Published:Updated:

Fact Check: `அக்டோபரில் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை!' - வாட்ஸ்அப் தகவல் உண்மையா?

தற்போதைய நிலையில் வார விடுமுறை நாட்களிலும் வங்கிகள் அனைத்து வகையான ஆன்லைன் சேவைகளை வழங்கி வருவதால், நேரடியாக வங்கிகளுக்கு செல்ல முடியாதே தவிர, இந்த ஆன்லைன் சேவைகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் பணப்பரிவர்த்தனையில் ஈடுபடலாம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சில நாட்களாக, வருகிற அக்டோபர் மாதத்தில் தமிழகத்திலுள்ள வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை என்கிற தகவல் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மாதிரியான சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ஆனால் உண்மையில், வருகிற அக்டோபர் மாதம் தமிழகத்தில் வார விடுமுறை நாட்கள் தவிர்த்து 4 நாட்கள் மட்டுமே பண்டிகை கால விடுமுறை நாட்களாகும்.

RBI
RBI
Photo: Vikatan / Ashok kumar.D
பங்குச்சந்தையில் ஜெயிக்க இது ரொம்பவே முக்கியம்; `டெக்னிக்கல் அனலிசிஸ்' என்னும் வழிகாட்டி - 24

அதன்படி, அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி, அக்டோபர் 14 மற்றும் 15-ம் தேதி ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி, அக்டோபர் 19-ம் தேதி மிலாடி நபி என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அக்டோபர் 3, 9, 10, 17, 23, 24, 31 ஆகிய தேதிகள் வங்கியின் வழக்கமான வார விடுமுறை நாட்களாகும்.

தற்போதைய நிலையில் வார விடுமுறை நாட்களிலும் வங்கிகள் அனைத்து வகையான ஆன்லைன் சேவைகளை வழங்கி வருவதால், நேரடியாக வங்கிகளுக்கு செல்ல முடியாதே தவிர, இந்த ஆன்லைன் சேவைகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் பணப்பரிவர்த்தனையில் ஈடுபடலாம். சம்பள நாள் வார விடுமுறை நாட்களில் வந்தாலும், சம்பளதாரர்களின் வங்கிக் கணக்குக்கு சம்பளம் வரவு வைக்கப்படும் எனவும் சமீபத்தில் ஆர்.பி.ஐ தெரிவித்திருந்தது.

இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் சில சிறப்பு பண்டிகைகள் அனைத்தும் அக்டோபர் மாதத்தில்தான் வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு விழாக்கள் கொண்டாடப்படுவதால், அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்றபடி வங்கி விடுமுறை நாட்கள் மாறுபடும்.

வங்கி
வங்கி
Zomato: சர்ச்சைகளைத் தாண்டியும் உயரும் பங்கு விலை; முதலீட்டாளர்கள் கவனிக்கவேண்டியது என்ன?

நாட்டின் பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கிகளும் அறிவிக்கப்பட்ட இந்த விடுமுறை நாட்களில் பிராந்திய பண்டிகை மற்றும் தேதிகளை பொறுத்து மூடப்படும். அதனடிப்படையில்தான், ஆர்.பி.ஐ அறிவித்திருக்கும் அக்டோபர் மாத விடுமுறை பட்டியலில் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை (வழக்கமான 7 வார விடுமுறை நாட்களையும் சேர்த்து) வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு