Published:Updated:

தங்கம்: ஓராண்டில் ₹8,000, கடந்த 10 நாள்களில் ₹1,400 விலை வீழ்ச்சி; தங்கம் வாங்க சரியான நேரமா?

Gold
Gold ( Photo by vaibhav nagare on Unsplash )

முதலீட்டாளர்கள் அதிக அளவில் தங்கத்தில் முதலீடு செய்தார்கள். இதனால் தங்கத்தின் விலை வரலாறு காணாத ஏற்றத்தை சந்தித்தது. அதன்பிறகு...

கடந்த ஆண்டின் இதே தேதியில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 5,365 ரூபாய்க்கு வர்த்தகமானது. ஆனால், இன்று (10.8.2021) ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 4,373 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

கொரோனா காலகட்டத்தில், பங்குச் சந்தை மற்றும் பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளைத் தவிர்த்து, பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை நினைத்து, முதலீட்டாளர்கள் அதிக அளவில் அதில் முதலீடு செய்தனர். இதனால் தங்கத்தின் விலை வரலாறு காணாத ஏற்றத்தைச் சந்தித்தது. அதன்பிறகு, கொரோனாவின் தாக்கம் மெள்ள மெள்ள குறைய, மீண்டும் பங்குச் சந்தை மற்றும் அது சார்ந்த முதலீடுகள் ஏற்றத்தைச் சந்திக்க, முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் மீதிருந்து மற்ற முதலீடுகளின் மீது திரும்பியது.

தங்கம்
தங்கம்
Gold Loan: அடகுக்கடைகளில் நகைக்கடன் பெறப்போகிறீர்களா? இவற்றை நிச்சயம் தெரிந்துகொள்ளுங்கள்!

இதன் காரணமாக ராக்கெட் வேகத்தில் ஏறிய தங்கத்தின் விலை, மளமளவெனச் சரிய ஆரம்பித்தது. தொடர்ந்து சரிந்துகொண்டே இருக்கிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இதே தேதியில் தங்கம் விற்பனையான விலையுடன் , தற்போது விற்பனையாகும் தங்கத்தின் விலையை ஒப்பிடும்போது, ஒரு சவரனுக்கு ரூ.7,936 குறைந்து வர்த்தகமாகிறது. கடந்த 10 நாள்களில் மட்டும் ரூ.1,400 குறைந்துள்ளது. அதாவது, ஆகஸ்ட் 1-ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.4,548-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.36,384-க்கும் வர்த்தகமானது. இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.4,373-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.34,984-க்கும் வர்த்தகமாகிறது.

Gold (Representational Image)
Gold (Representational Image)
Photo by vaibhav nagare on Unsplash
கொரோனா காலத்திலும் குறையாத இந்தியாவின் தங்க மோகம்; எகிறிய தங்க இறக்குமதி!

தங்கம் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்துவருவது தங்க நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேவைக்காக தங்கம் வாங்குபவர்களுக்கு மட்டுமல்லாமல், முதலீட்டாளர்களுக்கும் இது பொன்னான நேரம் என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு