Published:Updated:

“மின் கட்டண உயர்வு ஜவுளித் துறையை பாதிக்கும்!”

ரவிசாம்
பிரீமியம் ஸ்டோரி
ரவிசாம்

மின் கட்டண உயர்வு

“மின் கட்டண உயர்வு ஜவுளித் துறையை பாதிக்கும்!”

மின் கட்டண உயர்வு

Published:Updated:
ரவிசாம்
பிரீமியம் ஸ்டோரி
ரவிசாம்

தமிழகத்தில் மின் கட்டண உயர்வு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த மின் கட்டண உயர்வால் பாதிக்கப்படும் முக்கிய தொழில்களில் ஜவுளித் தொழிலும் ஒன்று. இது குறித்து தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத் (சைமா) தலைவர் ரவிசாமுடன் பேசினோம். அவர் நம்மிடம் சொன்னதாவது...

“எரிசக்தித் துறையைத் தொழில்துறை ஆதரவுடன் மாற்றும் வகையில் பல்வேறு கொள்கை சார்ந்த முடிவுகளை முதல்வர் எடுத்துவருவது பாராட்டத்தக்கது. ஆனால், தமிழக அரசு இப்போது நடைமுறைப்படுத்தி இருக்கும் மின் கட்டண உயர்வு மிகப் பெரிய உயர் அழுத்த மின் நுகர்வோராக இருக்கும் தமிழக ஜவுளித் தொழிலைக் கடுமையாக பாதிக்கும். குஜராத், மகாராஷ்டிரா, தெலங் கானா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள பல்வேறு சலுகைகளால், அங்குள்ள நூற்பாலை கள் தங்களின் திறனை அதிகரித்து, ஒரு கிலோ நூலை ரூ.10 முதல் ரூ.15 வரை குறைவான விலைக்கு விற்பனை செய்துவருகின்றன.

ரவிசாம்
ரவிசாம்

இந்தச் சூழலில், தற்போது வந்துள்ள மின் கட்டண உயர்வு தமிழக ஜவுளித் தொழிலின் போட்டியிடும் திறனை பாதிக்கும். மேலும், தமிழகத்தில் ஒரு கிலோ நூல் விலை ரூ.5 வரை உயரும். 25,000 கதிர்கள் கொண்ட நூற்பாலைக்கு மின் கட்டணம் ஆண்டுக்கு ரூ.1.2 கோடி வரை அதிகரிக்கும். ஏற்கெனவே பருத்தி விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டால் ஜவுளித் தொழில் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. அதனால் நிலைமை சரியாகும் வரையிலாவது மின் கட்டண உயர்வை அரசு தள்ளிவைத் திருக்கலாம்.

தமிழக ஜவுளித் தொழிலின் உலகளாவிய போட்டித்திறனை நிலைநிறுத்த வேண்டும் எனில், வரும் ஆண்டுகளில் மின் கட்டணம் உயர்வதைத் தடுக்கவும், மின் கட்டணத்தைக் குறைக்கவும் அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை” என்றார் ரவிசாம்.

தமிழக அரசு பரிசீலிக்குமா?