Published:Updated:

`நிர்மலா சீதாராமன் சொன்னதும் நடக்கல; பிரச்னையும் தீரல!' - எரிச்சலூட்டும் வருமான வரி இணையதளம்

வரித் தாக்கல் செய்யும் வலைதளத்தில் உள்ள அனைத்து பிரச்னைகளையும் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் சரிசெய்ய வேண்டும் என்று இன்ஃபோசிஸ் நிறுவனத்திடம் நிதியமைச்சர் சொன்னார். ஆனால், கால அவகாசம் முடிந்தும், பிரச்னை தீர்வில்லை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய, இதுவரை நடைமுறையில் இருந்துவந்த www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்தின் பயன்பாடு நிறுத்தப்படுகிறது. இதற்குப் பதிலாக, www.incometax.gov.in என்ற புதிய இணையதளம், ஜூன் 7-ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வருகிறது" என வருமான வரித் துறை அறிவித்தபோது, பழைய வலைதளத்தைவிட, புதிய வலைதளம் வரி செலுத்துவோரின் பயன்பாட்டுக்கு எளிமையாகவும், வேலைகளைக் குறைக்கும் வகையிலும் இருக்கும் என அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால், அதற்கு எதிர்மாறாக பல்வேறு சிக்கல்களையும், வருமான வரி தாக்கல் செய்ய முடியாதபடி பல்வேறு குளறுபடிகளைக் கொண்டதாக புதிய வருமான வரி வலைதளம் இருப்பது, வரி செலுத்துவோருக்கு மிகப் பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

Nirmala Sitharaman
Nirmala Sitharaman
Photo: PIB India / Twitter

``புதிய வருமான வரி வலைதளம் அறிமுகமானபோது, அன்றைய தினம் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு பல மணி நேரம் பயன்படுத்த முடியாத நிலை உருவானது. அன்றிலிருந்து, இன்று வரையிலும் இந்த வலைதளத்தில் தொடர்ந்து தொழில்நுட்ப பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் வரி செலுத்துவோர் பெரும் சிரமத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

புதிய வலைதளம் பயன்பாட்டுக்கு வந்து இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகியும், இதில் இருக்கும் தொழில்நுட்பப் பிரச்னைகள் சரிசெய்யப்படாமல் இருப்பது அரசின் மீது மக்களுக்கு கோபத்தை அதிகப்படுத்தியிருக்கிறது" என இந்தத் துறை சார்ந்த நிபுணர்கள் வருத்தம் தெரிவிக்கிறார்கள்.

புதிய வருமான வரி வலைதளத்தில் என்னென்ன பிரச்னைகள் இருக்கின்றன, பிரச்னைகளுக்கு என்ன காரணம் என மணிவேதம்.காம் நிறுவனத்தின் நிறுவனர் லலிதா ஜெயபாலனிடம் பேசினோம்.

 லலிதா ஜெயபாலன்
லலிதா ஜெயபாலன்

``புதிய வருமான வரி வலைதளத்தை அவசர அவசரமாக தயாரித்திருப்பது நன்றாகவே தெரிகிறது. இதனால் பல்வேறு அம்சங்கள் அரைகுறையாக முடிக்கப்பட்டிருக்கின்றன. இன்று, செப்டம்பர் 15-ம் தேதி பெரும்பாலான விஷயங்கள் சரிசெய்யப்படும் என நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

அதே போல, சம்பளதாரர்களுக்கு அதாவது, ஐ.டி.ஆர்-1 மற்றும் ஐ.டி.ஆர்-2 தாக்கலுக்கான விஷயங்களில் பல குறைபாடுகள் சரிசெய்யப்பட்டுள்ளன. இருப்பினும், இன்னும் சில குறைபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன.

கடந்த ஜூன் மாதத்திலிருந்து புதிய வருமான வரி வலைதளத்துக்குள் நுழைவதில் ஆரம்பித்து வலைதளத்தைப் பயன்படுத்துவதில் ஏகப்பட்ட பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. வருமான வரித் தாக்கல் செய்பவர்களின், கடந்த ஒரு ஆண்டுக்கான அனைத்து விவரங்களை இன்றுவரை டவுன்லோடு செய்ய முடியவில்லை. `Prefill data form' என்று சொல்லப்படுகிற, வருமான வரித் தாக்கல் செய்பவரின் முழு விவரங்கள் அடங்கிய விண்ணப்பம், பழைய வலைதளத்தில் ரெடிமேடாக இருக்கும். அதைக் கொண்டு எளிதாக வருமான வரியைத் தாக்கல் செய்யலாம். ஆனால், இந்தப் புதிய வலைதளத்தில், அந்த விண்ணப்பமானது 20% விவரங்களை மட்டும் உள்ளடக்கியதாக இருக்கிறது. இதர 80% விவரங்களை தாக்கல் செய்பவர் ஒவ்வொன்றாக உள்ளிட வேண்டியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அடுத்ததாக, இந்தப் புதிய வலைதளத்தில் `Tax Credit Form 26AS' -ல் வருமான வரி செலுத்துவோருடைய சம்பளம் மட்டும் அல்லாமல் அனைத்து விதமான வருமான விவரங்களுக்கு உண்டான டி.டி.எஸ் விவரங்கள் ரெடிமேடாக இருக்கின்றன. ஆனால், முழுமையாக இல்லை. இதனால் வரி செலுத்துவோரின் அனைத்து டி.டி.எஸ் விவரங்களையும் தனித்தனியாக உள்ளீடு செய்ய வேண்டி இருக்கிறது. அனைத்து விவரங்களும் ரெடிமேடாக இருந்தால்தான், ஐ.டி.ஆர் ஃபைலிங்கின்போது, அடுத்தடுத்த கட்டத்துக்கு நம்மால் எளிதாக செல்ல முடியும்.

Tax (Representational Image)
Tax (Representational Image)
தங்கத்தில் முதலீடு செய்யப்போகிறீர்களா? அதன் இந்த வடிவங்களையும் பரிசீலிக்கலாமே! - 19

கடந்த வருடத்தில் பங்குச் சந்தையில் ஏராளமானவர்கள் முதலீடு செய்திருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு டிவிடென்ட் வருமானம் வந்திருக்கிறது. ஒரு பங்கு பரிவர்த்தனை விவரங்களைகூட விட்டுவிடாமல் ஃபைல் செய்ய வேண்டும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார். ஆனால், முதலீட்டு விவரங்கள் அனைத்தும் ரெடிமேடாக இல்லாததால், ஒவ்வொன்றாக ஃபைல் செய்வது மிகவும் சிரமமாக இருக்கிறது. அதிக நேரம் விரயமாகிறது.

ITR-1 என்றால் ஃபைல் செய்ய அதிகபட்சம் ஒரு மணி நேரம் எடுக்கிறது. ஆனால், பழைய வலைதளத்தில் இதைவிட குறைவான நேரம்தான் செலவாகும். ITR-2 என்றால் பழைய வலைதளத்தில் இரண்டு மணி நேரம் செலவாகும். ஆனால், இப்போது ஆறு மணி நேரம் ஆகிறது. ஆறு மணி நேரம் ஆனாலும், வருமான வரியைத் தொழில்நுட்ப குறைபாடு காரணமாக முழுமையாகத் தாக்கல் செய்ய முடியவில்லை.

நாம் போடும் கணக்கைவிட, குறைவான வரியை இந்த வலைதளம் காட்டுகிறது. அதன்படி, நாம் வரிப்பணத்தை செலுத்தினால், அசஸ்மென்ட் அலுவலர் நிச்சயமாக வரி செலுத்துபவர்களைக் கேள்வி கேட்க அதிக வாய்ப்புள்ளது. அந்த நிலையில், வரித் தாக்கல் நடவடிக்கைகள் தள்ளிப்போகும். பல நூறு கோடி ரூபாய் செலவு செய்து வலைதளத்தை உருவாக்கியிருப்பதாக இன்ஃபோசிஸ் சொல்கிறது. ஆனால், இவ்வளவு பிரச்னைகளுடன் வருமான வரி வலைதளத்தை இயக்கத்துக்குக் கொண்டு வந்ததற்கான காரணம்தான் புரியவில்லை" என்றார் அவர்.

Tax
Tax
Representational Image
தொடர் பிரச்னையில் வருமான வரி வலைதளம்; இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு சம்மன்; என்ன நடக்கிறது?

இந்தப் புதிய வலைதளம் உருவாக்க இதுவரை ரூ.164.5 கோடி செலவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும், அடுத்த 8.5 ஆண்டுகளுக்கு, இந்த வலைதளத்தை மேலாண்மை செய்ய, ரூ.4,241.97 கோடிக்கு இன்ஃபோசிஸ் நிறுவனத்துடன் மத்திய அரசாங்கம் ஒப்பந்தம் போட்டிருகிறது. இவ்வளவு செலவு செய்தும் ஏன் இத்தனை பிரச்னை என்பதே அனைவரும் கேட்கும் கேள்வியாக இருக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு