு நிறுவனத்தில் யார் எந்த சாஃப்ட்வேரைப் பயன்படுத்த முடியும்; அதை எவ்வளவு நேரம் பயன்படுத் தலாம்; அதற்கான அனுமதியை யார் கொடுப்பது உள்ளிட்ட வற்றை எளிமையான முறையில் வழங்குகிறோம்.

சைபர் அட்டாக் நடப்பதற்கு முக்கியமான காரணம், தேவை இல்லாத அனுமதியை தேவை யில்லாத நபர்களுக்கு வழங்குவது தான். அதன் காரணமாகவே வைரஸ்கள் நெட்வொர்க்குள் நுழைகின்றன. இவற்றை ஒழுங்கு படுத்தினாலே இது போன்ற சிக்கல்களில் இருந்து தப்பிக் கலாம்.

இந்த சாஃப்ட்வேரை நிறுவனங்களுக்கு வழங்குகிறோம். சைபர் பாதுகாப்பு என்பது முக்கியமானது என்பதால், எங்களுடைய சாஃப்ட்வேர் மீது நம்பிக்கை இருந்தால் மட்டுமே வாடிக்கையாளர்கள் வாங்கு வார்கள். நாங்கள் ஐந்து நபர்கள் மட்டுமே இதை உருவாக்கினோம். சிறிய நிறுவனத்தை யார் நம்புவார்கள்? அதனால் இங்கி லாந்தில் உள்ள நிறுவனத்துக்கு எங்களுடைய சாஃப்ட்வேரை அனுப்பி தரச் சான்று பெற்றோம். ஏற்கெனவே எங்களிடம் பணம் இல்லை. இருந்தாலும் 15,000 டாலர் செலவு செய்து அந்த சான்றிதழுக்கு விண்ணப்பித்தோம். அவர்கள் சான்றிதழ் வழங்கிய பிறகு, பல வாடிக்கையாளர்களுக்கு சோதனை அடிப்படையில் கொடுத்தோம்.

அப்போது ஆஸ்திரேலியா வைச் சேர்ந்த ஒரு நிறுவனம், எங்களுடைய சாஃப்ட்வேரை 900 டாலருக்கு வாங்கியது. 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் வேலையை விட்டேன். அதன்பிறகு, 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில்தான் முதல் வருமானம் கிடைத்தது’’ என குமரன் கூறினார்.

சைபர் செக்யூரிட்டியில் கலக்கும் 
சென்னை ஸ்டார்ட்அப் செக்யூர்டென்!
சைபர் செக்யூரிட்டியில் கலக்கும் 
சென்னை ஸ்டார்ட்அப் செக்யூர்டென்!

சாதகம் தந்த லாக்டௌன்...

அடுத்தகட்ட வளர்ச்சி குறித்து பாலா தொடர்ந்தார். ‘‘முதல் வாடிக்கையாளர் வரும்போது கூட ஆறு பேர் கொண்ட குழுதான் இருந்தது. அதன்பிறகு, எங்களு டைய புராடக்ட் முழுமை அடைந்தது என்பதால், டிஜிட்டல் மூலம் வாடிகையாளர்களைத் தேடினோம். புராடக்ட் முழுமை யாக இருக்கிறது. வருமானமும் வரத் தொடங்கியது என்பதால், நிதி திரட்டும் பணியில் இறங்கினோம்.

2020-ம் ஆண்டு தொடக்கத்தில் ஆக்செல் நிறுவனம் சிறிய தொகையை முதலீடு செய்தது. இதில் எங்களுடன் பணியாற்றிய கிரீஷ் மாத்ருபூதமும் சிறிதளவுக்கு முதலீடு செய்தார். மேலும் ஆக்ஸார் வென்ச்சர்ஸ் (Axilor ventures), கேரட் லேன் நிறுவனர் மிதுன், எகா (Eka) நிறுவனருமான கார்க் உள்ளிட்டோரும் முதலீடு செய்தனர். மொத்தமாக, 1.25 மில்லியன் டாலர் முதலீட்டைப் பெற்றோம்.

முதலீடு கிடைத்த சில வாரங்களில் லாக்டௌன். ஆனால், அது எங்களுக்கு சாதகமாக அமைத்தது. காரணம், பணியாளர்கள் வீட்டில் இருந்து பணியாற்றத் தொடங் கினார்கள். அதனால் வீட்டில் இருப்பவர்கள் அலுவலகத்தில் இருக்கும் சர்வருடன் இணைந்து பணியாற்ற வேண்டும். அப்போது யாருக்கு எந்த அனுமதி தரலாம், எவ்வளவு நேரம் தரலாம் என்கிற தேவை உருவானதால், எங்கள் சேவை பலருக்கும் தேவைப்பட்டது. அன்று தொடங்கி இன்று வரை வளர்ச்சி நன்றாகவே இருந்தது.

தற்போது நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் சர்வதேச அளவில் உள்ளனர். அமெரிக்கா, கனடாவை உள்ளடங்கிய வட அமெரிக்கா எங்களுடைய முக்கியமான சந்தை. கணிசமான வாடிக்கையாளர்கள் அங்குதான் இருக் கிறார்கள். இரண்டாவதாக, ஐரோப்பாவிலும் மூன்றாவதாக, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து பகுதியிலும் உள்ளனர். சுமார் 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் எங்கள் வாடிக்கையாளர்கள் உள்ளனர். நிறுவனம் வளர்ச்சி அடைவதைத் தொடர்ந்து அடுத்தகட்ட நிதித் திரட்டலுக்குத் தயாரானோம். டைகர் குளோபல் உள்ளிட்ட நிறுவனங்கள் 10.5 மில்லியன் டாலர் முதலீடு செய்திருக்கின்றனர். இப்போதைக்கு வளர்ச்சி நன்றாக இருக்கிறது. தற்போது 35 நபர்கள் மட்டுமே இருக்கிறோம். நடப்பு ஆண்டு இறுதிக்குள் 100 நபர்களை வேலைக்கு எடுக்கத் திட்டமிட்டிருக்கிறோம்’’ என பாலா கூறினார்.

இன்றைய தொழில்துறை உலகுக்குத் தேவையான தீர்வை வழங்கும் செக்யூர்டென் நிச்சயம் ஜெயிக்கும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism