Published:Updated:

உலக அளவில் உணவு ஆப்களை இணைக்கும் இளைஞர்! - கரூர் டு சிங்கப்பூர் சாதனை!

ஸ்ரீராம் மோகன்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீராம் மோகன்

“என் பிசினஸ் மேலே நம்பிக்கை வந்ததால மாசம் 5.5 லட்சம் ரூபா சம்பளம் கிடைச்ச சுவிஸ் பேங்க் வேலையை விட்டு விலகிட்டேன்!”

உலக அளவில் உணவு ஆப்களை இணைக்கும் இளைஞர்! - கரூர் டு சிங்கப்பூர் சாதனை!

“என் பிசினஸ் மேலே நம்பிக்கை வந்ததால மாசம் 5.5 லட்சம் ரூபா சம்பளம் கிடைச்ச சுவிஸ் பேங்க் வேலையை விட்டு விலகிட்டேன்!”

Published:Updated:
ஸ்ரீராம் மோகன்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீராம் மோகன்
ரூர் மாவட்டம், புலியூரைச் சேர்ந்த ஸ்ரீராம் மோகன், உணவு ஆப்ஸ்மூலம் இந்தியாவின் பல நகரங்களில் பிசினஸ் செய்து வருகிறார். தற்போது சிங்கப்பூரில் இருக்கும் அவரிடம், எப்படி இது சாத்தியமானது என்று கேட்டோம். வாட்ஸ்அப் காலில் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

அப்பா இறந்த பின்னால...

“என் குடும்பம் நடுத்தரக் குடும்பம்தான். அப்பா தென்னை மரங்களை வளர்த்து, தேங்காய் வியாபாரம் பார்த்துக்கிட்டு இருந்தார். 12-ம் வகுப்பு முடிச்சதும், டிப்ளோமா சேர்ந்தேன். இரண்டாம் வருஷம் படிச்சுக்கிட்டு இருந்தப்ப, அப்பாவுக்கு உடம்புக்கு முடியாமல் போய்டுச்சு. அவருக்கு வைத்தியம் பண்ணவே, இருந்த ஏழு ஏக்கர் நிலத்தை விக்க வேண்டியதா போயிடுச்சு. ஆனாலும், காப்பத்த முடியல. தாலியில் இருந்த குண்டுமணி வரை வித்துதான் என்னையும் அக்காவையும் படிக்க வச்சாங்க எங்க அம்மா. அதனால நான் டிப்ளோமா முடிச்சதும், பொள்ளாச்சியில சாஃப்ட்வேர் கம்பெனியில் 2005-ம் ஆண்டு, ரூ.3,500 சம்பளத்துல ‘புரோகிராமிங் டெவலப்பராக’ச் சேர்ந்தேன். அங்கேயே ஆறு வருஷம் வேலை பார்த்தேன். கடைசியா, 2011-ம் ஆண்டு அங்கே வேலையை விட்டபோது, மாதம் ரூ.75,000 வரை சம்பளம் வாங்கினேன்.

உலக அளவில் உணவு ஆப்களை இணைக்கும் இளைஞர்! - கரூர் டு சிங்கப்பூர் சாதனை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தனியா ஹார்டுவேர் கம்பெனி..!

அடுத்து, பெங்களூர்ல உள்ள ஒரு ஐ.டி கம்பெனியில ரூ.85,000 சம்பளத்துல வேலைக்குச் சேர்ந்தேன். அங்கே வேலை பார்த்துக்கிட்டே பொள்ளாச்சியில ‘Biene Technology’ என்ற பெயரில் ஹார்டுவேர் கம்பெனியை ஆரம்பிச்சேன். லாரி உள்ளிட்ட வாகனங்களுக்கு ஜி.பி.எஸ் கருவிகளை உருவாக்கித் தர ஆரம்பிச்சோம். முதல் இரண்டு வருஷம் எந்த லாபமும் வரலை. கஸ்டமர்களிடம் எங்க தயாரிப்புகளைப் பத்தி விளக்கமா எடுத்துச் சொல்ல ஆரம்பிச்சோம். மெதுவா ஆர்டர் வர ஆரம்பிச்சுது.

சுவிஸ் பேங்க் வேலை

2014-ல சிங்கப்பூர்ல உள்ள சுவிஸ் வங்கிக் கிளையில் மேனேஜராக மாதம் ரூ.4 லட்சம் சம்பளத்துக்கு வேலை கிடைச்சுது. அடுத்து ஐ.டி சம்பந்தமான புராஜெக்டுகளை உருவாக்கும் முயற்சியில் இறங்கினேன். அதற்காக, ‘Flyerwheels’ என்ற சாஃப்ட்வேர் கம்பெனியைத் தொடங்கினேன். கம்பெனிகளுக்கு வெப்சைட், மொபைல் ஆப் உருவாக்கித் தர தொடங்கினோம். சென்னை, பெங்களூரு, யு.எஸ்.ஏ, யு.கே, சிங்கப்பூர் என ஆர்டர் கேட்டோம். முதல் ஒரு வருஷம் டல்தான். ஆனா, 2015-ம் ஆண்டு முதல் லாபம் வர ஆரம்பிச்சுது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உணவு டெலிவரி ஆப்..!

இதுக்குப் பிறகுதான் என் வாழ்க்கையின் முக்கியமான கட்டம் ஆரம்பிச்சுதுன்னு சொல்லலாம். 2016-ல ‘Flyer eats’ என்ற பெயரில், உணவு டெலிவரி பண்ணும் ஸ்டார்ட்அப் கம்பெனியைத் தொடங்கினேன். அதற்கு பிரத்யேகமான ஆப்பை உருவாக்கினேன். கரூர், பொள்ளாச்சி, கேரளாவில் உள்ள பாலக்காடு என்று மூன்று இடங்களில் முதலில் தொடங்கினேன். கரூர்ல முதல்ல நல்லா பிக்கப் ஆகும்னு நினைச்சேன். ஆனா, என் நினைப்புக்கு மாறாக, பாலக்காட்டுல நல்லா பிக்கப்பாகி, ஆரம்பத்துலேயே 50 ஹோட்டல்காரங்க எங்க கம்பெனியில ஒப்பந்தம் போட்டாங்க. பொள்ளாச்சி, கரூர்ல என் ஆப்பை பிரபலப்படுத்த சிலரை நியமித்து, இலவசமா உணவுகளைக் கொண்டுவந்து தர ஏற்பாடு செஞ்சேன். கஸ்டமர்கள்கிட்டயும், உணவு டெலிவரி பண்றதுல உள்ள குறைகளைச் சொன்னால், உணவுக்கான பணத்தைத் திருப்பித் தந்துடுவோம்னு அறிவிச்சோம்.

ஸ்ரீராம் மோகன்
ஸ்ரீராம் மோகன்

நிறைய ஆஃபர்கள்..!

பெரிய உணவு டெலிவரி பண்ணும் கம்பெனிகள் அப்போதான் மெட்ரோ சிட்டிகளில் கால்பதித்திருந்த நேரம். அதனால், கஸ்டமர்களையும் ஹோட்டல் நிர்வாகங் களையும் கவர, நான் பல விஷயங்களைப் பண்ண வேண்டி இருந்துச்சு. மத்த ஸ்டார்ட்அப் கம்பெனிகளெல்லாம், அதிகபட்சம் 8 கிலோ மீட்டர் வரைதான் உணவு டெலிவரி பண்ணினாங்க. நாங்க 20 கிலோ மீட்டர் வரை உணவு டெலிவரி பண்ணினோம். அதற்காக, மாத சம்பளத்துக்கு தனியாக இரண்டு பேரை வேலைக்கு எடுத்தோம். அவங்களுக்கு வண்டி, பெட்ரோல் எல்லாம் நாங்களே தந்தோம். இருந்தாலும், முதல் எட்டு மாசத்துல ரூ.5 லட்சம் வரை நஷ்டம்தான் ஏற்பட்டது. பாலக்காட்டுல மட்டும் கொஞ்சம் லாபம் வந்தது. ஆனா, நான் பின்வாங்கிடல.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அடுத்து, சிறு நகரங்களான மயிலாடுதுறை, தேனி, கம்பம், பரமத்திவேலூர், கேரளாவுல எடப்பால், திருவூர்னு பல பகுதிகளில் கம்பெனியை ஆரம்பிச்சோம். ஆனால், மக்களுக்கு அடிப்படையே புரியலை. ‘நீங்க எங்க சமைச்சு கொண்டு வருவீங்க?’னு கேட்டாங்க. ஹோட்டல் தரப்புல, ‘ஏன் நாங்க 20% விலை குறைச்சு தரணும்?’னு கேட்டாங்க. அவங்களுக்கு புரியவைக்க சிரமப்பட்டோம். பல புதுமையான ஆஃபர்களை அறிவிச்சோம்.

உலக அளவில் உணவு ஆப்களை இணைக்கும் இளைஞர்! - கரூர் டு சிங்கப்பூர் சாதனை!

சில ஹோட்டல்கள்ல சில நாள் எதிர்பார்த்த அளவு பிரியாணி விற்காமப் போயிடும். உடனே நாங்க, ‘ஒண்ணு வாங்குனா, ஒண்ணு இலவசம்’னு அறிவிப்போம். எங்க உணவு டெலிவரி கம்பெனி பத்தி ரிவியூ கொடுக்கிற கஸ்டமர்களுக்கு, அவங்க வாலட்டுல ரூ.3 ஆட் ஆகும்படி செஞ்சோம்.

அதன் பிறகு, பல இடங்கள்ல கம்பெனியை விரிவுபடுத்தினோம். மத்த கம்பெனிகளைவிட, குறைவான ப்ரைஸ் கேரன்டி கொடுத்தோம்.

ஹோட்டல்காரங்களுக்கும் 20% விலை குறைப்பு என்பதை 10% ஆக்கினோம். வளர்ச்சியைப் பார்த்து ஒரு பிரபல கம்பெனி என் கம்பெனியை விலை பேசினாங்க. ஆனா, நான் விற்க மறுத்துட்டேன்.

‘நாம சரியாக போய்கிட்டு இருக்கிறோம்’ங்கிறதை அப்போதான் உணர்ந்தேன். இப்படி ஒவ்வொரு நகரமா தொடங்கி, இப்போது தஞ்சாவூர், கும்ப கோணத்தைத் தவிர, தமிழ்நாட்டுல உள்ள எல்லா நகரத்துலயும் செய்துகிட்டு வர்றோம். தவிர, பெங்களூர், நாசிக், புனேனு பல இடங்கள்ல எங்க உணவு டெலிவரி கம்பெனி கிளைகள் ஆரம்பிச்சுருக்கோம்.

“உலக அளவில் எல்லா உணவு டெலிவரி கம்பெனிகளையும், அவங்க விரும்பினா ஒரே ஆப்பில் இணைப்பதற்கு ஏதுவாக, உலக அளவிலான ஒரு ஆப்பை வடிவமைக்கும் முயற்சியில் தீவிரமா இருக்கேன்.”

உலகம் முழுவதும்..!

என் பிசினஸ் மேலே எனக்கு நம்பிக்கை வந்ததால 2019-ல மாசம் 5.5 லட்சம் ரூபா சம்பளம் கிடைச்சு வந்த சுவிஸ் பேங்க் வேலையை விட்டு விலகிட்டேன்.

சிங்கப்பூரிலும் ‘பிளையர்ஈட்ஸ்’ உணவு டெலிவரி செய்யும் கம்பெனியைத் தொடங்கியுள்ளேன். அங்க வேற ஒரு டெலிவரி செய்யும் கம்பெனியோட கூட்டணி அமைச்சு, இப்போதைக்கு உணவு டெலிவரி பண்றோம். உணவு டெலிவரியோடு காய்கறிகளையும் கஸ்டமர்களுக்கு டெலிவரி பண்றோம்.

கடந்த 2018-லேயே அமெரிக்காவுல எங்க கம்பெனியை பதிவு பண்ணிட்டேன். அங்கேயும் எங்க கம்பெனிகளை விரைவில் தொடங்குவேன். புலியூரில் பூர்வீக வீடு இருந்தாலும், பொள்ளாச்சியில் இரண்டு தென்னம்தோப்புகளை வாங்குனாலும் எங்கப்பா வித்த பூர்வீக ஏழு ஏக்கர் நிலத்தையும் வாங்கினாத்தான் என் மனசு ஆறும்.

உலக அளவில் எல்லா உணவு டெலிவரி கம்பெனிகளையும், அவங்க விரும்பினா ஒரே ஆப்பில் இணைப்பதற்கு ஏதுவாக, உலக அளவிலான ஒரு ஆப்பை வடிவமைக்கும் முயற்சியில் தீவிரமா இருக்கேன். அமெரிக்காவில் நான் தொழில்ல சாதிக்கணும்; உலகமே ஒருநாள் என் பெயரை உச்சரிக்கணும். இதுதான் என் லட்சியம். அந்த லட்சியத்தை நோக்கி படிப்படியா நகர்ந்துகிட்டிருக்கேன்’’ என்று நம்பிக்கை பேசி முடித்தார் ஸ்ரீராம் மோகன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism