Published:Updated:

Gold Rate: `வரலாறு காணாத புதிய உச்சம்!’ - ஊரடங்கில் கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை

தங்கம்
தங்கம்

தமிழகத்தில் ஒரு சவரன் தங்கம் விலை ரூபாய் 38,000-த்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சம் தொட்டுள்ளது.

சீனாவின் வுகான் நகரிலிருந்து முதன் முதலில் பரவத்தொடங்கியதாகக் கூறப்படும் கொரோனா வைரஸ் உலகின் அனைத்து மூலைக்கும் பரவி மொத்த மனிதக்குலத்தின் இயல்பு வாழ்க்கையையும் மிகக் கடுமையாகப் பாதித்துள்ளது. இதனால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் சர்வதேச அளவில் பெரும்பாலான தொழில்துறைகள் முடங்கிப்போயுள்ளன. எனவே உலக முதலீட்டாளர்கள் தங்களின் பாதுகாப்பு நலன் கருதி தங்கத்தில் அதிகப்படியான முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். இதனால் தமிழகத்தில் தங்கத்தின் விலை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

தங்கம்
தங்கம்

மார்ச் மாதத்தில் அனைத்து நாடுகளும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டபோது தமிழகத்தில் தங்கம் விலையில் பெரிதாக மாற்றம் எதுவும் இல்லாமல் ஒரு சவரன் தங்கம் 30,000-க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வந்தது. பின்னர், இதன் விலையில் சிறிய அளவில் ஏற்ற இறக்கம் இருந்தது. தொடர்ந்து ஜூன் 24-ம் தேதி முன் எப்போதும் இல்லாத வகையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 37,272 ரூபாய்க்கு விற்பனையானது. அதன் பிறகும் தங்கத்தின் விலையில் பெரிதாக மாற்றம் நிகழவில்லை.

`சென்ற ஆண்டு 77.7 டன்; இந்த ஆண்டு 11 டன்!’ -தங்கம் இறக்குமதி வீழ்ச்சிக்கு என்ன காரணம்?

இதையடுத்து நேற்று முன் தினம் ஒரு சவரன் 37,736 ரூபாய்க்கும் ஒரு கிராம் தங்கம் ரூ. 4,717-க்கும் விற்பனையானது. இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சம் தொட்டு ஒரு கிராம் ரூ.4847 -க்கும் ஒரு சவரன் தங்கம் 38,776 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வெள்ளி விலை ரூ. 66.60 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம்
தங்கம்

`இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காலத்தில் மட்டும் தங்கத்தின் விலை 25 சதவிகிதம் உயர்ந்துள்ளதாகவும் அதில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு 25% லாபம் அடைந்துள்ளனர். இந்த மாத இறுதிக்குள் தங்கத்தின் விலை 39,000-த்தைத் தொடும்’ என சென்னை தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு