Published:Updated:

``WFH முறையில் எவ்வித சிரமமும் தமிழகத்தில் இல்லை!" - எடப்பாடி எக்ஸ்க்ளூசிவ் பேட்டி

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

தமிழகத் தொழில் வளர்ச்சி குறித்து நமக்கு சிறப்புப் பேட்டி ஒன்றைத் தந்தார், முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதிலிருந்து...

``கொரோனா சூழலில் சிறு, குறு தொழில்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தப் பாதிப்புகளிலிருந்து மீண்டு வர அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் என்ன?"

``இந்த நிறுவனங்களை, பாதிப்பிலிருந்து விரைவில் மீட்டெடுக்க தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் கொரோனா நிவாரணம் மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தை (Covid Relief and Upliftment Scheme - CORUS) செயல்படுத்த தமிழ்நாடு அரசு ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதுவரை இத்திட்டத்தில் 993 பயனாளிகளுக்கு ரூ.134 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அவசரகால கடன் உதவித் திட்டத்தின் (Emergency Credit Line Guarantee Scheme - ECLGS) மூலம் இதுவரை தமிழ்நாட்டில் ரூ.7,518.41கோடி பிணையில்லாக் கடன் 2,40,045 குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. நிறைவடையும் தருவாயில் இருந்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மத்திய அரசின் துணை கடன் திட்டத்தின் கீழ் மாவட்ட தொழில் மையம் மற்றும் சிட்கோவால் 938 நிறுவனங்களுக்கு ரூ.212.76 கோடி ரூபாய் கடன் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிலுவையில் உள்ள முதலீட்டு மானியம் உள்ளிட்ட பல்வேறு மானியத் திட்டங்களின்கீழ் ரூ.112 கோடி பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. சொத்து வகை மற்றும் மின் கட்டணம் (Deferral of Property Tax & EB Charges) செலுத்த மே 22 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.''

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

``ஊரடங்கு காரணமாகப் பலரும் வீட்டிலிருந்தே வேலை செய்யும் நிலையில், சிறுநகரங்களில் மின்சாரமும் இணைய வசதியும் முழுநேரமும் கிடைப்பதில் சிக்கல் உள்ளதே!"

``மின்சாரத்தைப் பொறுத்தவகையில் தமிழ்நாடு ஒரு மின் மிகை மாநிலம். அதேபோல, இணையதள வசதிகளும் தமிழ்நாட்டில் பரவலாக உள்ளன. ஆதலால், ஊரடங்கு காரணமாக வீட்டிலிருந்தபடியே வேலை செய்யும் நடைமுறையைப் பின்பற்றுவதில் எவ்வித சிரமமும் நம் மாநிலத்தில் இல்லை. தென்காசி மாவட்டத்தில் ரூ.1,500 கோடி முதலீட்டில் 5,000 நபர்களுக்கு வேலை வாய்ப்புடன் ஒரு தகவல் தொழில்நுட்ப மேம்பாட்டுத் திட்டத்தை, ஜோஹோ (ZOHO) நிறுவனம் வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருவதை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.''

> கொரோனா தொற்றுப் பரவல் மற்றும் தொடர்ச்சியான ஊரடங்கு சூழலிலும் நிறைய தொழில் முதலீடுகளைத் தமிழக அரசு ஈர்த்தது எப்படி?

> 2020-ல் இதுவரை எத்தனை ஒப்பந்தங்கள் கையொப்பம் ஆகியுள்ளன; எப்போது செயல்பாட்டுக்கு வரும்?

> சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் எந்த மாதிரியான தொழில்களுக்கு முதலீடுகள் வந்துள்ளன, இந்தத் தொழிற்சாலைகள் எந்தெந்த மாவட்டங்களில் அமைய உள்ளன?

> அசெம்ப்ளிங் துறை மூலமாகத் தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை அதிகரிக்க முடியும் என்கிறார்கள் நிபுணர்கள். தமிழக அரசு இதில் எந்தளவுக்கு கவனம் செலுத்துகிறது?

> ஆப்பிள் நிறுவனம் இங்கு உற்பத்தியை ஆரம்பித்துள்ளது. இதுபோல வேறு என்னென்ன நிறுவனங்கள் வரலாம்?

> தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் இந்தியாவில் நம்பர் 1 என்ற இடத்தை தமிழ்நாடு பிடிக்க எந்த அளவுக்கு வாய்ப்புள்ளது?

> தமிழகத்தில் பாதுகாப்புத் தொழில் பெருந்தடம் (Defence Industrial Corridor) ஏற்படுத்தப்படும் என்று கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. அதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் என்ன?

> இதுவரை நடைபெற்றுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் எவ்வளவு முதலீடுகள் வந்துள்ளன?

> தமிழக்கத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியிருக்கிறார். அதற்கு தங்கள் பதில் என்ன?

- இந்தக் கேள்விகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்துள்ள விரிவான பதில்களை நாணயம் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > தமிழ்நாடு நம்பர் 1... சாதித்தது எப்படி? - விளக்கும் எடப்பாடி! https://bit.ly/3lRowT4

தமிழ்நாடு நம்பர் 1... சாதித்தது எப்படி? - விளக்கும் எடப்பாடி! https://bit.ly/3lRowT4

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு