Published:Updated:

மீண்டும் ஏற்றத்தில் தங்கம்; முதலீடு செய்ய, நகை வாங்க இது சரியான நேரமா?

தங்கம்

தற்போது மீண்டும் இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை மற்றும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருவதால், மீண்டும் தங்கத்தின் மீது மக்களின் கவனம் சென்றிருப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

மீண்டும் ஏற்றத்தில் தங்கம்; முதலீடு செய்ய, நகை வாங்க இது சரியான நேரமா?

தற்போது மீண்டும் இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை மற்றும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருவதால், மீண்டும் தங்கத்தின் மீது மக்களின் கவனம் சென்றிருப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

Published:Updated:
தங்கம்
கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் எதிரொலியால் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில நாள்களாக உயர்ந்து வருகிறது. தங்கத்தின் விலை இன்னும் உயருமோ என்கிற கவலை பலரையும் பீடித்திருக்கிறது.

22.01.2022-ம் தேதியான இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,588-ஆக அதிகரித்துள்ளது. நேற்று இதன் விலை 4,572 ரூபாயாக இருந்தது. அதேபோல, நேற்று 36,576 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம், 128 ரூபாய் அதிகரித்து 36,704 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இதே தேதியில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,660-ஆக இருந்தது. அந்த விலையுடன் ஒப்பிடும்போது, இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.72 ரூபாய் குறைந்து வர்த்தகமாகி வருகிறது. அதாவது, ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.576 குறைந்துள்ளது.

தங்கம் முதலீடு
தங்கம் முதலீடு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கடந்த 2020-ம் ஆண்டில் கொரோனா பெருந்தொற்றினால் அனைத்து உலக நாடுகளுமே அதிகமாக பாதிக்கப்பட்டிருந்த போது, மக்கள் பாதுகாப்பான முதலீடாக நினைத்து தங்கத்தில்தான் அதிகமாக முதலீடு செய்தார்கள். அதனால் தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து அந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.5,416-க்கு வர்த்தகமானது. தற்போது வரை இதுதான் தங்கத்தின் உட்சபட்ச விலையாக இருந்து வருகிறது. தங்கத்தின் தற்போதைய வர்த்தக விலையை உச்சபட்ச விலையுடன் ஒப்பிடும்போது, ஒரு கிராமுக்கு 828 ரூபாயும், ஒரு பவுனுக்கு ரூ.6,624 ரூபாயும் குறைந்துள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கனடாவின் கோல்டு மைனிங் நிறுவனமான `கோல்டுகார்ப் இன்க்' நிறுவனத்தின் முன்னாள் தலைவர்களான டேவிட் கரோஃபாலோ மற்றும் ராப் மெக்வென், ``உலகில் தற்போது பணவீக்கமானது அதிகரித்து வருகிறது. பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளும் இதனை உன்னிப்பாக கவனித்துவரும் நிலையில், இந்தப் பணவீக்கமானது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதரவாக அமைய வாய்ப்பு இருக்கிறது. அதனால் தங்கத்தின் விலை அதிகரிக்கும் என சொல்லியிருந்ததை ஏற்கெனவே விகடன்.காமில் நாம் எழுதியிருந்தோம்.

அந்தக் கட்டுரையைப் படிக்க...

தற்போது மீண்டும் இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை மற்றும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருவதால், மீண்டும் தங்கத்தின் மீது மக்களின் கவனம் சென்றிருப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். அதனால் தங்கத்தின் விலை இனிவரும் நாட்களில் அதிகரிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது. அதனால் தங்கத்தில் தேவை இருப்பவர்கள் இப்போது வாங்கி வைக்கலாம். முதலீட்டாளர்களுக்கும் தங்கத்தில் முதலீடு செய்ய இது சரியான தருணம் என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism