பிரீமியம் ஸ்டோரி

'உங்களின் தீபாவளி ஷாப்பிங்கில் செலவுகளைக் குறைக்க என்னவெல்லாம் செய்வீங்க?’ என்று நாணயம் விகடன் ஃபேஸ்புக் (https://www.facebook.com/NaanayamVikatan) மற்றும் ட்விட்டர் (https://twitter.com/NaanayamVikatan) பக்கங்களில் கேட்டிருந்தோம். இதற்கு வாசகர்கள் அளித்த சரவெடி கமென்ட்ஸ் இதோ...

“பெட்ரோல், காஸ், அத்தியாவசிய பொருள்கள் வாங்க காசு இல்லாத மக்கள் எப்படி கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்கள்? பசி, பட்டினி மிகுந்த நாடுகளில் இந்தியா 101-வது இடம்”னு சொல்லி வருத்தப்பட்டுருக் காரு வினோத் குமார். நீங்க சொல்றது சரிதான் சார்!

“தீபாவளி அடுத்த வருஷம் வரும்ல, அப்போ பார்த்துக்கலாம்னு விட்டாச்சு...” என கமென்ட் போட்டிருக்காரு சபா பூபதி. அட கொடுமையே!

“இன்றிலிருந்து மனைவியிடம் சண்டை போட்டு, ‘கா’ விட வேண்டும்...’னு சொல்லிருக் காரு செல்வாதிரு. வீட்டம்மா உடனே பழம் போட்டா என்ன செய்வீங்கப்பு..?

“எனக்காக 1,000 ரூபாய் செலவு செய்யும் நான், அதில் 30% அதாவது, 300 ரூபாய்க்கு ஏதாவது ஒரு ஏழை குழந்தைக்குச் செலவு செய்வேன். மகிழ்ச்சி என்பது அனைவருக்கும் இருக்க வேண்டும் இந்த நன்னாளில்...”னு சொல்லிருக்காரு ஜெயக்குமார் ஜெயராமன். மத்தவங்களை நெனைச்சுப் பார்க்கிற மனசு தான் சார் கடவுள்!

“டைம் டிராவல் பண்ணி டிசம்பர் மாசம் போய்டுவோம்...”னு எஸ்கேப் கமென்ட் பண்ணிருக்காரு குரு. ரைட்டு விடுங்க!

“கண்களையும் கைகளையும் கட்டிக் கொண்டு சும்மா இருப்பேன்”னு சொல்லிருக் காரு வெங்கடேசன் செல்வராஜ். பாவமே..!

“ஆஃபர் போட்ட கடைகளில் துணி எடுப்பது, வீட்டில் இனிப்பு காரம் செய்வது... தெரிந்தவர்கள் மூலமாகச் சிவகாசியிலிருந்து பட்டாசு வரவைப்பது... இப்படிதான்...”னு ஜாலி டிப்ஸ் கொடுத்துருக்காங்க திவ்யா. நோட் பண்ணுங்கப்பா... நோட் பண்ணுங்கப்பா!

தீபாவளி ஷாப்பிங் செலவை 
எப்படிக் குறைக்கலாம்?

“தீபாவளி முடியும் வரை அனைவரும் வீட்டுக்குள்ளேயே தங்களைத் தனிமைப் படுத்திக்கொள்ள வேண்டும். செலவு மிச்சம்”னு சொல்லிருக்காரு பவர் மணி! என்னா ஒரு வில்லத்தனமான யோசனை..!

“பட்டாசு வெடிப்பதை நிறுத்தி சுகா தாரத்துக்கும் நிதி ஆதாரத்துக்கும் வலு சேர்க்கலாம். தேவையான அளவு மட்டும் பலகாரங் கள் செய்யலாம். துணிக் கடைக்குச் சரியான பட்ஜெட்டுடன் செல்லலாம்...”னு பிராக்டிக்கல் ஐடியா தந்திருக்காரு பிரதீப். சூப்பர் ப்ரோ..!

“தீபாவளி செலவுகளைப் பார்க்கும்போது... கிருஷ்ண பரமாத்மா, நரகாசுரனைக் கொல்லாம மன்னிச்சு விட்டிருக்கலாம்...”னு கமென்ட் பண்ணிருக்காரு முத்துக்குமார். புரியுது, தீபாவளி செலவால நீங்க நொந்து போயிருக்கீங்கன்னு..!

“தீபாவளிக்குமுன், தீபாவளிக்குப் பின் பத்து நாள் ஊரில் இருக்கக் கூடாது”னு சொல்லிருக் காங்க ஜெனிஃபர். வுடு ஜூட் அமெரிக்காவுக்கு!

“எல்லா ஆன்லைன் ஷாப்பிங் ஆப்பையும் டெலீட் பண்ணப்போறேன்”னு சொல்லிருக் காரு மணி. உங்க ஐடியாவுக்கு ஒரு லைக்..!

“கொஞ்சம் செலவுதான் பண்ணுவோமே... சந்தோசத்த குடுக்குதே அந்தச் செலவு...”னு பாசிட்டிவ்வா பீல் பண்ணி சொல்லிருக்காரு சரவணகுமார். ஹேப்பி தீபாவளி அண்ணாத்த..!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு