Published:Updated:

உலகம் முழுக்க விற்பனையாகும் நெட்டிச் சிற்பமும் தஞ்சாவூர் தட்டும்..!

நெட்டிச் சிற்பம்
பிரீமியம் ஸ்டோரி
நெட்டிச் சிற்பம்

ஜி.ஐ பிசினஸ் - புதிய பகுதி

உலகம் முழுக்க விற்பனையாகும் நெட்டிச் சிற்பமும் தஞ்சாவூர் தட்டும்..!

ஜி.ஐ பிசினஸ் - புதிய பகுதி

Published:Updated:
நெட்டிச் சிற்பம்
பிரீமியம் ஸ்டோரி
நெட்டிச் சிற்பம்

கலைகளுக்குப் பெயர்பெற்ற தஞ்சை மாவட்டத்தில் கைவினைக் கலைஞர் களால் தயாரிக்கப்படும் ஒன்பது வகையான கலைப்பொருள்களுக்குப் புவிசார் குறியீடு (Geographical Indications) கிடைத்துள்ளது. அவற்றில் நெட்டி மற்றும் தஞ்சாவூர் தட்டு ஆகிய இரு பொருள்களுக்கான விற்பனை வாய்ப்பு எப்படி இருக்கிறது, இந்தத் தொழில்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன என்பதைப் பற்றி மட்டும் இந்த வாரம் பார்ப்போம்.

உலகம் முழுக்க விற்பனையாகும் 
நெட்டிச் சிற்பமும் தஞ்சாவூர் தட்டும்..!

நூறு ஆண்டுகள் கெடாத நெட்டி கலைப் பொருள்கள்...

நாற்பது வருடங்களுக்கு மேலாக நெட்டி வேலைப்பாட்டில் கலைப்பொருள்கள் செய்யும் ராதா என்பவரிடம் பேசினோம்.

``ஏரி மற்றும் குளங்களில் வளரக்கூடிய நெட்டி என்ற தாவரத்தை எடுத்து, அதன் நுனி மற்றும் வேர் பகுதியை நீக்கிவிட்டு, நீளமாக இருக்கக்கூடிய அதன் நடுப்பகுதியான தண்டுப் பகுதியை மட்டும் எடுத்து காய வைத்து, உலர்த்தி பதப்படுத்தி வைப்போம். பின்னர், கத்தியால் அதன் தோல் பகுதியை சீவிய பிறகு யானை தந்தத்தைப் போலவே, வெண்மை நிறத்தில் பளிச்சென கிடைக்கும் நெட்டியைக் கொண்டு கோயில்கள், கடவுள் உருவங்கள், வரலாற்றுச் சின்னங்கள், சுற்றுலாத்தளங்கள், தலைவர்களின் படங்கள், கட்டிமுடிக்கப்பட்ட கட்டடம் போன்றவற்றைத் தத்ரூபமாகக் கைகளாலேயே வடிவமைப்போம். நெட்டியால் செய்யப்படுவதால், நெட்டி வேலைப்பாடுகள் என்ற பெயரை இந்தக் கலைப்பொருள்கள் பெற்றன.

மனைவியுடன் ராதா
மனைவியுடன் ராதா

மன்னர்களின் ஆட்சிக் காலத்திலேயே கிளி, ரோஸ், தாமரை, பூ, யானை போன்வற்றை சிறிய அளவில் செய்து அதை முக்கியஸ்தர் களுக்கு பரிசுப் பொருள்களாகக் கொடுக்கும் பழக்கம் இருந்துள்ளது. காலப்போக்கில் அவை விற்பனை செய்யத் தொடங்கி, அதன் கலைஞர் களுக்கு கணிசமான வருமானம் கிடைத்ததால், சில கலைஞர்கள் தொடர்ந்து செய்து வந்துள்ளனர். ஆனால், வரலாற்று சிறப்புமிக்க நெட்டி கலைப்பொருளைப் பற்றிப் பலருக்கும் தெரியாததால், அதன் வியாபாரம் பெருக வில்லை. அழிந்து வரக்கூடிய நிலையில் அந்தத் தொழிலும், அதன் கலைஞர்களும் இருந்தனர்.

உலகம் முழுக்க விற்பனையாகும் 
நெட்டிச் சிற்பமும் தஞ்சாவூர் தட்டும்..!

பின்னர் மத்திய, மாநில அரசுகள் கைவினைக் கலைஞர்களால் செய்யப்படும் கலைப்பொருள்களைக் காப்பதற்காகப் பல்வேறு நடவடிக்கையை எடுத்தன. பொருள் காட்சி நடத்தி அதன்மூலம் கைவினைப் பொருள்களை விற்பனை செய்ய வைத்து வியாபாரத்தைப் பெருக்க வைத்தன. அதன் பிறகு, வியாபாரம் மற்றும் அந்தப் பொருள்களை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களின் எண்ணிக்கை உயரத் தொடங்கியது.

பெரிய கோயில், கல்லணை, ராஜராஜ சோழன், நீதியை உணர்த்திய மனு நீதிச் சோழன், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், தாஜ்மகால் உள்ளிட்ட பல தோற்றத்தை அழகுற செய்யத் தொடங்கியதால், நெட்டிப் பொருள்கள் பலராலும் கவரப்பட்டன.

உலகம் முழுக்க விற்பனையாகும் 
நெட்டிச் சிற்பமும் தஞ்சாவூர் தட்டும்..!

தமிழ்நாடு அரசின்கீழ் செயல்படும் கைவினைக் கலைப்பொருள்கள் விற்கக்கூடிய பூம்புகார் விற்பனை நிலையம், காதி கிராப்ட், மத்திய, மாநில அரசுகளால் நடத்தக்கூடிய பொருள்காட்சி போன்றவை எங்கள் வியாபாரத்தைப் பெருக்கும் சந்தையாக விளங்கி வருகின்றன.

ரூ.50 தொடங்கி ரூ.50 லட்சம் வரையில் நெட்டி கலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அதன் வெண்மை சற்றும் குறையாமல் நூறு வருடங்கள் வரை இருக்கும் என்பது நெட்டி கலைப்பொருள்களின் சிறப்பாகப் பார்க்கப்படுகிறது. அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளுக்கு வியாபாரத்துக்காகவும், சொந்தத் தேவைக்காகவும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. புவிசார் குறியீடு பெற்ற பிறகு, இதன் வர்த்தகம் உயர்ந்திருக்கிறது. தற்போது ஒரு மாதத்துக்கு ரூ. 30 லட்சம் வரை வர்த்தகம் நடைபெற்றுக்கொண்டிருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

நெட்டி வேலைப்பாடுகள் செய்யும் கலைஞர்கள் குறைந்து கொண்டே வருகின்றனர். கைகளால், மிக நுணுக்கமாகச் செய்யக்கூடியதாக இருப்பதால், இந்தக் கலைப்பொருள்களை செய்ய பலரும் கற்றுக்கொள்ள முன்வருவதில்லை. மேலும், தமிழகத்தில் ஏரி, குளங்களில் நெட்டி கிடைப்பதில் சிரமம் இருப்பதால், ஆந்திரா, கொல்கத்தா போன்ற மாநிலங்களில் இருந்து இரண்டு அடி நெட்டித் தண்டு 20 ரூபாய்க்கு வாங்கி வருகிறோம். இந்தக் கலைப் பொருளைச் செய்வதால், எனக்கு மாதம் 30,000 ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைக்கிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தொழிலை செய்வதையே பெருமையாக நினைக்கிறேன்'' என்றார்.

தஞ்சாவூர் கலைத்தட்டு...

மூன்று தலைமுறையாக தஞ்சாவூர் கலைத்தட்டு தயாரிக்கும் குடும்பத்தைச் சேர்ந்த ராஜாவுடன் பேசினோம்.

 ராஜா
ராஜா

``தட்டு போன்ற வட்ட வடிவிலான பித்தளைத் தகட்டில் செம்பு மற்றும் வெள்ளியில் பொறிக்கப்பட்ட உருவ அமைப்பிலான சிற்பங்களைச் செதுக்கி பதிப்பதாலும் தொன்மை வாய்ந்த தஞ்சாவூரில் செய்யப்படுவ தாலும் தஞ்சாவூர் கலைத்தட்டு என அழைக்கப்படுகிறது.

கடவுள் உருவங்கள், வரலாற்று சின்னங்கள், தேசிய தலைவர்கள் உருவங்கள், சுற்றுலாத் தலம், மயில், அன்னம் போன்ற பறவை கள் எனப் பல வடிவில் மற்றும் வாடிக்கையாளர்கள் எந்த உருவத்தை தஞ்சாவூர் கலைத் தட்டாகக் கேட்கிறார்களோ, அதைச் செய்து தருகிறோம். வட்ட வடிவில் செய்யப்பட்டவை தற்போது வியாபாரத்தைப் பெருக்குவதற்காக வட்டம், செவ்வகம், சதுரம் போன்ற வடிவங்களிலும் செய்யப்படுகிறது.அஷ்டலட்சுமி, தசாவதாரம் போன்ற தட்டுகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

உலகம் முழுக்க விற்பனையாகும் 
நெட்டிச் சிற்பமும் தஞ்சாவூர் தட்டும்..!

150 ரூபாய் தொடங்கி 1.5 ரூபாய் லட்சம் வரை என்ன மதிப்பில் வாடிக்கையாளர்கள் கேட்கிறார் களோ, அதைச் செய்து தருகிறோம். மூன்று இன்ச்சில் ஆரம்பித்து 60 இன்ச் அளவு வரை செய்து தருகிறோம். தஞ்சாவூர் கலைத்தட்டுக்கான கூட்டுறவு சொசைட்டி, பூம்புகார், கலைப்பொருள்கள் விற்பனை நிலையம், நகைக்கடை மூலம் விற்பனை செய்து வருகிறோம்.

அமெரிக்கா, லண்டன், ரஷ்யா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட உலக நாடுகள் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தஞ்சாவூர் தட்டுக்கு பல வருடங்களுக்கு முன்பே புவிசார் குறியீடு கொடுத்து அரசு கெளரவித்ததால் அதன் வியாபாரம் பல மடங்கு பெருகியது. இதனால், இவற்றைத் தயாரிக்கும் கைவினைக் கலைஞர் களின் வருமானம் அதிகரித்தது. குறிப்பாக, போலியான தஞ்சாவூர் தட்டு தயார் செய்து விற்பனை செய்துவந்தது தடுக்கப்பட்டது. மக்களிடையே தஞ்சாவூர் கலைத்தட்டு பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டு வியாபாரம் பெருகியது.

என்னிடம் 10 பேர் வேலை செய்கின்றனர். பல நாடு களுக்கு நான் ஏற்றுமதி செய்வதன்மூலம் எல்லா செலவும் போக, மாதம் சுமார் ரூ.40,000 வரை வருமானம் வருகிறது. தற்போது தஞ்சாவூர் கலைத்தட்டில் மட்டும் ரூ.30 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை வர்த்தகம் நடைபெற்று வருகிறது'' என்றார்.

வெள்ளியின் விலை ஏற்றம், தஞ்சாவூர் தட்டின் விலையை அதிகரிக்கச் செய்திருக்கிறது. வெள்ளியின் விலை ஏறி இறங்குவதால், குறிப்பிட்ட விலையை நிர்ணயம் செய்து விற்க முடியாமல் தவிக்கின்றனர் தஞ்சாவூர் தட்டு உற்பத்தி செய்பவர்கள்!

(ஜி.ஐ பிசினஸ் தொடரும்)

சஞ்சய்காந்தி
சஞ்சய்காந்தி

“தனி இணையதளம் தொடங்கி, சந்தை வாய்ப்பை அதிகப்படுத்த வேண்டும்!”

தமிழ்நாடு அரசின் புவிசார் குறியீடு பதிவு பெற்ற பொருள்களின் ஒருங்கிணைப்பாளரும், வழக்கறிஞருமான சஞ்சய்காந்தியுடன் புவிசார் குறியீடு பெற்ற பொருள்களின் விற்பனை குறித்துப் பேசினோம்.

``மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் இந்தியாவில் புவிசார் குறியீடு பெற்ற பொருள்களுக்காக மட்டுமே தனி லோகோவை சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது. அந்த முத்திரையைக் குறிப்பிட்ட பொருள்களில் பதிப்பதால், அதன் நம்பகத்தன்மை அதிகரிக்கும்.

தமிழக அரசு தமிழகத்தில் செய்யப்படும் பொருள்களின் விற்பனையை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருப்பது முத்தாய்ப்பான விஷயமாகப் பார்க்கப்படுகிறது. இதன்மூலம் அந்த கைவினைத் தொழில்கள், பாரம்பர்யம் காக்கப்படுவதுடன் அவற்றின் உற்பத்தியாளர்கள் உயர்வதற்கான வழிவகை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு புவிசார் குறியீடு பெற்ற பொருள்களுக்கென்றே தனி இணையதளம் தொடங்கி சந்தை வாய்ப்பை அதிகப்படுத்தினால், அதன் வர்த்தகம் இன்னும் பல மடங்கு அதிகரிக்க நிறையவே வாய்ப்பிருக்கிறது'' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism