பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

சர்வதேச நிறுவனத் தலைமையில் இன்னும் ஓர் இந்தியர்!

ராஜ் சுப்ரமணியம்
பிரீமியம் ஸ்டோரி
News
ராஜ் சுப்ரமணியம்

தலைமை

சுந்தர் பிச்சை, பராக் அகர்வால், சத்யா நாதெல்லா ஆகியோரின் வரிசையில் சர்வதேச நிறுவனங்களின் உயர் பதவியில் இந்திய அமெரிக்கரான ராஜ் சுப்ரமணியம் இடம்பெறுகிறார். இவர் உலகின் மிகப் பெரிய டெலிவரி சேவை நிறுவனமான ஃபெடெக்ஸின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஃபெடெக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் ஃப்ரடெரிக் ஸ்மித் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி பதவியில் சுமார் 50 ஆண்டு களுக்கும் மேலாக இருந்து வருகிறார். 50 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது அந்தப் பொறுப்பிலிருந்து விலகுவதாகக் கூறியுள்ளார். வரும் ஜூன் 1-ம் தேதி பதவியிலிருந்து விலகும் ஸ்மித், இனி ஃபெடெக்ஸின் செயல் தலைவராக மட்டும் இருப்பார்.

ராஜ் சுப்ரமணியம்
ராஜ் சுப்ரமணியம்

யார் இந்த ராஜ் சுப்ரமணியம்..? திருவனந்த புரத்தில் பிறந்த இவர், மும்பை ஐ.ஐ.டி-யில் ரசாயனப் பொறியியலில் பட்டம் பெற்றவர். 1989-ல் அதே துறையில் சைராகுஸ் பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் மார்க்கெட்டிங் மற்றும் நிதித்துறையில் எம்.பி.ஏ பட்டமும் பெற்றுள்ளார்.

1991-ல் ஃபெடெக்ஸில் சேர்ந்தவர், தொடர்ந்து சிறப்பான செயல்திறனை வெளிப் படுத்தி வந்ததால், பல்வேறு பொறுப்புகள் வழங்கப்பட்டு, 2020-ல் இயக்குநர்கள் குழு உறுப்பினராகவும் தேர்வு செய்தது ஃபெடெக்ஸ்.

இப்போது ஃபெடெக்ஸ் நிறுவனத்தின் தலைவராகப் பொறுப்பேற்க உள்ள ராஜ் சுப்ரமணியம், ‘‘உலகம் முழுவதும் உள்ள ஆறு லட்சம் ஃபெடெக்ஸ் உறுப்பினர்களின் ஒருங்கிணைந்த செயல்பாட்டால்தான் உலகின் டெலிவரி சேவையில் வலுவான கட்டமைப்பை உருவாக்கியிருக்கிறோம்’’ என்று சொல்லி இருக்கிறார்.

உலக அளவில் செயல்படும் நிறுவனங்களின் தலைமைப் பதவியில் நம் நாட்டைச் சேர்ந்த ஒருவர் இருப்பது நமக்குப் பெருமைதானே!