Published:Updated:

நீங்கள் தவறவிட்ட பிசினஸ் ஐடியா என்ன..?

பிசினஸ் ஐடியா
பிரீமியம் ஸ்டோரி
பிசினஸ் ஐடியா

சோஷியல் மீடியா

நீங்கள் தவறவிட்ட பிசினஸ் ஐடியா என்ன..?

சோஷியல் மீடியா

Published:Updated:
பிசினஸ் ஐடியா
பிரீமியம் ஸ்டோரி
பிசினஸ் ஐடியா

எல்லோருக்குள்ளும் ஏதோ ஒரு தருணத்தில் ஒரு பிசினஸ் ஐடியா எட்டிப் பார்த்திருக்கும். ஆனால், சரியான நேரத்தில் அதைச் செயல்படுத்தாமல் தவறவிட்டிருப்போம். இப்படி, “நீங்கள் தவறவிட்ட பிசினஸ் ஐடியா என்ன... ஏன் செயல்படுத்த முடியவில்லை?” என்று நாணயம் விகடன் ஃபேஸ்புக் (https://www.facebook.com/NaanayamVikatan) மற்றும் ட்விட்டர் (https://twitter.com/NaanayamVikatan) பக்கங்களில் கேட்டிருந்தோம். வாசகர்களும் தங்களது பதில் களைப் சுவாரஸ்யமாகப் பகிர்ந்திருந்தார்கள்.

“திருமணம் மற்றும் முக்கிய நிகழ்ச்சிகளுக்குச் சாப்பாடு ஆர்டர் எடுத்து விநியோகம் செய்யும் ஐடியா பத்து வருடங்களுக்கு முன்பு வந்தது. ஆனால், தன்னம்பிக்கையின்மை மற்றும் பயம் காரணமாக அந்த ஐடியாவை செயல்படுத்த முடியவில்லை”னு சொல்லி ஃபீல் பண்ணிருக் காரு கிருஷ்ணகுமார். டோன்ட் வொரி சார்... முயற்சி திருவினையாக்கும்!

நீங்கள் தவறவிட்ட பிசினஸ் ஐடியா என்ன..?

“எங்க ஊர்ல ஸ்போர்ட்ஸ் கடை வைக்க லாமான்னு பல ஆண்டுகளுக்கு முன் ஒருமுறை யோசிச்சேன். ஆனா, அது லாபம் தராது. பெருசா வியாபாரம் ஆகாது. வியாபாரம் ஓடலைன்னா மிச்சமுள்ள விளையாட்டு பொருள்களைத் திரும்ப விற்க முடியாது என்றெல்லாம் சொல்லி அச்சுறுத்திட்டாங்க”னு சொல்லிருக்காரு மதிமாறன். பலரோட மைண்ட் வாய்ஸ்..!

“பென்சில் தூளில் இருந்து அழி ரப்பர் தயாரிப்பது; ஆனா, நாலாவது படிக்கும்போது என்னால இதைச் செயல்படுத்த முடியாமா போச்சு”னு சீரியஸா காமெடி பண்ணிருக்காரு கார்த்திக் வேலுசாமி. ரைட்டு, விடு!

“மயில் இறக நோட்டு புக்குல வச்சு சோற்றுப் பருக்கை கொஞ்சம் வச்சிட்டு மூடி வச்சா குட்டி போடும். அத வச்சு மயில் பண்ணை ஆரம்பிக்கலாம்னு இருந்தேன்னு (மூணாவது படிக்கும் போது வந்த ஐடியா)” சொல்லிருக்காரு தீரன் செந்தில் ராஜ். மயில் பண்ணையா? தெறி ஐடியா..!

“நான் நர்சரி கார்டன் பொருள்களை டோர் டெலிவரி வடிவில் கொண்டுவந்து ஒரு சுயதொழில் செய்யலாம் என முயற்சி செஞ்சேன். ஆனால், அதன் தொடக்கம் சரியான ஒருங்கிணைப்பு இல்லாமல் சறுக்கிவிட்டது. மீண்டும் வாய்ப்பு அமைந்தால் முயற்சி செய்வேன்’’னு பாசிட்டிவ்வா சொல்லிருக்காரு மகாலிங்கம் கணபதி. வாழ்த்துகள் புரோ!

“நான் உட்பட நான்கு நண்பர்கள் சேர்ந்து, வாடகை கார் வாங்கினோம்... தொழில் நஷ்டம் அடைந்தது... (காரணம், வாடகைக்கு எங்கு சென்றாலும் நாங்கள் அனைவரும் செல்வதால், வாடிக்கையாளருக்கு இடம் இல்லை)’’ எனக் கலாய் கமென்ட் பண்ணிருக்காரு ஜலால் உதீன். சிறப்பா வருவீங்கஜி நீங்க...

“ஒரு 8 வயசு இருக்கும். மிட்டாய்க் கடை ஆரம்பிக்கணும்னு முடிவெடுத்தேன். அப்புறம் அந்த முடிவை நானே மாற்றி அந்த மிட்டாய் முழுவதையும் நானே தின்றுவிட்டேன்” எனச் சொல்லிருக்காரு ராஜ்குமார். கொழந்தைக்கு மிட்டாய்தானே முக்கியம்!

“எந்த வியாபாரம் செய்வதாக இருந்தாலும் அனுபவம் இருக்க வேண்டும். உதாரணத்துக்கு, ஹோட்டல் தொடங்குவதாக இருந்தால் நல்ல சுவை உள்ள ஹோட்டலில் சேர்ந்து வேலை பாருங்கள். சம்பளத்தைப் பெரிதாகப் பார்க்காமல் வியாபார நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ளுங்கள். பிறகு தொடங்குங்கள்... வெற்றி பெறலாம்”னு பிராக்டிக்கல் ஐடியா கொடுத்துருக்காரு திருச்செல்வன். மகாஜனங்களே, நோட் பண்ணுங்க...

“என்னோட சொந்த ஊரான பட்டுக் கோட்டை பக்கத்துல பில்கேட்ஸ்க்கு நிகரா ஒரு சாஃப்ட்வேர் கம்பெனி ஆரம்பிக்கலாம்னு இருந்தேன்... அதுக்குள்ள கொரோனா பரவி கெடுத்துவுட்டுருச்சிங்க சார்” என சீரியஸா ஃபீல் பண்ணிருக்காரு சதிஷ் குமார். மெய்யாலுமா?