Published:Updated:

புவிசார் குறியீடு பெற்றும் பயனில்லை... நலிவடைந்த திண்டுக்கல் பூட்டுத் தொழில்..!

பூட்டுத் தொழில்
பிரீமியம் ஸ்டோரி
பூட்டுத் தொழில்

ஜி.ஐ பிசினஸ்

புவிசார் குறியீடு பெற்றும் பயனில்லை... நலிவடைந்த திண்டுக்கல் பூட்டுத் தொழில்..!

ஜி.ஐ பிசினஸ்

Published:Updated:
பூட்டுத் தொழில்
பிரீமியம் ஸ்டோரி
பூட்டுத் தொழில்

திண்டுக்கல் என்றால் இன்றைக்கு பிரியாணியில் இருந்து பல விஷயங்கள் நமக்கு ஞாபகத்துக்கு வரும். ஆனால், கடந்த தலைமுறையினரிடம் திண்டுக்கல் என்றாலே பூட்டு என சட்டென சொல்லிவிடு வார்கள். ஒரு காலத்தில் திண்டுக்கல் மக்கள் பூட்டுத் தயாரிப்பை குடிசைத் தொழிலாக ஒவ்வொரு வீட்டிலும் செய்து வந்தனர். நாட்டில் எத்தனையோ வகையான பூட்டுகள் இருந்தும், லிவர் வகை மெக்கானிசத்தைப் பயன்படுத்தி தரமான பூட்டுகளை மெஷின் களின் துணை இன்றி கைத்தொழிலாகச் செய்த பாரம்பர்யத்தைத் திண்டுக்கல் பூட்டு கொண்டிருக்கிறது. இதன் காரணமாக 2019-ல் மத்திய அரசால் வழங்கப்படும் அங்கீகாரமான புவிசார் குறியீடு இதற்குத் தரப்பட்டுள்ளது.

புவிசார் குறியீடு பெற்றும் பயனில்லை... நலிவடைந்த திண்டுக்கல் பூட்டுத் தொழில்..!

திண்டுக்கல்லில் மாங்கா பூட்டு, சதுரப்பூட்டு, பெட்டிப்பூட்டு, கொத்துப்பூட்டு, ஷட்டர் பூட்டு, மாஸ்டர் கீ பூட்டு, மணிப் பூட்டு, இரட்டைப் பூட்டு, கோயில் பூட்டு என 24 வகையான பூட்டுகள் திண்டுக்கல்லில் தயாரிக்கப்படுகின்றன. இருப்பினும், மாங்கா பூட்டுதான் திண்டுக்கல்லின் ஸ்பெஷலாக உள்ளது என்பது பலருக்கும் தெரியவராத தகவல்.

திண்டுக்கல்லில் நாகல் நகர், நல்லாம்பட்டி, பாறைப்பட்டி, நல்லமநாயக்கன்பட்டி, மாலைப்பட்டி, பாலமரத்துப்பட்டி, குட்டிய பட்டி ஆகிய இடங்களில் பூட்டு தயாரிக்கும் தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தனர். 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆயிரம் பேருக்கு மேல் பூட்டு தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், தற்போது 100-க்கும் குறைவானவர்களே இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து திண்டுக்கல் பூட்டு உற்பத்தி யாளர்கள் சங்கச் செயலாளர் பிரேம்குமாரிடம் பேசினோம்.

 பிரேம்குமார்
பிரேம்குமார்

‘‘உத்தரப்பிரதேசத்தில் உள்ள அலிகார் நகர் பூட்டுத் தயாரிப்புக்கு பெயர்போன நகராகும். வடமாநிலங்களில் பூட்டுத் தயாரிப்புக்கான மூலப்பொருள்கள் குறைவான விலைக்கு கிடைக்கிறது. மேலும், அங்கு பூட்டுகளை ஃபேன்சி அயிட்டங்களாகத் தயாரிக்க பல வகையான மெஷின்கள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இதனால் அவர்கள் நடத்தும் ஒரு யூனிட்டில் நாள் ஒன்றுகே 500 பூட்டுகள் வரை தயாரிக்க முடியும். இதன் காரணமாக அவர்கள் தயாரிக்கும் பூட்டுகள் குறைவான விலைக்கு விற்கப்படுகிறது. ஆனால், அதில் தரத்தை எதிர் பார்க்க முடியாது.

திண்டுக்கல் பூட்டு கைத்தொழி லாகச் செய்வதால், மிகவும் நேர்த்தி யாகத் தரமாகச் செய்யப்படுகிறது. ஒரு பூட்டு செய்ய 3 அல்லது 4 நாள்கூட ஆகும். என்னதான் மெஷின்களில் பூட்டுகள் தயாரிக்கப் பட்டாலும், எங்களின் மெக்கானிசத்தை அதற்குள் கொண்டு வர முடியாது. இதனால்தான் தரமான திண்டுக்கல் பூட்டை உடைப்பதற்கும், கள்ளச்சாவி போட்டுத் திறப்பதற்கும் பெரும் சிரமம் ஏற்படுகிறது. மெஷின்களில் தயாரிக்கப்படும் பூட்டுகளை ஒரு தட்டு தட்டி எளிதில் திறந்துவிட முடியும்.

எங்கள் தாத்தா காலத்தில் 2,000 பேர் இந்தத் தொழிலில் இருந்தனர். அப்பா காலத்தில் அது பாதியாகக் குறைந்தது. தற்போது பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் பூட்டு தயாரிப்பில் ஈடுபடத் தொடங்கிவிட்டதால், திண்டுக்கல் பூட்டு உற்பத்தியாளர்கள் 80-க்கும் குறைவாக சுருங்கி விட்டனர்.

ஒரு யூனிட்டில் மாதம் 10,000 ரூபாய் முதலீடு போட்டு பூட்டு தயாரித்தால் 5,000 ரூபாய் லாபம் பெற முடியும். இதை வாங்கி விற்பனை செய்யும் கம்பெனிகள் ஒரு தொகையைத் தந்துவிட்டு பாரம்பர்யத் தொழிலாளர் களைக் கொத்தடிமை போல சுரண்டி வருகின்றனர். இதைக் கருத்தில்கொண்டு நலிவடைந்த பூட்டு தயாரிப்புத் தொழிலாளர் கள் அனைவரையும் ஒன்றிணைத்து தொழில் செய்யத் திட்டமிட்டோம். ஆனால், அதை வெற்றிகரமாகச் செய்ய முடியவில்லை.

புவிசார் குறியீடு பெற்றும் பயனில்லை... நலிவடைந்த திண்டுக்கல் பூட்டுத் தொழில்..!

பூட்டுத் தயாரிக்க கிலோ கணக்கில் இரும்பு, பித்தளை உள்ளிட்ட உலோகங்களைப்பயன்படுத்துவோம். தற்போது இவற்றின் விலை மிக அதிகமாக உள்ளன. இவற்றை அதிக அளவில் வாங்கி வைத்துக் கொண்டு தொழில் செய்யும் நிலையில் சிறு தொழிலாளர்கள் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் கடன் தொகை கிடைத்தது. ஆனால், அது தொழிலை மேம்படுத்த போது மானதாக இல்லை. புவிசார் குறியீடு பெற்றதும் தொழில் மறுமலர்ச்சி அடையும் என நம்பியிருந்தோம். அதுவும் நடக்கவில்லை.

மிகவும் நொடித்துப்போன எங்கள் தொழிலில் நஷ்டம் என்று எதுவும் இல்லை. இருக்கிற தொழிலாளர்கள் தங்களுக்குக் கிடைக்கும் ஆர்டர்களின் அடிப்படையில் பூட்டு செய்து கொடுத்து வருவாய் ஈட்டி வருகின்றனர். அரசு ஒத்துழைப்பு அளித்தால், பெரிய அளவில் தொழிற்சாலைகள் அமைத்து பூட்டுத் தயாரிக்கும் தொழிலாளர் களின் வாழ்வை வளப்படுத்த முடியும்’’ என்றார்.

புவிசார் குறியீடு பெற்றும் பயனில்லை... நலிவடைந்த திண்டுக்கல் பூட்டுத் தொழில்..!

திண்டுக்கல் பூட்டு உற்பத்தி யாளர்கள் சங்கத் தலைவர் முருகனிடம் பேசினோம்.

‘இப்போது மெஷின்கள் பயன் படுத்தாமல் செய்யப்படும் பூட்டு வேலைகளில் ஸ்பெஷல் அயிட்டங்கள் செய்வோர் மட்டும் தொழில் செய்துவருகின்றனர். குறிப்பாக, சாவி போட்டால் மணி அடிக்கக்கூடிய மணிப் பூட்டு, மாஸ்டர் பூட்டு, கோயில் பூட்டுகள் செய்வோருக்கு ஆர்டர்கள் கிடைக்கின்றன. இவ்வாறு ஸ்பெஷலாகச் செய்யப்படும் பூட்டுகள் செய்ய ஒரு வாரம் ஆகும். ஒரு பூட்டுக்கு 7,000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரைகூட கிடைக்கும். இவ்வாறு ஸ்பெஷலாக செய்யும் பூட்டுகளை மாதத்துக்கு மூன்று மட்டுமே செய்ய முடியும்.

சராசரியான பூட்டுகள் எனில், ஒரு பூட்டுக்கு 3,000 ரூபாய் முதலீடு போட்டால் 8,000 ரூபாய் எடுக்க முடியும். ஒரு சாவிக்கு 350 ரூபாய் முதலீடு போட்டால் 1,000 ரூபாய் எடுக்க முடியும். ஒருவரால் ஒரு மாதத்துக்கு 10 பூட்டுகள், 20 சாவிகள் செய்ய முடியும். ஆனால், அந்த அளவுக்குத் தேவை இல்லை என்பதே இன்றைய யதார்த்தமாக உள்ளது.

பிற தொழில்களைப்போல, மாதம் இவ்வளவு வருவாய் ஈட்டிவிடலாம் எனக் கூற முடியாது. மாதத்துக்கு இவ்வளவு தயாரிப்புகள் செய்யப்படு கிறது என்பதைக் கணக்கிட முடியாது. குடிசைத் தொழிலாக செய்வோர் தேவைக்கேற்றவாறு செய்துகொள்வோம். வேலை இல்லை எனில், கட்டட வேலை, தச்சு வேலை, விவசாய வேலைக்குச் செல்வோரும் உண்டு.

முருகன்
முருகன்

திண்டுக்கல் சிட்கோ தொழிற்பேட்டையில் கூட்டுறவு சங்கம் சார்பில் ஒரு யூனிட் செயல்பட்டு வருகிறது. அங்கு ஒரு சில தொழிலாளர்கள் மட்டுமே வேலை செய்கின்றனர். அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.700 கிடைக்கும். இதேபோல திண்டுக்கல்லில் உள்ள அனைத்து பூட்டுத் தொழிலாளர் களையும் ஒன்றிணைத்து தனி யூனிட்டாக அமைத்து பெரும் எண்ணிக்கையில் பூட்டுகள் தயாரித்து விற்பனைக்கு கொடுக்க முடியும். மேலும், தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி, மருத்துவமனைகள், சிறைச்சாலை, கோர்ட்டுகள் உட்பட அனைத்து அரசுக் கட்டடங்களுக்கும் இங்கிருந்து பூட்டுகள் தயாரித்து அனுப்பலாம். ஏற்கெனவே வெளிநாடுகளுக்கும் திண்டுக்கல் பூட்டு சென்றது. அவ்வாறு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு உற்பத்தியைப் பெருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால் மட்டுமே தொழிலை விட்டு வெளியேறும் தொழிலாளர்களையும், பாரம்பர்யமான திண்டுக்கல் பூட்டு தயாரிப்பையும் காக்க முடியும்’’ என்றார்.

திண்டுக்கல் பூட்டுக்கு அரசின் அரவணைப்பும் பாதுகாப்பும் மிக மிக அவசியம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism