Published:Updated:

IPO வெளியிடும் முடிவு, ₹10,600 கோடி அபராதம் விதித்த அமலாக்கத்துறை; நெருக்கடியில் ஃப்ளிப்கார்ட்!

ஃப்ளிப்கார்ட்
ஃப்ளிப்கார்ட்

இந்தியாவில் அமேசானின் வர்த்தகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் தவித்த ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் பெரும் பகுதியிலான பங்குகளை கடந்த 2018-ம் ஆண்டு 16 பில்லியன் டாலர் (தோராயமாக ரூ. 1,18,720 கோடி) கொடுத்து அமெரிக்காவின் வால்மார்ட் வாங்கியது!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இந்தியாவின் மிகப் பெரிய ஆன்லைன் நிறுவனமான ஃப்ளிப்கார்ட் நிறுவனம் மீது ரூ.10,600 கோடி அபராதம் விதித்து நோட்டீஸ் ஒன்றை அமலாக்கத் துறை அனுப்பியிருப்பது வர்த்தக உலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால், இதுவரை இவ்வளவு பெரிய தொகையை அபராதமாக எந்தவொரு ஆன்லைன் நிறுவனத்திற்கும் விதித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

ஆன்லைன் மூலம் ஷாப்பிங் செய்யும் பழக்கம் நம் மக்களிடையே கடந்த சில ஆண்டுகளாக வேகமாக அதிகரித்து வருகிறது. கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில், கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நேரம் ஆன்லைன் மூலம் ஷாப்பிங் செய்தவர்களின் எண்ணிக்கைதான் அதிகம். குறிப்பாக அமேசான், ஃப்ளிப்கார்ட் ஆகிய இரண்டு நிறுவனங்கள்தான் இச்சந்தையில் ஆதிக்கம் செலுத்துகின்றன.

இந்தியாவில் அமேசானின் வர்த்தகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் தவித்த ஃப்ளிப்கார்ட் நிறுவனம், தனது நிறுவனத்தின் பெரும் பகுதியிலான பங்குகளை அமெரிக்காவின் வால்மார்ட்டுக்கு விற்க முடிவு செய்தது. இதன்படி, கடந்த 2018-ம் ஆண்டு 16 பில்லியன் டாலர் (தோராயமாக ரூ. 1,18,720 கோடி) கொடுத்து வால்மார்ட் நிறுவனம் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தை வாங்கியது.

ஃப்ளிப்கார்ட்
ஃப்ளிப்கார்ட்
அதானியுடன் கைகோத்த ஃப்ளிப்கார்ட்... பின்னணி என்ன?

ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் பங்குகளை வால்மார்ட் நிறுவனம் வாங்கியபிறகு, வெளிநாடுகளிலிருந்து அதிகளவு முதலீடுகள் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்துக்கு வரத் தொடங்கின. ஆனால், இந்த முதலீடுகள் அரசின் சில விதிமுறைகளை மீறி வந்திருப்பதாகக் கண்டறிந்து, அது குறித்து அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது . இதனையடுத்து, ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் மீது 1.35 பில்லியன் டாலர், அதாவது கிட்டத்தட்ட ரூ.10,600 கோடி அபராதம் விதித்துள்ளது.

இந்தியாவில் அந்நிய முதலீடுகளுக்கான கொள்கைகளை ஃப்ளிப்கார்ட் மீறியுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் காரணமாக ஃபெமா (The Foreign Exchange Management Act -FEMA) விதிமுறைகளின்படி, ஃப்ளிப்கார்ட் மீது நடவடிக்கை எடுத்திருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

ஃப்ளிப்கார்ட் மட்டுமில்லாமல், ஆதித்யா பிர்லா ஃபேஷன் அண்டு ரீடெய்ல் உள்ளிட்ட 10 இ-காமர்ஸ் வலைதளங்களின் மீதும் சட்டப்படி விசாரணை துவங்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமலாக்கத்துறை
அமலாக்கத்துறை
Photo: Twitter/ @dir_ed
அமேசான், ஃப்ளிப்கார்ட் ஆன்லைன் ஷாப்பிங்... உஷார் டிப்ஸ்! - ஏமாற்றத்தைத் தவிர்க்கும் எளிய வழிகள்!

இந்த விவகாரத்தில் அபராதம் விதிக்கப்பட்ட பின்னரும் அதற்கு ஃப்ளிப்கார்ட் நிறுவனம் சரியான விளக்கம் அளிக்கவில்லை எனவும், அபராதத் தொகையைச் செலுத்தவில்லை எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்து ஃப்ளிப்கார்ட் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸுக்கு 90 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஃப்ளிப்கார்ட் நிறுவனம் தரப்பிலிருந்து இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

இதற்கிடையில் ஃபிளிப்கார்ட் நிறுவனம், பங்குச் சந்தையில் ஐ.பி.ஓ வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நடப்பு நிதி ஆண்டின் நான்காவது காலாண்டில் ஐ.பி.ஓ வெளியிடப்படும் என்ற தகவல் வெளியாகியிருக்கும் இந்தநேரத்தில், இந்நிறுவனத்தின் செயல்பாடுகள் மீது அமலாக்கத்துறையின் பார்வை விழுந்திருப்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக உள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு