Published:Updated:

எல்.ஐ.சி IPO அறிவிப்பு? இன்று மாலை பத்திரிகையாளர்களைச் சந்திக்கிறார் நிதி அமைச்சர்!

நிர்மலா சீதாராமன் ( Photo: Twitter// @PIB_India )

மூன்றாம் அலையால் பொருளாதார வளர்ச்சி பாதிப்படையாமல் இருக்க அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து நிதி அமைச்சர் ஏதாவது அறிவிப்பு வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எல்.ஐ.சி IPO அறிவிப்பு? இன்று மாலை பத்திரிகையாளர்களைச் சந்திக்கிறார் நிதி அமைச்சர்!

மூன்றாம் அலையால் பொருளாதார வளர்ச்சி பாதிப்படையாமல் இருக்க அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து நிதி அமைச்சர் ஏதாவது அறிவிப்பு வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Published:Updated:
நிர்மலா சீதாராமன் ( Photo: Twitter// @PIB_India )

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மாலை 4.30 மணிக்கு பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசவிருக்கிறார். ஒமிக்ரான் மூன்றாம் அலை பரவிவரும் நிலையில், நம் நாட்டின் பொருளாதார நிலை குறித்து பேசுவதற்கான இந்த பத்திரிகையாளர் சந்திப்பு நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் நிதி அமைச்சர் சில முக்கியமான அறிவிப்புகளை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

People queue up for COVID-19 vaccine
People queue up for COVID-19 vaccine
AP Photo / Rafiq Maqbool

அரசு பொதுத் துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சியின் ஐ.பி.ஒ பற்றி கடந்த சில நாள்களாக பல விதமான செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. இந்த நிறுவனத்தில் ஐ.பி.ஒ.வில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு 20% வரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் மதிப்பு ரூ.5 டிரில்லியன் எனவும், ஆனால், அரசுத் தரப்பில் ரூ.15 டிரில்லியன் வரை மதிப்பீடு செய்யப்பட்டு, ஐ.பி.ஒ வரவிருப்பதாகவும் செய்தி வெளியாகி வருகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில், மத்திய நிதி அமைச்சர் எல்.ஐ.சி ஐ.பி.ஒ குறித்த ஏதாவது ஒரு அறிவிப்பை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Nirmala Sitharaman
Nirmala Sitharaman

இது தவிர, மூன்றாம் அலையால் பொருளாதார வளர்ச்சி பாதிப்படையாமல் இருக்க அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து நிதி அமைச்சர் ஏதாவது அறிவிப்பு வெளியிடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism