Published:Updated:

கொரோனா காலத்தில் சுயதொழில் தொடங்க விருப்பமா? - வெற்றிக்கான 8 வழிமுறைகள்

சுயதொழில்: பிசினஸ் புதிய அனுபவமாக இருந்தால், அதிக அளவு முதலீடுகளைத் தவிர்க்கலாம். உங்களின் பிசினஸ் ஓராண்டுக்குள் குறிப்பிட்ட வளர்ச்சியை எட்டும் சூழல் உருவானால் அப்போது முதலீட்டை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

'எல்லாரும் பிசினஸ் தொடங்குகிறார்கள்; எனவே, நானும் தொடங்குகிறேன்', 'வேலை போய்விட்டது. வேறு வழியில்லாமல் இப்போது இருக்கும் குடும்பச் சூழலைச் சமாளிக்க பிசினஸ் தொடங்குகிறேன்' என்று அவசர அவசரமாக முதலீடு செய்து, தொழில் தொடங்கக் கூடாது.

நீங்கள் தொடங்கும் தொழில் பற்றிய தெளிவான புரிந்துகொள்ளலை முதலில் வளர்த்துக்கொள்ளுங்கள். அதிலுள்ள நுணுக்கங்களை அறிந்து வைத்திருப்பது அவசியம். கூடுமானவரை ஆடம்பரத் தேவைகளின்றி அடிப்படைத் தேவைகளுக்கான தளமாக உங்கள் பிசினஸ் இருப்பது நல்லது.

வெற்றிக்கான வழிமுறைகள்

* தொழில் தொடங்க வேண்டும் என்றவுடன், அதிக அளவு முதலீட்டுடன், உழைப்பு சார்ந்ததாகத்தான் இருக்க வேண்டும் என்று எண்ணாமல், லேப்டாப், போன் மட்டுமே முதலீடு செய்யும் வகையில் உங்களின் திறன் சார்ந்து டிஜிட்டல் பரிணாமத்தில்கூட இருக்கலாம்.

* நீங்கள் தொடங்கும் தொழிலில் அனுபவம் எதுவும் இல்லையெனில், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மூலம் பயிற்சிகள் எடுத்துக்கொண்டு அதன் பிறகு தொழிலுக்கான முதலீட்டுக்கு ஏற்பாடு செய்யத் தொடங்குங்கள்.

* இப்போதிருக்கும் சூழலுக்கேற்ப ஆன்லைன், ஆஃப்லைன் என இரண்டு தளங்களிலும் பரந்து விரியும் தன்மையுள்ள தொழிலாக இருந்தால் எளிதில் வெற்றி பெற முடியும்.

* பிசினஸ் புதிய அனுபவமாக இருந்தால், அதிக அளவு முதலீடுகளைத் தவிர்க்கலாம். உங்களின் பிசினஸ் ஓராண்டுக்குள் குறிப்பிட்ட வளர்ச்சியை எட்டும் சூழல் உருவானால் அப்போது முதலீட்டை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

* புதுமையான முயற்சியாகவும், மக்களுக்குத் தேவைப்படும் ஒன்றாகவும் இருந்தால் எளிதில் வெற்றி பெற முடியும்.

சுயதொழில்
சுயதொழில்

* உங்களால் தொடர்ந்து தொழிலை நடத்தும் சூழல் இல்லையென்றால், அதை விற்கும் சூழல் உருவாகும். அப்போது உங்களின் பிசினஸ் நல்ல விலைக்குப்போகும் ஒன்றாகவும், மதிப்பு சார்ந்த ஒன்றாகவும் இருக்கும்படி பார்த்துக்கொள்வது நல்லது.

* உங்கள் தொழிலுக்கு அனுபவமிக்க தொழில்நுட்ப ஆலோசகர்களை நியமித்து, அவர்களின் வழிகாட்டுதலுடன் இயங்குவது நல்லது.

* உங்கள் தொழிலுக்கான தேவைகள் எங்கு இருக்கிறதோ, அங்கு தொழிலை தொடங்க வேண்டும்.

- கொரோனாநோய்த் தொற்றால் உலகமே கடுமையான பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது. சிறிய நிறுவனங்கள் தொடங்கி மிகப்பெரிய நிறுவனங்கள் வரை நிதி நெருக்கடியையும், இடர்ப்பாடுகளையும் சந்தித்துள்ளன. நிறுவனத்துக்கு ஏற்படும் நஷ்டத்தைத் தவிர்க்க, பெரும்பாலான நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையைக் கையில் எடுத்துள்ளன. இதனால் இந்தியாவில் கடுமையான வேலையில்லாத் திண்டாட்டம் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

பெரும்பாலானோர் சுயதொழில் தொடங்க ஆர்வம் காட்டிவருகின்றனர். நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள இந்தச் சூழலில், சுயதொழிலுக்கான தேவைகள், புதிய வாய்ப்புகள் குறித்து விவரிக்கிறார், தொழில்முனைவோர்களுக்கான ஆலோசகரும், கேப்மாஸ் நிறுவனத்தின் நிறுவனருமான சிவகுமார்.

இதற்கான திட்டமிடல் குறித்து தெளிவாக வழிகாட்டும் அவர், தற்போதைய சூழலில் சுயதொழில் தொடங்குவது ஆரோக்கியமான ஒன்றா என்பது குறித்தும் விரிவான பதிலைத் தந்திருக்கிறார். இவற்றை முழுமையாக நாணயம் விகடன் இதழில் வாசிக்க இங்கே க்ளிக் செய்க... https://bit.ly/2WSTf7F > இனி சுயதொழிலே எதிர்காலம்! - உருவாகும் வாய்ப்புகள்..! https://bit.ly/2WSTf7F

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு