Published:Updated:

“ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்தான் எதிர்காலம்!” சிந்திக்க வைத்த சி.ஐ.ஐ கருத்தரங்கம்

சி.ஐ.ஐ கருத்தரங்கம்
பிரீமியம் ஸ்டோரி
சி.ஐ.ஐ கருத்தரங்கம்

ஸ்டார்ட்அப்

“ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்தான் எதிர்காலம்!” சிந்திக்க வைத்த சி.ஐ.ஐ கருத்தரங்கம்

ஸ்டார்ட்அப்

Published:Updated:
சி.ஐ.ஐ கருத்தரங்கம்
பிரீமியம் ஸ்டோரி
சி.ஐ.ஐ கருத்தரங்கம்

கடந்த வாரம் புதன்கிழமை அன்று சென்னை தாஜ் கோரமண்டலில், சி.ஐ.ஐ அமைப்பின் தென்னிந்திய அளவிலான ஆண்டுவிழா கருத்தரங்கம் கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சி.ஐ.ஐ தென்னிந்திய பிரிவின் தலைவர் சி.கே.ரங்கநாதன், டாடா ஸ்டீல் லிமிடெட் நிறுவனத்தின் சி.இ.ஓ டி.வி.நரேந்திரன், ஜோஹோ கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சி.இ.ஓ தர் வேம்பு, ஹிந்துஜா குழுமத்தின் துணைத் தலைவர் மற்றும் சி.ஐ.ஐ அமைப்பின் முன்னாள் பிரசிடென்ட் ஆர்.ஷேசாயி, டி.வி.எஸ் சப்ளை செயின் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் சி.ஐ.ஐ அமைப்பின் முன்னாள் தலைவர் ஆர்.தினேஷ், காவேரி ஹாஸ்பிடல்ஸ் நிறுவனர் மற்றும் நிர்வாகத் தலைவர் எஸ்.சந்திரகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு தொழில்துறை சார்ந்த பல விஷயங்களைக் கலந்துரை யாடினார்கள்.

“ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்தான் எதிர்காலம்!”  சிந்திக்க வைத்த சி.ஐ.ஐ கருத்தரங்கம்

‘பாரம்பர்யத்திலிருந்து புதிய யுகப் பொருளாதாரத்துக்கான பயணம்’ என்கிற தலைப்பில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியை சி.கே.ரங்கநாதன் மற்றும் சி.ஐ.ஐ அமைப்பின் டைரக்டர் ஜெனரல் சந்திரஜித் பானர்ஜி ஆகியோர் நடத்தினார்கள். இந்த நிகழ்ச்சியின் மையக்கரு ‘நடப்பு ஆண்டில் தென் தமிழகத்தின் வளர்ச்சி எப்படி இருக்கும், எப்படி இருக்க வேண்டும்’ என்பதாக இருந்தது. இந்த கலந்துரையாடலில் முதலில் பேசிய டி.வி.நரேந்திரன், “இன்றைய நிலையில் டெக்னிக்கல் கட்டமைப்புகள் நன்றாக இருக்கின்றன. இதனால் சிறிய கிராமங்களுக்கு கூட அனைத்து துறை சார்ந்த சேவைகளை நிறுவனங்களால் தரமுடிகிறது.

கடந்த கோவிட் காலங்களில் அனைத்து துறை சார்ந்த நிறுவனங் களும் பெரும் சவால்களைச் சந்தித்தன. ஆனால், அந்தக் காலகட்டத்தில் நடந்த மிகப் பெரிய மாற்றம் என்றால், யாரும் எங்கிருந்து வேண்டுமானாலும் வேலை பார்க்கலாம் என்கிற அளவுக்கு அனைத்து துறை சார்ந்த நடவடிக்கைளும் அப்கிரேடு செய்யப்பட்டன. டெலிகாம் மற்றும் தொழில்நுட்ப கட்டமைப்புகள் வலுவாக இருந்த காரணத்தால், கிராமப்புறங்களில் இருந்துகூட ஊழியர்களால் வேலைபார்க்க முடிந்தது” என்று பேசி முடித்தார்.

அடுத்து பேசிய ஶ்ரீதர் வேம்பு, “கிராமப்புற மக்களுக்கு இயற்கை யாகவே திறமைகள் இருக்கின்றன. ஆனால், அந்தத் திறமைகளை வெளிக்காட்டுவதற்கான வாய்ப்பு கிடைப்பதில்லை. அங்கு இண்டஸ்ட்ரி கட்டமைப்புகளை வர்த்தக நிறுவனங்கள் உருவாக்கும் போது, அவர்களுடைய அடிப்படை வாழ்க்கையை அது மாற்றும். அதுமட்டுமல்லாமல் தொழில் வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும்.

“ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்தான் எதிர்காலம்!”  சிந்திக்க வைத்த சி.ஐ.ஐ கருத்தரங்கம்

எதிர்வரும் காலங்களில் முதலீடு மற்றும் வேலைக்கான திறன் மேம்பாட்டில் நிறுவனங்கள் சவால்களைச் சந்திக்க வேண்டி வரலாம். ஆனால், அதை முன்கூட்டியே அறிந்துகொண்டு நிறுவனங்கள் செயல்பட்டால் அந்த சவாலைக்கூட சாதனையாக மாற்ற முடியும். இன்றைய நிலையில் பொறியியல் கல்லூரிகள் அனைத்து ஊர்களிலும் இருக்கின்றன. ஆனால் இண்டஸ்ட்ரிகள் எல்லா இடத்திலும் இல்லை. இண்டஸ்ட்ரிகளை அனைத்து இடங் களிலும் உருவாக்கும்போதுதான் படித்து முடித்த மாணவர்களுக்கு, தொழில்துறை சார்ந்த திறன்களை அவர்களுடைய ஊர்களிலேயே வழங்க முடியும். திறமை இருப்பவர்களுக்கு அதைப் பட்டைதீட்டிக்கொள்ளும் இடமாக இண்டஸ்ட்ரிகள் செயல்பட்டால் தொழில் வளர்ச்சியின் வேகம் அளவிட முடியாததாக இருக்கும்” என்றார்.

“ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்தான் எதிர்காலம்!”  சிந்திக்க வைத்த சி.ஐ.ஐ கருத்தரங்கம்

பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணா எல்லா பேசியபோது, “ஒரு நிறுவனம் வளர்ச்சியை நோக்கி நகர்வதற்கு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு மிகவும் முக்கியம். உலகமே கோவிட் 19 வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த நேரத்தில், பாரத் பயோடெக் நிறுவனத்தின் ஆர் அண்ட் டி குழு பல வருடங்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய வேலையை, இரவு பகலாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டு இந்தியாவில் முதன்முதலாக, கொரோனாவுக்கு எதிரான ‘கோவாக்சின்’ தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடித்தது.

அந்தக் காலகட்டம் எங்களுடைய நிறுவனத்துக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. எவ்வளவு சீக்கிரமாக ‘கோவாக்சின்’ தடுப்பூசியை நம்மால் கண்டு பிடிக்க முடியும் என்பதில் மட்டுமே நாங்கள் கவனத்தைச் செலுத்தி செயல்பட்டோம். நம்பிக்கையுடன் உழைத்த காரணத்தால், எங்களுடைய தயாரிப்பு அரசால் அங்கீகரிக்கப்பட்டு சந்தைப்படுத்தப்பட்டது. மக்களின் உயிரைக் காக்கும் ஒரு விஷயத்தில் எங்களுடைய பங்கு இருந்தது என்பதே எங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி. இது அனைத்தும் ரிசர்ச் அண்ட் டெவலப்மென்டால் மட்டுமே சாத்தியமானது.

இன்றைய இளைஞர்கள் அறிவார்ந்தவர்களாக இருக்கிறார்கள். தென் தமிழகத் தைப் பொறுத்தவரை தங்களின் பிள்ளைகள் படிக்க வேண்டும், அதன் மூலம் கிடைக்கும் கல்வி அறிவுதான் நாளை அவர்களைத் தலைமை இடத்துக்குக் கொண்டு செல்லும் என பெற்றோர்கள் நினைக்கிறார்கள். அறிவார்ந்த இளைஞர்களால் இந்தியா நிச்சயம் ஒளிரும் என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. அதே போல இந்தியா வின் எதிர்காலம் ‘ஸ்டாட்ர்அப்’ நிறுவனங்களின் கைகளில் இருக்கிறது. இன்றைய நிலையில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை ஆரம்பிப்பவர்கள், தனித்துவ மான சிந்தனைகளுடன் ஆரம்பிக்க வேண்டும். நீண்ட கால நோக்கில் அந்த நிறுவனத்தை அமைக்க வேண்டும். அப்போது தான் ஜெயிக்க முடியும்” என்றார்.

இப்படி பல்வேறு தலைப்பு களில் நடந்த கருத்தரங்குகள், பலநூறு பார்வையாளர்களின் கர ஒலியுடன் இனிதே நிறைவடைந்தது.