Published:Updated:

`மொத்தமே 50 கிலோதான்!’ - ஏப்ரல் மாதத்தில் தங்கம் இறக்குமதியில் வரலாறு காணாத வீழ்ச்சி

தங்கம் இறக்குமதி
தங்கம் இறக்குமதி ( vikatan )

ஏப்ரல் மாதத்தில் வெறும் 50 கிலோ தங்கம் மட்டுமே இறக்குமதியாகியுள்ளது. ஆனால், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 110.18 டன் தங்கம் இறக்குமதியாகியுள்ளது.

தங்கத்தை அதிகமாக விரும்பி வாங்கும் உலக நாடுகளின் வரிசையில் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. ஒவ்வோர் ஆண்டும் விற்பனை அதிகரிக்கும் துறைகளில் இதுவும் ஒன்றாகும்.

சென்ற ஏப்ரல் மாதத்தில், கொரோனா ஊரடங்கு காரணமாக, இந்தியாவின் தங்கம் இறக்குமதி வரலாறு காணாத வகையில் 99.9% வீழ்ச்சியடைந்துள்ளது. இது, கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய வீழ்ச்சியாகும்.

விமானப் போக்குவரத்து
விமானப் போக்குவரத்து

இந்தியாவுக்கான தங்கம் இறக்குமதியில் விமானப் போக்குவரத்துதான் முக்கியப் பங்காற்றுகிறது. கொரோனா பரவலைத் தடுக்கும்விதமாக கடந்த மார்ச் மாத இறுதியிலிருந்தே உள்நாட்டு, வெளிநாட்டு விமானப்போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டது.

விமானப் போக்குவரத்து தடை காரணமாக, ஏப்ரல் மாதத்தில் வெறும் 50 கிலோ தங்கம் மட்டுமே இறக்குமதியாகியுள்ளது. ஆனால், கடந்த ஆண்டு (2019) ஏப்ரல் மாதத்தில் 110.18 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. இரண்டையும் ஒப்பிடுகையில் தற்போது சுமார் 99.9% அளவுக்கு இறக்குமதி குறைந்துள்ளது. விலை மதிப்பு அளவில் பார்க்கும்போது, நடப்பு ஏப்ரலில் 2.84 மில்லியன் டாலர் அளவுக்கு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு (2019) ஏப்ரல் மாதத்தில் 3.97 பில்லியன் டாலர் அளவுக்கு இறக்குமதியாகியுள்ளது.

தங்கம் இறக்குமதி
தங்கம் இறக்குமதி
vikatan

விமானப் போக்குவரத்து சேவைக்கு ஏற்பட்டுள்ள தடை, மே மாதத்திலும் தொடரும்பட்சத்தில், தங்கம் இறக்குமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, மே மாதத்திலும் தொடரக்கூடும் என்று பொருளாதாரத் துறையைச் சார்ந்தவர்கள் கருதுகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு