Published:Updated:

சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கும் மின்சார கார்கள்..! அதிகரித்துவரும் தேவை!

மின்சார கார்
பிரீமியம் ஸ்டோரி
மின்சார கார்

E L E C T R I C V E H I C L E

சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கும் மின்சார கார்கள்..! அதிகரித்துவரும் தேவை!

E L E C T R I C V E H I C L E

Published:Updated:
மின்சார கார்
பிரீமியம் ஸ்டோரி
மின்சார கார்

மின்சாரத்தில் ஓடும் வண்டிகள் (Electric Vehicle, சுருக்கமாக EV) பற்றி இப்போது அடிக்கடி செய்திகள் வருகின்றன. பெட்ரோல் அல்லது டீசல் மூலம் இயங்கும் வண்டிகள் வெளியேற்றும் புகையானது சுற்றுச்சூழல் பாதிப்பு களைப் பெருமளவில் உருவாக்குவதாக இருக்கிறது. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் கார் மூலம் வெளியேறும் புகை (Greenhouse gas emission) உலகளவில் 25 சதவிகிதமாக இருக்கிறது. இதைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட ‘பாரிஸ் ஒப்பந்தத்தில்’ பல்வேறு நாடுகள் பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டைப் படிப்படியாகக் குறைக்க ஒப்புக்கொண்டுள்ளன. இந்த வண்டிகளுக்குப் பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களை விற்கத் திட்டமிட்டன.

ஆனால், 2020-ல் உலக அளவில் விற்ற மொத்த வாகனங்களில் இ.வி-க்கள் வெறும் 4% மட்டுமே. இதற்கு என்ன காரணம்? 2020-ம் ஆண்டில் விற்ற இ.வி-க்களின் எண்ணிக்கை மொத்தம் 23 லட்சம். இது ஐந்து வருடங்களுக்கு முன் விற்ற எண்ணிக் கையைவிட நான்கு மடங்கு அதிகம். இ.வி-க்களின் விற்பனை வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், இந்த வகை கார்கள் இன்னும் வேகமாக விற்க‌ என்ன செய்ய வேண்டும்?

எஸ்.ராமச்சந்திரன்
தொழில்நுட்ப 
ஆலோசகர், 
Infosys 
Knowledge 
Institute
எஸ்.ராமச்சந்திரன் தொழில்நுட்ப ஆலோசகர், Infosys Knowledge Institute

மூன்று காரணங்கள்...

உலகப் பொருளாதார மன்றம் (World Economic Forum, WEF) அதன் ஆராய்ச்சியின் முடிவில் வெளியிட்ட அறிக்கையில் இவை அதிகம் விற்காமல் இருக்க‌ மூன்று காரணங் களைக் கூறியுள்ளது. அவை: 1. மின்சாரம் சார்ஜ் செய்யும் அடிப்படை வசதி (charging station infrastructure) போதுமான அளவு இல்லாதது. 2. பேட்டரிகளின் குறுகிய ஓடும் தூரம் (battery driving range). 3. இ.வி-க்களின் விலை.

இ.வி-க்கள் வாங்குவதில் உள்ள பயத்தை ரேஞ்ச் ஆன்சைட்டி (range anxiety) என்பார்கள். பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் செய்த பிறகு, வண்டி எத்தனை கிலோ மீட்டர் ஓடும் என்ற கவலையே அது. வீட்டிலிருந்து அலுவலகம் செல்லும் தூரத்தைக் கடக்க இந்த சார்ஜ் போதுமா, போகும் வழியில் சார்ஜ் காலியாகிவிட்டால் மீண்டும் சார்ஜ் செய்ய மின் நிலையம் இருக்கிறதா, என்கிற கேள்விகள் இதில் அடங்கும்.

பெட்ரோல் மற்றும் டீசலில் ஓடும் வண்டிகள் போல இல்லாமல், இ.வி-க்கள் வித்தியாசமானவை. அவற்றை ஓட்டும் விதம் ஒரு தனித்துவமான வழிமுறை. இ.வி-க்களை பிரேக் போட்டு நிறுத்தும் போது வண்டியின் வேகம் பேட்டரியை ரீசார்ஜ் செய்ய உதவும் (regenerative braking). அதனால் வேகமாக, திடீரென பிரேக்கை அழுத்தினால் சார்ஜ் குறையலாம். இதுவும் வாடிக்கை யாளருக்குக் கவலை தரும் விஷயமே.

இந்த சவால்களைச் சமாளித்து இ.வி விற்பனையை மேலும் முடுக்கிவிட இவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்கள் அவற்றை ஒரு தனிப்பட்ட பொருளாக மட்டும் பார்க்காமல், அவை பயன் படுத்தப்படும் சூழலையும் (ecosystem) கருத்தில் கொள்ள வேண்டும். இந்த சவால்களை இ.வி தயாரிக்கும் நிறுவனங் களால் மட்டுமே தீர்க்க முடியாது. அவர்களுடன் சேர்ந்து அரசுத் துறைகள், ச‌ப்ளையர்கள், வண்டிகளை ஓட்டும் வாடிக்கையாளர்கள், மற்ற கூட்டாளர்கள் அனைவரும் ஒன்றாகச் செயலாற்ற வேண்டும்.

நான்கு வழிகளில்...

இ.வி வியாபாரத்தை அதிகப்படுத்த இருக்கும் வழிகளை நான்கு வகையாகப் பிரிக்கலாம். அவை. 1. தொழில் செய்யும் முறை (business model). 2. வாகனங்களைத் தயாரித்து விற்கும் முறை. 3. சார்ஜிங் நிலைகளின் எண்ணிக்கை மற்றும் இடம் (charging station network). 4.சுற்றுப்புறச்சூழலுக்கு நன்மை பயக்கும் வழியில் நீடிப்புத்திறன் (sustainability). இனி இவற்றைப் பற்றிக் கொஞ்சம் விரிவாக‌ப் பார்ப்போம்.

மின்சார கார்
மின்சார கார்

இ.வி-க்களை வைத்து தொழில் செய்யும் முறை...

பொதுவாக, ஒரு பொருளைத் தயாரிக்கும் நிறுவனம் அதை வாடிக்கையாளருக்கு விற்பதே வ‌ழக்கம். இ.வி-க்களின் விலை ஒரு சவாலாக இருக்கும்போது, இந்த வழி சரிப்படாது. வண்டியை விற்றபின் அதைத் தயாரித்த நிறுவனத்துக்கு அதிலிருந்து வரும் வருமானமும் குறைவு. வண்டி யைப் ப‌ழுது பார்க்க வாடிக்கை யாளர் வேறு யாரிடமாவது போகலாம். உதிரி பாகங்களைக் கள்ளச் சந்தையில் வாங்கலாம். வண்டியின் விலையைக் குறைக்க அரசின் மானியத்தை நம்பி இருக்க முடியாது. இ.வி-யின் விலையில் 30% வரை பேட்டரிக்கே ஆகும். இந்த நிலையில், வண்டியை விற்காமல் அதன் பயன்பாட்டுக்குத் தகுந்த ஒரு மாதக் கட்டணத்தை வசூலிக்கலாம் (subscription service).

வாகனங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் இந்த வ‌ழிமுறையைக் கையாளத் தொடங்கியுள்ளன. மாருதியின் சப்ஸ்க்ரைப் இதற்கு ஓர் உதாரணம். ஓர் ஆண்டிலிருந்து நான்கு ஆண்டுகள் வரை, மாதத்துக்கு 15,000 ரூபாயில் தொடங்கி பல திட்டங்கள் உள்ளன. பழுதுபார்க்கும் செலவை மாருதியே பார்த்துக் கொள்ளும். பிடிக்காவிட்டால் வண்டியை மாற்றிக்கொள்ளலாம்.

இன்றுள்ள டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் இ.வி-க்கள் பெரும்பாலும் ஐ.ஓ.டி (IoT) கொண்டு இணைக்கப்பட்ட தாகவே இருக்கும். இதனால் கைபேசி மூலம் சார்ஜ் நிலையைத் தெரிந்துகொள்ளலாம். வண்டியை ஓட்டுநர் சரியாக ஓட்டுகிறாரா என்றும் கண் காணிக்கலாம்.

வாகனங்களைத் தயாரித்து விற்கும் முறை...

இ.வி-க்கள் மிகவும் எளிய அமைப்பு கொண்டவை. அவற்றில் இருக்கும் பாகங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இதனால் அவற்றைத் தயாரிக்க பெரிய தொழிற்சாலைகள் தேவை இல்லை. தூரத்தில் இருக்கும் ஒரே ஒரு பெரிய தொழிற்சாலைக்கு பதிலாக வாடிக்கையாளர்களுக்கு அருகில், நவீன தொழில் நுட்பங்கள் கொண்ட பல சிறு தொழிற்சாலைகளைக் கொண்டு இ.வி-க்களைத் தயாரிக்கலாம்.

இ.வி-க்களை ஒன்றுடன் ஒன்று வித்தியாசப்படுத்திக் காட்டுவது கடினம். இந்த சிறுதொழிற்சாலைகளில் ஒவ்வொரு வாடிக்கையாளரின் விருப்பத்துக்கேற்ப வாகனத்தைத் தயாரிக்கலாம்.

சார்ஜிங் நிலைகளின் கட்டமைப்பு...

உலகப் பொருளாதார மையத்தின் (WEF) ் கணிப்பின்படி, உலகளவில் தேவைப்படும் சார்ஜிங் நிலையங்களில் ஏற‌க்குறைய பாதிதான் இன்று இருக்கிறது. 2040-ம் ஆண்டுக்குள் இவற்றின் எண்ணிக்கையை இருமடங்கு ஆக்க வேண்டும். அதற்கு 500 மில்லியன் டாலர் வரை செலவாகும். அப்போது தான் 2.9 கோடி சார்ஜிங் ஸ்டேஷன்களை உருவாக்க முடியும் என உலகப் பொருளா தார மையம் கூறியுள்ளது.

கைபேசியின் சார்ஜர்கள் ஒன்றோடு ஒன்று வித்தியாசப்படுவது போல இருக்காமல், இ.வி-க்களின் சார்ஜர்கள் பரிமாற்றம் செய்யும்படி இருந்தால், வாடிக்கையாளர்களுக்கு சுலபமாக இருக்கும். ஆப்பிளின் சாதனங்கள் போல டெஸ்லா தனது தனித்துவமான சார்ஜ் செய்யும் சாக்கெட் பயன்படுத்துகிறது.

நீடிப்புத்திறனை ஊக்குவிக்கும் சுழ‌ற்சி பொருளாதாரம்...

இ.வி-க்களில் மறுசுழ‌ற்சி செய்து பயன்படுத்தக்கூடிய பொருள்கள் பல உள்ளன. பேட்டரிகளில் பயன்படும் லித்தியம், கோபால்ட் போன்ற பொருள்கள் உலகில் ஆப்பிரிக்காவில் சில நாடுகளில் குறிப்பிட்ட அளவுதான் கிடைக்கும். மோட்டாரில் பயன்படும் அரிய உலோகங்களை வண்டியின் ஆயுள் முடிந்தபின் தூக்கி எறிந்துவிடாமல் அவற்றை மறுசுழற்சி செய்து மீட்கலாம். மறுபடியும் ஒரு புது இ.வி-யில் பயன்படுத்த லாம். இந்த மறுசுழ‌ற்சியே ஒரு லாபகரமான தொழிலாக வளர வாய்ப்பிருக்கிறது.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க, பெரிய வாகன‌ங்களை ஓட்டாமல் வீட்டிலிருந்து சில கிலோ மீட்டர் தூரம் செல்லும் வேலைகளுக்கு மைக்ரோ மொபிலிட்டி என்று அழைக்கப்படும் சிறு வண்டிகளை பயப்படுத்தலாம். இவை வழக்கமாக ஒருவர் மட்டும் செல்லும் ஒரு ‍இ-பைக் அல்லது மின்சார‌ காராக இருக்கலாம்.

மின்வண்டிகளைப் பொறுத்தவரை, அவற்றை வடிவமைத்து தயாரிக்கும் செயல்முறை ஒரு நிலையை அடைந்து விட்டது. இதற்கு மேல் அவை வளர, அதுவும் குறிப்பாக, ஐரோப்பா, அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் இ.வி-க்களின் அடிப்படை வசதி, கூட்டுத் தொழில்தான் முக்கியம். நாம் இப்போது பார்த்த அணுகுமுறைகளின் மூலம் வாடிக்கையாளர்களின் பயத்தைப் போக்கி, விலையை மலிவாக்கி இந்தத் துறை மேலும் வளர வழி செய்யலாம். அடுத்த சில ஆண்டுகளில் இந்தத் துறை அதிவேக வளர்ச்சி காணும் என்பதில் சந்தேகமில்லை!

பிட்ஸ்

நெட்ஃப்ளிக்ஸ் கடந்த நான்காம் காலாண்டில் 10 லட்சம் புதிய வாடிக்கை யாளர்களையே பெற்றுள்ளது. 44 லட்சம் வாடிக்கை யாளர்கள் கிடைப்பார்கள் என அந்த நிறுவனம் கணித்து இருந்தது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism