Published:Updated:

`ரூ.45 லட்சம் டேர்ன் ஓவர்!' - கருப்பட்டி கடலை மிட்டாய் பிசினஸில் கலக்கும் இன்ஜினீயர்

கருப்பட்டி கடலை மிட்டாய்
கருப்பட்டி கடலை மிட்டாய்

``ஒவ்வொரு முறையும் தோல்விதான். ஆனா, விடாம முயற்சி செஞ்சோம். சில மாசத்துக்குப் பிறகு, அம்மாவின் கைமணத்துல கருப்பட்டி கடலை மிட்டாய் பக்காவா வந்திருச்சு. அப்போவே அதற்கு `மதர் வே'ன்னு பெயர் வச்சேன்”

``பணம் சம்பாதிக்கிறது முக்கியம்தான். ஆனால், நமக்குப் பிடிச்ச வேலையைச் செஞ்சு பணம் சம்பாதிக்கிறது அதைவிட முக்கியம். ஏன்னா, நாம பணம் சம்பாதிக்கிறதே சந்தோஷமா இருக்கத்தானே..." - தத்துவமாகப் பேசும் ஸ்டாலின், இன்ஜினீயரிங் வேலையை உதறிவிட்டு `கருப்பட்டி கடலைமிட்டாய்' தயாரிப்பில் கலக்கிக்கொண்டிருக்கிறார். ஓர் அதிகாலையில் நாம் அவரைச் சந்தித்தோம்.

``எனக்கு சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி. அப்பா போஸ்டல் கிளர்க்கா இருந்தவர். மிடில் கிளாஸ் ஃபேமிலிக்கே உரிய ஆசைகள் எங்க ஃபேமிலிக்கும் இருந்ததால, என்னை இன்ஜினீயரிங் சேர்த்துவிட்டாங்க. ஆனா, எனக்கு அதுல பெருசா ஈடுபாடு இல்லை. ரூ.6 லட்சம் கட்டி படிக்க வைக்கிறாங்க என்ற ஒரே காரணத்துக்காகப் பல்லைக் கடிச்சுக்கிட்டு படிச்சு பாஸ் பண்ணிணேன்.

படிப்பு முடிஞ்சதும் கோயம்புத்தூர்ல உள்ள எலெக்ட்ரிக் பைக் கம்பெனியில ரிசர்ச் & டெவலப்மென்ட் பிரிவுல வேலைக்குச் சேர்ந்தேன். என்னுடைய ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட் வொர்க்கை என் கண்ணால பார்க்க ஆசைப்பட்டேன். ஆனா, அது நடக்கலை. அதனாலேயே கை நிறைய சம்பளம் கிடைச்சும் அந்த வேலை எனக்குப் பிடிக்கலை. ஒருவித வெறுமையோடையும் மன அழுத்தத்தோடையுமே இருந்தேன்" என்றவர் அதன்பின் வெற்றியை நோக்கிக் கடந்து வந்த பாதையை நிதானமாக விவரித்தார்.

கருப்பட்டி கடலை மிட்டாய்
கருப்பட்டி கடலை மிட்டாய்

"...ஒவ்வொரு முறையும் தோல்விதான். ஆனா, விடாம முயற்சி செஞ்சோம். சில மாசத்துக்குப் பிறகு, அம்மாவின் கைமணத்துல கருப்பட்டி கடலை மிட்டாய் பக்காவா வந்திருச்சு. அப்போவே அதற்கு `மதர் வே'ன்னு பெயர் வச்சேன்.

அடுத்ததா அதை எப்படி மார்க்கெட் பண்றதுன்னு யோசிக்கும்போது குக்கூ பள்ளிக்கூடத்துல உள்ள ஒரு அண்ணா அழகான பேக்கிங்கை வடிவமைச்சுக் கொடுத்தார். என்னுடைய புராடக்ட் இந்தளவுக்கு ரீச் ஆனதுக்கு மிகப்பெரிய காரணம் பேக்கிங்தான்.

அதுக்குப் பிறகு மார்க்கெட்டிங். இதை எங்கே போய் விற்கணும்னு எனக்குத் தெரியலை. ஃபேஸ்புக்ல ஒரு பேஜ் ஆரம்பிச்சு என்னுடைய முயற்சிகளைப் பத்தி எழுதினேன். அதைப் படிச்சுட்டு நிறைய பேர் கேட்டாங்க. கூரியர்ல அனுப்பி வெச்சேன். அவங்களுக்கு இந்த டேஸ்ட் ரொம்ப பிடிச்சுப்போக, அவங்களுக்கு பக்கத்துல இயற்கை அங்காடி உரிமையாளர்களிடம் நான் தயாரிக்கிற கருப்பட்டி கடலை மிட்டாயை வாங்கி விற்பனை செய்யுங்கன்னு ரெஃபர் பண்ணாங்க. அதன் தொடர்ச்சியா கடைகளுக்கும் அனுப்ப ஆரம்பிச்சோம்.

அடுத்தகட்டமாக ஒரு வெப்சைட் ஓப்பன் பண்ணி இந்தியா முழுவதும் விற்பனையை ஆரம்பிச்சேன்... இப்ப வருஷத்துக்கு 45 லட்சம் ரூபாய் டேர்ன் ஓவர் பண்றேன்..." என்றார்.

ஸ்டாலின் சந்தித்த போராட்டங்கள், கருப்பட்டி கடலை மிட்டாய் பிசினஸ் ஐடியா உருவான கதை, அதற்கு அலைந்து திரிந்த முயற்சிகள் அனைத்தும் மலைக்கவைப்பவை. அந்தப் பயணத்துடன் கூடிய முழுமையான கட்டுரையை நாணயம் விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க - https://bit.ly/3itRe9B

கருப்பட்டி கடலை மிட்டாய்... கலக்கும் இன்ஜினீயர்! - ஜெயிக்க வைத்த வித்தியாசம்! https://bit.ly/3itRe9B

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு