Published:Updated:

கொரோனா காலத்திலும் குறையாத இந்தியாவின் தங்க மோகம்; எகிறிய தங்க இறக்குமதி!

Gold
Gold ( Photo by vaibhav nagare on Unsplash )

ஏப்ரல் - ஜூன் காலகட்டத்தில் இந்தியாவில் 120.4 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 10.9 டன் தங்கம் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டிருந்தது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இந்திய மக்களுக்கு தங்கத்தின் மீதான மோகம் எப்போதும் குறைவதேயில்லை என்பதை நிரூபிக்கும் விதமாக, கொரோனா பெருந்தொற்றுக் காலத்திலும் இந்திய மக்கள் அதிக அளவில் தங்கத்தை வாங்கியிருக்கிறார்கள் என்கிறது சமீபத்திய உலக தங்க கவுன்சிலின் அறிக்கை.

இந்த அறிக்கையின்படி, இந்தியாவில் தங்கம் இறக்குமதி செய்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தாலும், இந்தியாவில் தங்கத்திற்கான தேவை 19.2% அதிகரித்து, கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் 76.1 டன்னாக உயர்ந்துள்ளது. இதனுடைய மதிப்பு ரூ.32,810 கோடியாகும்.

Gold
Gold
Gold Loan: அடகுக்கடைகளில் நகைக்கடன் பெறப்போகிறீர்களா? இவற்றை நிச்சயம் தெரிந்துகொள்ளுங்கள்!

கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இது ரூ.26,600 கோடியாக இருந்தது. ஆபரணத் தங்கத்தின் தேவை கடந்த 2020-ம் ஆண்டைவிட தற்போது 25% அதிகரித்து, 55.1 டன்னாக உயர்ந்துள்ளது. இதனுடைய மதிப்பு கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, 29% அதிகரித்துள்ளது.

அதே போல, ஜூன் காலாண்டில் தங்கத்தின் மீதான முதலீட்டுத் தேவையும் 6% அதிகரித்துள்ளது. ஏப்ரல் - ஜூன் காலகட்டத்தில் இந்தியாவில் 120.4 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் நாடு முழுவதும் பரவலாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக நகைக்கடைகள் மூடப்பட்டிருந்தன. எனவே மக்களால் தங்கத்தை வாங்க முடியாத சூழல் இருந்ததால், அந்த காலக்கட்டத்தில் வெறும் 10.9 டன் தங்கம் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டிருந்தது.

Gold (Representational Image)
Gold (Representational Image)
Photo by vaibhav nagare on Unsplash
விற்பனைக்கு வந்த RBI தங்கப்பத்திரம்: தங்க நகைகளை விடவும் இது எப்படி லாபகரமானது?

கொரோனா ஊரடங்கு காலத்திலும் கட்டுப்பாடுகளுடன் திருமண சுபநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இப்போதும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்திய மக்களின் அந்தஸ்து அடையாளமாக தங்கம் மாறியிருப்பதால், திருமணச் சடங்குகளில் தங்கம் நீங்கா இடம்பிடித்திருக்கிறது.

வரும் காலங்களிலும் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் வரவிருப்பதால் தங்கத்தின் தேவை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதேபோல் முதலீடுகளும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு