கொரோனாவுக்கு நடுவிலும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்திருக்கிறது ரிலையன்ஸ் ஜியோ. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் பிரபல சமூக வலைதள நிறுவனமான ஃபேஸ்புக் செய்திருக்கும் முதலீடுதான் இதற்கு காரணம்.

ஜியோவின் 9.9 சதவிகிதப் பங்குகளை 43,574 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறது ஃபேஸ்புக். தற்போது உலகின் மிக முக்கிய டெக் நிறுவனமாகக் கருதப்படும் ஃபேஸ்புக், இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ஜியோவுடன் கூட்டணி அமைத்திருப்பதன் பின்னணியில் உள்ள திட்டம் என்ன?

2014-ம் ஆண்டில் வாட்ஸப்பை வாங்கிய பிறகு ஃபேஸ்புக் செய்திருக்கும் மிகப்பெரிய முதலீடு இதுவாகத்தான் இருக்கும். இதற்கு முக்கியமாக நான்கு காரணங்கள் இருக்கலாம்.

சூப்பர் ஆப் 2016-ம் ஆண்டில் அறிமுகமாகும்போதே, ஜியோ வெறும் டெலிகாம் நிறுவனமாக மட்டும் இருக்கப்போவதில்லை; ஒரு முழு டெக் நிறுவனமாக உருவெடுக்க முயற்சி செய்கிறது என்பது தெளிவாகத் தெரிந்தது. ஆனால், அந்தத் திட்டத்தில் முழுமையான வெற்றி ஜியோவுக்குக் கிடைத்ததா என்பது கேள்விக்குறிதான். இன்று ஜியோவின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 40 கோடியை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. ஆனால், டெலிகாம் சேவையுடன் வந்த மற்ற சேவைகளும் (Jio Cinema, Jio Money, Jio TV, Jio Chat) அதே அளவுக்கு பிரபலமடையவில்லை. இவை அனைத்தும் டெலிகாம் சேவைக்கு துணைபுரியும் சேவைகளாகவே இன்னும் இருக்கின்றன. இவற்றிலிருந்து சொல்லிக்கொள்ளும்படி தனிவருமானம் ஏதுமில்லை என்றே கூறப்படுகிறது. இதுபோக AI, IoT போன்ற டிஜிட்டல் தொழில்நுட்பங்களிலும் அதிக முதலீடு செய்திருக்கிறது ஜியோ. இவற்றையெல்லாம் முறைப்படுத்த இந்த ஃபேஸ்புக் கூட்டணி உதவும்.

ஃபேஸ்புக் தரப்பை எடுத்துக் கொண்டால், இந்தியாவில் சுமார் 40 கோடி வாட்ஸப் பயனாளர்களைக் கொண்டுள்ளது. வாட்ஸப் சேவைக்காக இதுவரை பயனாளர்களிடம் பணம் எதுவும் வசூலிக்கப் படவில்லை. உள்ளே விளம்பரங்களும் வராது. இதனால் இத்தனை கோடி பயனாளர்கள் இருந்தும் வாட்ஸப்பில் வருமானம் என்பது குறைவாகவே இருக்கிறது. இந்த இடத்தில்தான் உதவப்போகிறது ஜியோ. முக்கிய நகரங்களில் சமீபத்தில் அறிமுகமானது ஜியோவின் ஆன்லைன் வர்த்தக சேவையான `ஜியோ மார்ட்’ (Jio Mart). கொரோனா பிரச்னை தீர்ந்த பிறகு இது பரபரவென விரிவடையும்.

அமேசான், ஃப்ளிப்கார்ட் போல் அல்லாமல், அருகில் இருக்கும் சிறிய சிறிய கடைகளை வாடிக்கை யாளர்களுடன் இணைக்கும் ஜியோ மார்ட். இந்த இணைப்பை ஏற்படுத்த வாட்ஸப் பயன்படுத்தப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, தேவையானதை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய முடியும். ‘வாட்ஸப் பே’ என்னும் UPI பணப்பரிவர்த்தனை சேவையும் விரைவில் இந்தியாவில் அனைவருக்கும் கிடைக்கவிருக்கிறது. இதனால் சீனாவின் `WeChat’ போல் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் சூப்பர் ஆப்பாக வாட்ஸப் மாற வாய்ப்புகள் அதிகம். இது எப்படிச் செயல்படுத்தப்படும் என இன்னும் தெளிவாகத் தெரிவிக்கப்படவில்லை.

வெளிநாட்டு நிறுவனமாக இருப்பதால் இந்தியாவில் புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் வாங்குவது என்பது தொடர்ந்து சிக்கல்கள் நிறைந்ததாகவே ஃபேஸ்புக்குக்கு இருந்துவருகிறது. ‘பிக் டேட்டா’ தொடர்பான விஷயங்களிலும் அரசின் கண்காணிப்பு என்பது நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. மேலே குறிப்பிட்ட ‘வாட்ஸப் பே’ சேவைக்குக்கூட பல தடங்கல்களைக் கடந்தே ஒப்புதல் வாங்கியது ஃபேஸ்புக். இப்படியான பிரச்னைகளுக்கு ஃபேஸ்புக், இனி ஜியோவை கேடயமாகப் பயன்படுத்தும். இந்தியாவில் எப்படி காய் நகர்த்தினால் வேலை நடக்கும் என்பதையும் ஜியோவிடமிருந்து கற்றுக்கொள்ளும். தன்னை இந்தியாவிலிருந்து செயல்படும் நிறுவனமாகவே இனி ஃபேஸ்புக் பாவிக்கும்.

சில வருடங்களுக்கு முன்பு ‘ஃப்ரீ பேஸிக்ஸ்’ என்ற திட்டத்தை இந்தியாவில் கொண்டுவருவதில் தீவிரமாகச் செயல்பட்டுவந்தது ஃபேஸ்புக். இந்தத் திட்டத்தில் அனைவருக்கும் இலவச இணைய சேவையை வழங்க முற்பட்டது ஃபேஸ்புக். இதற்காக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துடன் அப்போது கைகோத்தது ஃபேஸ்புக். கேட்க நன்றாக இருந்தாலும், இதில் ஒரு சிக்கல் இருந்தது. இந்த இலவச இணையத்தில் ஃபேஸ்புக் மற்றும் இதர சேவைகளை மட்டுமே பயன்படுத்த முடியும். இப்படி குறிப்பிட்ட தளங்களுக்கு மட்டும் இணையம் தருவது என்பது ‘Net Neutrality’ கொள்கைக்கு எதிரானது என அப்போது எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் இதற்கு அனுமதி அளிக்க மறுத்தது.

இப்போது ஜியோவுடன் கைகோத்திருப்பதால் மீண்டும் இதுபோன்ற ஒரு திட்டத்தை ஃபேஸ்புக் கையில் எடுக்குமோ என்ற கேள்விகள் எழுந்துள்ளன. ஆனால் ‘Net Neutrality’ குறித்த விதிமுறைகள் அப்போதே தெளிவாக வரையறுக்கப்பட்டுவிட்டதால், மீண்டும் இதுபோன்ற ஒரு திட்டம் கையில் எடுக்கப்படும் வாய்ப்புகள் குறைவு என்கின்றன இன்டர்நெட் ஃப்ரீடம் பவுண்டேஷேன் (IFF) போன்ற அமைப்புகள். மேலும், ஜியோ வந்த பிறகு இணைய சேவையின் விலைகளும் பெருமளவில் குறைந்துவிட்டன. இதனால் இதற்கான அவசியமும் இப்போதில்லை. ஆனால், வேறுவிதமாக ஜியோவுடன் கூட்டணி கொண்டு தங்கள் சேவைகளின் பயன்பாட்டை அதிகரிக்க ஃபேஸ்புக் ஏதாவது முயற்சியில் இறங்குமா என்பது, போகப் போகத்தான் புரியும்.

‘டேட்டாதான் புதிய ஆயில்’ என்ற வாசகத்தை நீங்களும் சமீபத்தில் எங்கேயாவது பார்த்திருக்க வாய்ப்புண்டு. அது ஏறத்தாழ உண்மைதான். இன்றைய டிஜிட்டல் உலகில் உண்மையில் டேட்டாதான் தங்கம். இதனால் மேலே சொன்ன எந்தத் திட்டமும் சரிவரவில்லை என்றாலும், இந்தியாவின் குறு, சிறு தொழில்கள் மற்றும் ஜியோவின் வாடிக்கையாளர்கள் குறித்த டேட்டாவுக்கும் ஃபேஸ்புக்குக்கும் அக்சஸ் இருக்கும். இப்போது ஒப்பந்தத்தில் இதுகுறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனால், ஜியோ மார்ட் போன்ற சேவைகளில் இணைந்து வேலை பார்க்கும்போது டேட்டா பரிமாற்றம் என்பது நிச்சயம் இருக்கும். இன்ஸ்டாவில் ஒருவர் என்ன லைக் செய்கிறார் என்பது ஜியோவுக்கும், ஜியோ சேவைகளில் ஒருவர் என்ன செய்கிறார் என்பது ஃபேஸ்புக்குக்கும் தெரியவரும். எல்லாமே, சரியான விளம்பரத்தை ஒருவருக்கு எடுத்துச் செல்வதற்குத்தான்.

இப்படி பல திட்டங்களை மனதில்வைத்தே ஜியோவில் இவ்வளவு பெரிய முதலீட்டைச் செய்திருக்கிறது ஃபேஸ்புக். இந்திய டிஜிட்டல் உலகில் இது நிச்சயம் பெரிய மாற்றத்தையும் வாய்ப்புகளையும் கொண்டுவரும் என்பது உண்மை. ஆனால், தொடர்ந்து பிரைவசி சார்ந்த விஷயங்களில் கோட்டைவிடும் ஃபேஸ்புக்கிடம் ஜியோவின் வாடிக்கையாளர்களின் டேட்டாவும் கைமாறுவதுதான் பயமுறுத்துகிறது.