Published:Updated:

கொரோனாவால் விடைபெறுகிறதா உலகமயமாக்கல்..? - அதிகரிக்கும் சுயசார்பு விருப்பம்..!

கொரோனா
பிரீமியம் ஸ்டோரி
News
கொரோனா

சர்வதேசப் பரவல்கொண்ட ஒரு நோயை எதிர்கொண்ட உலக நாடுகள் மிகவும் எச்சரிக்கையுடனேயே செயல்பட ஆரம்பிக்கும்.

‘உலகம் தட்டையானது’ (The World is Flat) - உலகமயமாக்கல் குறித்து தாமஸ் எல்.ஃப்ரைடுமேன் (Thomas Friedman) 15 ஆண்டுகளுக்கு முன்னர் (2005-ல்) எழுதி வெளியிட்ட புத்தகம். முன்பெல்லாம், அமெரிக்காவில் ஒரு விஷயம் நடந்தால், அது இந்தியாவில் நடப்பதற்கு பத்து இருபது ஆண்டுகள் ஆனது.

காலம் செல்லச் செல்ல இந்த ஆண்டுகளின் இடைவெளி குறைந்துகொண்டே வந்தது. இணையப் பயன்பாடு வந்த பிறகு, நேற்று அமெரிக்காவில் நடந்தது, இன்று இந்தியாவில் நடக்கிறது. பூமி உருண்டையாக இருக்கலாம்; ஆனால், இன்றும் உலகம் தட்டையானதற்குக் காரணம் உலகமயமாக்கல்தான் என்பதை உலக அளவில் பல்வேறு உதாரணங்களுடன் ஆணித்தரமாக எடுத்துச் சொன்னது இந்தப் புத்தகம்.

கொரோனாவால் விடைபெறுகிறதா உலகமயமாக்கல்..? - அதிகரிக்கும் சுயசார்பு விருப்பம்..!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஆனால், கொரோனாநோய்த் தொற்று, உலகையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த உலகமயமாக்கலின் ஆணிவேரை அசைத்துப்பார்த்துவிட்டது. எல்லா விஷயங்களுமே பரிசீலனைக்கு உட்படவேண்டிய கட்டாயத்திலிருக்கும் இன்றைய நிலையில், உலகமயமாக்கலின் எதிர்காலமும் கேள்விக்குள்ளாகத் தொடங்கியிருக்கிறது.

உலகமயமாக்கல் என்பது...

உலகமயமாக்கல் என்பது பல்வேறு நாடுகளுக்கு இடையேயான பொருளாதார மற்றும் வர்த்தக நடைமுறைகளின் தொகுப்பு ‘உலகமயமாக்கல்’ உற்பத்திப் பொருள்கள், சேவைகள், தொழிலாளர்கள், தொழில்நுட்பம் மற்றும் முதலீடு ஆகியவை உலக நாடுகள் மத்தியில் சுலபமாகச் சென்றடைய பேருதவிபுரிகிறது. கடந்த நான்கு நூற்றாண்டுகளில் மெள்ள மெள்ள வளர்ந்த இது, கடந்த நூறு ஆண்டுகளில் மிகப்பெரும் வளர்ச்சி கண்டது. இதன் விளைவாக, அதிகாரமும் ஆதிக்கமும் ஒரே இடத்தில் குவியத் தொடங்கின. தொழில் நுட்பத்தில் ஏக போகம், பங்கு மற்றும் நிதிச் சந்தைகளில் ஒருசில நாடுகளே ஆதிக்கம் செலுத்தும் ஏகபோகம், உலக இயற்கை வளங்களைப் பயன்படுத்துவதில் ஏகபோகம், ஊடகம் மற்றும் தொலைத் தொடர்புத் துறையில் ஏகபோகம் என உலகமயமாக்கலில் பல சச்சரவுகள் இருந்தன. ஆனாலும், உலகமய மாக்கல் தவிர்க்க முடியாத ஒன்று என்ற எண்ணமே எல்லோர் மனதிலும் ஆழமாகப் பதிந்திருந்தது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

போக்கை மாற்றிய கொரோனா..!

2008-ம் ஆண்டில் அமெரிக்கா சந்தித்த நிதி நெருக்கடி, சமீபத்திய சீனா- அமெரிக்காவுக்கு இடையே உருவான வர்த்தகப் போர் போன்றவற்றுடன் கொரோனாவும் சேர்ந்து, பிரச்னையைப் பூதாகரமாக்கிவிட்டது. `உலகப் பொருளாதாரம் ‘U’, ‘V’ அல்லது ‘W’ என்ற வடிவில் சிக்கலிலிருந்து மீண்டுவரும்’ எனப் பொருளாதார வல்லுநர்கள் சொல்கிறார்கள். `அப்படிப்பட்ட மாற்றம் வருமா...’ என்றால், அதற்கான பதிலைக் கண்டறியப் பின்வரும் விஷயங்களை கவனிக்க வேண்டியது அவசியம்.

கொரோனாவால் விடைபெறுகிறதா உலகமயமாக்கல்..? - அதிகரிக்கும் சுயசார்பு விருப்பம்..!

சாவு மணியடித்த அமெரிக்கா..!

2008-09-ம் ஆண்டில் அமெரிக்காவில் உருவான நிதி நெருக்கடியிலிருந்தே `உலகமயமாக்கல்’ என்ற நடைமுறைக்கு எதிரான காலம் உருவாகிவிட்டது. அமெரிக்க நிதிச் சிக்கலுக்குப் பிறகு, அமெரிக்க அரசால் பெரிய அளவில் எடுக்கப்பட்ட பொருளாதாரப் பாதுகாப்புக்கான நடவடிக்கைகள் எதுவுமே எடுபடவில்லை. தொண்ணூறுகளில் உலகமயமாக்கல் கண்ட வளர்ச்சி வேகம், 2010-ம் ஆண்டுக்குப் பிறகு இல்லை.

இந்தக் காலகட்டத்தில் சீனா பொருளாதார ரீதியாக பெரியதொரு வளர்ச்சியைச் சந்தித்து, அதன் உள்நாட்டுச் சந்தையை வளர்க்கும் முயற்சிகளை எடுக்க ஆரம்பித்தது. இதே காலகட்டத்தில் உலகமயமாக்கலின் அச்சாணி போன்ற சரக்குப் போக்குவரத்துக்கான கட்டணமும் பெரிய அளவில் குறையவில்லை. இதற்கிடையே, கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிபராக ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப் பட, அமெரிக்காவின் உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைகளின் பாதுகாப்புக்கான நடவடிக்கைகள் ஒரேயடியாக அதிகமாக்கப்பட்டுவிடுமோ என்ற பயமே அனைத்து நாடுகளின் மனதிலும் தோன்றியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வர்த்தகரீதியான சிக்கல்கள் அதிகரித்த வேளையில், 2018-ம் ஆண்டில் அமெரிக்கா சீனாவுடன் வர்த்தகப் போரை முன்னெடுத்தது. எக்கச்சக்கமான தீர்வைகள் விதிக்கப்பட்டன. 2019-ன் ஆண்டில் பாதிக்குமேல் இந்தச் சச்சரவுகள் கொஞ்சம் தணிந்து, ஒப்பந்தம் போடும் நிலைமை உருவானது. இந்தப் பிரச்னைகளெல்லாம் தீர்ந்து, 2020-ம் ஆண்டில் எல்லாம் சுபமாக இருக்கும் என்ற எண்ணம் பிரகாசமாகத் தோன்றிய வேளையில், அந்த எண்ணத்தைச் சீர்குலைக்கும் வகையில் கொரோனா வந்துவிட்டது. ஏற்கெனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, அமெரிக்காவிலிருந்து செய்யும் இறக்குமதியை சீனா அதிகரிக்க வேண்டும். கொரோனாவால் சீனாவின் பொருளாதாரம் சீர்குலைந்திருக்கும் நிலையில் அந்த நாடு ஏற்றுமதியை எப்படி அதிகரிக்கும்?

கொரோனாவால் விடைபெறுகிறதா உலகமயமாக்கல்..? - அதிகரிக்கும் சுயசார்பு விருப்பம்..!

அதுமட்டுமல்ல, கண்டம் விட்டு கண்டம் போகும் முதலீடுகள் (எஃப்.டி.ஐ) கொரோனாவின் தாக்கத்தால் எந்த அளவுக்கு பாதிப்படையும், உலக நாடுகளின் மத்தியில் பணப்புழக்கம் (முதலீடு/கடன்/வேற்றுநாட்டில் பணிபுரியும் பணியாளர்கள் தங்கள் நாட்டுக்கு அனுப்பும் பணம் எனப் பலவும்) எந்த அளவுக்கு பாதிப்படையும் போன்ற கேள்விகளுக்கு இன்றைக்கு யாராலும் குத்துமதிப்பாகக்கூட பதில் சொல்ல முடியாத நிலையே இருக்கிறது.

ஏன் இந்த நிலையெனில், கோவிட்-19 உருவாக்கிய பொருளாதார பாதிப்பு, வேலையின்மை, பயணம் செய்வதற்கான உச்சக்கட்டக் கட்டுப்பாடுகள் போன்றவை மக்களின் தேவைகளைக் கடுமையாகக் குறைத்துவிடும் வல்லமை வாய்ந்தவை. `கோவிட்-19 பிரச்னைக்கு ஒரு முடிவு வந்துவிட்டதென்றால் எல்லாம் சரியாகிவிடுமா...’ என்று கேட்டால், அதற்கும் உறுதியாக எந்த பதிலும் சொல்ல முடியாது. `கொரோனாவுக்குப் பிறகு எல்லா நாடுகளிலிருந்தும், எல்லாப் பொருள்களும் ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படுமா...

’ என்று கேட்டால், `கொஞ்சம் சந்தேகம்தான்’ என்று சொல்லும் நிலையே நிலவுகிறது. ஏனென்றால், சர்வதேசப் பரவல்கொண்ட ஒரு நோயை எதிர்கொண்ட உலக நாடுகள் மிகவும் எச்சரிக்கையுடனேயே மீண்டும் செயல்பட ஆரம்பிக்கும்.

இதன் விளைவு, சுயசார்பு குறித்து உலக நாடுகள் தீவிரமாக யோசிக்க ஆரம்பித்து விட்டன. நாடுகளுக்கு இடையேயான பயணம், வர்த்தகம், வேலைவாய்ப்பு (விசா) போன்றவற்றிலெல்லாம் இதன் பாதிப்பு எதிரொலித்து, அதன் காரணமாக புவிசார் அரசியலில் ஒரு நிச்சயமற்ற தன்மை உருவாக வாய்ப்பிருக்கிறது. ‘கொஞ்சம் காலம் கழித்து முடிவெடுப்போம். இப்போதைக்கு கட்டுப்பாடுகள் இருந்துவிட்டுப் போகட்டும்’ என்ற எண்ணமே எல்லா நாடுகளின் மத்தியிலும் மேலோங்க வாய்ப்பிருக்கிறது.

கொரோனா ஏற்படுத்திய பொருளாதாரத் தாக்கத்தால் மக்களின் தேவைகள் கடுமையாகக் குறையும் அல்லது சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் தலைதூக்கும் நிலையில், உலக அளவிலான வர்த்தகத்துக்கு வாய்ப்புகள் குறையவே செய்யும். பயணம் செய்வதற்கான கட்டுப்பாடுகள் அதிகமிருக்கும் என்பதால், அனைத்துவிதமான வழிகளிலும் (ஆகாயம், தரை மற்றும் கடல்) பயணிகள் குறைவாகவே பயணிப்பார்கள். கொரோனாநோய்த் தொற்றின் தாக்கம் ஓரளவுக்கு அடங்கும்வரை நாடுவிட்டு நாடு சென்றால், அங்கு சில நாள்கள் தனிமைப்படுத்தப்படுவதற்கான வாய்ப்பு இருக்கவே செய்கிறது. இதையெல்லாம் மனதில் கொண்டு பயணிகள் குறைவான எண்ணிக்கையில் பயணிக்க வாய்ப்பிருப்பதால், குறைந்த எண்ணிக்கையிலான விமானங்களே இயக்கப்படும். இதனால் குறைந்த அளவிலான கார்கோ சரக்குகளே (பயணிகள் விமானத்தில் செல்லும் வகையறா) நாடுவிட்டு நாடு செல்ல வாய்ப்பிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் என்ன முயன்றாலும் சரக்கு வர்த்தகத்தை அதிகரிக்க முடியாது.

கொரோனாவால் விடைபெறுகிறதா உலகமயமாக்கல்..? - அதிகரிக்கும் சுயசார்பு விருப்பம்..!

உலகளாவிய வர்த்தகத்தில் சாதாரண நாள்களிலேயே அரசாங்கங்களுக்கு இடையே அவ்வப்போது உரசல்கள் இருக்கும். கொரோனாவுக்குப் பிறகான சுழலில் பல்வேறு நாடுகளுக்கு இடையேயான உரசல்களுக்குப் பஞ்சமே இருக்காது. ‘நீ இதைச் செய்தால் நான் அதைச் செய்வேன்’ என நாடுகளுக்கு இடையே தடைகளை உருவாக்குவதில் போட்டி வந்துவிடவே வாய்ப்புகள் அதிகம். ஆக, முதலீடு செய்வதில் தயக்கம், ஏற்றுமதி/இறக்குமதி வர்த்தகத்தில் சுணக்கம், பயணம் செய்வதில் நடுக்கம், சுயசார்பின் மீது அதிகரிக்கும் விருப்பம் என எல்லாம் சேர்ந்து உலக ஜி.டி.பி வளர்ச்சியில் பெரிய பாதிப்பைக் குறுகிய காலத்திலேயே ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம். இதனால் உலகளாவிய உற்பத்திப் பொருள்களின் வர்த்தகம் கணிசமாகக் குறையவே வாய்ப்புகள் அதிகம். இந்த நிதியாண்டின் முதல் இரண்டு மாத உலக நாடுகளின் ஏற்றுமதி/இறக்குமதி குறித்த புள்ளிவிவரங்களைப் பார்த்தால், அது உண்மை என்று தெரியும்.

இவற்றையெல்லாம் தாண்டி, அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் கொரோனா பாதிப்புக்காக நிறுவனங்களுக்கு உதவி செய்யும் நோக்கில் அந்த நாடுகளின் ஃபெடரல் ரிசர்வ்கள் வாயிலாகத் தரப்படும் நிதி உதவிகளைப் பெறும் நிறுவனங்கள், அந்தந்த நாடுகளில் உற்பத்தி வசதியையும், வேலை வாய்ப்பையும் உருவாக்குவதாக இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகள்கூட எதிர்காலத்தில் கொண்டு வரப்படலாம். இந்தவிதக் கட்டுப்பாடுகள் உலகமயமாக்கலுக்கு எதிரான செயல்பாடுகளை ஊக்குவிக்கும் விதமாகவே அமையும். நிலைமை ஓரளவுக்குமேல் கட்டுக்கடங்காமல் போனால் அமெரிக்காவில் சீன நிறுவனங்கள் முதலீடு செய்வதிலும், அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் முதலீடு செய்வதிலும் பெரிய அளவிலான கட்டுப்பாடுகள் இரு தரப்பிலும் உருவாகிவிடும் சூழ்நிலை உருவாகலாம்.

தடைகள் மற்றும் கட்டுப்பாடுகள் ஏதுமற்ற உலகமயமாக்கல் என்ற நோக்கத்தில் செயல்பட்ட உலகில், உள்நாட்டுப் பொருளாதாரத்தின் பாதுகாப்பு மற்றும் சுயசார்பு போன்ற கொள்கை முழுக்கங்கள் எழுவது கொரோனாவுக்குப் பிறகு அதிகரித்துள்ளது.

இதனால் உலக வர்த்தகத்தில் தடைகள் அதிக அளவில் உருவாக வாய்ப்புள்ளதே தவிர, உலகமயமாக்கல் மூலம் நடக்கும் வர்த்தகத்தைச் சுலபமாக்கும் வாய்ப்புகள் குறைவு.

இந்தப் போக்கு அடுத்துவரும் ஆண்டுகளில் பலமடையத் தொடங்கினால், உலகமயமாக்கல் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும். இதன் நீட்சியாக, இதுவரை நம்மைக் கட்டியாண்ட உலகமயமாக்கல் என்ற நடைமுறையே காலாவதியாகும் சூழல் ஏற்படலாம்.

- நாணயம் விகடன் டீம்