Published:Updated:

ஒரே நேரத்தில் இரண்டு வேலை... மூன் லைட்டிங் என்பது ஏமாற்று வேலையா..?

மூன் லைட்டிங்
பிரீமியம் ஸ்டோரி
மூன் லைட்டிங்

விவாதம்

ஒரே நேரத்தில் இரண்டு வேலை... மூன் லைட்டிங் என்பது ஏமாற்று வேலையா..?

விவாதம்

Published:Updated:
மூன் லைட்டிங்
பிரீமியம் ஸ்டோரி
மூன் லைட்டிங்

விப்ரோ நிறுவனத்தின் தலைவர் ரிஷாத் பிரேம்ஜி `தகவல் தொழில் நுட்பத் துறையில் ஊழியர்கள் மூன் லைட்டிங் செய்வது ஒரு ஏமாற்று வேலை’ என்று சென்ற வாரம் கருத்து தெரிவித்துள்ளார். இந்தக் கருத்து இணைய வெளியில் பலமான விவாதங்களை எழுப்பியுள்ளது.

‘மூன் லைட்டிங்’ என்றால் என்ன?

ஓர் ஊழியர் ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு நிறுவனங்களில் பணிபுரிவது தகவல் தொழில்நுட்பத் துறையில் ‘மூன் லைட்டிங்’ என்று அழைக்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக ஊழியர்கள் வீட்டிலிருந்தபடியே பல நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.

அலுவலகத்துக்கு வர வேண்டிய அவசியம் இல்லாத காரணத்தால் ஒரு சிலர் இரண்டு வெவ்வேறு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து இரட்டை ஊதியம் பெறுகின்றனர். அவ்வாறு ஓர் ஊழியர் இரண்டு நிறுவனங்களில் பணிபுரிவது ‘மூன் லைட்டிங்’ என்று அழைக்கப்படுகிறது.

ஒரே நேரத்தில் இரண்டு வேலை...
மூன் லைட்டிங் என்பது ஏமாற்று வேலையா..?

ஓர் ஊழியர் இரண்டு நிறுவனங்களில் பணிபுரிவது ஏமாற்று வேலை என்று விப்ரோ நிறுவனர் தன் கருத்தை தெரிவித்துள்ளார். இந்தக் கருத்தை ஆதரித்து டி.சி.எஸ் நிறுவனத்தின் கணபதி சுப்ரமணியம் கருத்து வெளியிட்டுள்ளார்.

ஆனால், இதற்கு மாறாக இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் மனிதவள மேம்பாட்டுத் துறை அதிகாரி மோகன்தாஸ் பாய் வேறு விதமாகக் கருத்து வெளி யிட்டுள்ளார்.

‘‘ஒவ்வொரு நிறுவனத்திலும் பணி நேரம் என்பது குறிப்பிடப்பட்டிருக்கும். அந்தப் பணி நேரத்தில் ஒருவர் மற்றொரு நிறுவனத் துக்குப் பணி புரிந்தால்தான் தவறாகும். அதற்கு மாறாக, தமது பணி நேரம் போக மீதமுள்ள நேரத்தில் ஓர் ஊழி யர் பகுதி நேரமாக மற்றொரு நிறுவனத்தில் பணிபுரிவது தவறு என்று கூற முடியாது.

மேலும், குறைந்த அனுபவம் உள்ள ஊழியர்கள் மிகக் குறைந்த ஊதியமே பெறுகின்றனர். அவர்களின் ஊதியத்தை அதிகரிக்க அவ்வாறு மற்றொரு நிறுவனத் தில் பகுதி நேரமாகப் பணி புரிவது தவறு கிடையாது’’ என்று அவர் குறிப்பிட் டுள்ளார்.

ஹோட்டல்களில் இருந்து உணவு சப்ளை செய்யும் ஸ்விக்கி நிறுவனம் இதற்கு ஒருபடி மேலே சென்று தம் ஊழியர்கள் பகுதி நேரமாக மற்றொரு நிறுவனத்தில் பணி புரிவதற்கு எந்த ஆட்சேபனை யும் இல்லை என்றும், அதை தமது நிறுவனம் வரவேற்ப தாகவும் கருத்து வெளியிட்டுள்ளது.

இந்த ‘மூன் லைட்டிங்’ விவாதத்தில் அதிகம் சிக்கி இருப்பது தகவல் தொழில்நுட்பத்துறை சார்ந்த ஊழியர்கள்தாம். தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனத்தில் வேலை செய்தால், அதிக ஊதியம் கிடைக்கும். மேலும், பெரிய நிறுவனங்களில் வேலை கிடைத்தால் வெளிநாடுகளில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும் என்பதே பலரின் எண்ணமாக உள்ளது.

ஆனால், தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிநீக்கம் என்பதும் அதிக அளவில் நடைபெறுகிறது. அதிக அனுபவம் உள்ள ஊழியர்களைப் பணியில் இருந்து நீக்கும் வழக்கம் தகவல் தொழில்நுட்ப துறையில் அதிகமாக உள்ளது. மேலும், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப்பின் நடவடிக்கையால் இந்தியர்கள் வெளிநாடு சென்று பணிபுரிவது கணிசமாகக் கடந்த சில ஆண்டுகளாக குறைந்துவிட்டது. அதனால் வெளிநாட்டு ஊதியம் கிடைக்கும் வாய்ப்பு குறைந்து வருகிறது.

மேலும், சில நிறுவனங்கள் நிறுவனத்தின் லாப விகிதம் குறையும்போது ஊழியர்களின் ஊதியத்தில் கை வைக்கின்றனர். இந்த மாதத் தொடக்கத்தில் விப்ரோ நிறுவனம் லாப விகிதம் குறைந்ததால் சென்ற காலாண்டுக்கான வேரியபில் பே-யைக் கொடுக்க முடியாது என்று கூறிவிட்டது. இதனால் ஓர் ஊழியரின் மொத்த ஊதியத்தில் 25% வரை இதன் மூலம் குறைவதற்கு வாய்ப்புள்ளது எனச் சொல்லப் படுகிறது.

இவ்வாறு பல காரணங்களால் காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்ற எண்ணத்தில் ஒரு சில ஊழியர் கள் தமக்குக் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி இரண்டு இடங்களில் பணிபுரிகின்றனர். நிறுவனத்தின் பார்வையில் இது தவறாகப் பார்க்கப்பட்டாலும் பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்தப் பிரச்னையில் நிறுவனம் என்ன சொல்கிறது என்பதுதான் முக்கியமான விஷயம். நிறுவனம் விதிக்கும் கட்டுப்பாடுகளைப் பின்பற்றி ஊழியர்கள் செயல்படவில்லை எனில், அது விதிமுறை மீறலாகவே இருக்கும். ஊழியர்கள் இதை மனதில்கொண்டு செயல்படுவதே எப்போதும் நல்லது!