Published:Updated:

Gold Rate: உச்சத்திலிருந்து ₹8,336 சரிவு; தங்கம் வாங்க சரியான தருணமா இது?

வரலாற்று உச்சத்தைத் தொட்ட தங்கம் விலை, அன்றிலிருந்து இறக்கத்தின் போக்கிலேயே விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. தங்கம் மீண்டும் உச்சத்தைத் தொடுமா? இறக்கத்துக்கு என்ன காரணம்?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கடந்த 2020-ம் வருடம் ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கத்தின் விலை, ஆகஸ்ட் 7, 2020-ல் வரலாற்று உச்சத்தைத் தொட்டு, ஒரு சவரன் (8 கிராம்) ரூ.43,328-க்கு விற்பனையானது.

ஒரு கிராம் தங்கம் அன்று ரூ.5,416-ஆக இருந்தது. அந்த விலையுடன் ஒப்பிடும்போது, நேற்று (21.09.2021) ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.8,336 குறைந்து ரூ.34,992-ஆக விற்பனையானது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,374.

வரலாற்று உச்சத்தைத் தொட்ட தங்கம் விலை, அன்றிலிருந்து இறக்கத்தின் போக்கிலேயே விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. தங்கம் மீண்டும் உச்சத்தைத் தொடுமா? இறக்கத்துக்கு என்ன காரணம்? என்கிற கேள்விகளை கமாடிட்டி நிபுணர் ஷியாம் சுந்தரிடம் கேட்டோம்.

தங்கம்
தங்கம்
இன்னும் தங்க நகைகள் மூலம்தான் தங்கத்தில் முதலீடு செய்கிறீர்களா? ஒரு நிமிஷம் ப்ளீஸ்! #HerMoney - 5

``கொரோனாவின் கோர தாண்டவத்தால் கடந்த 2020-ம் ஆண்டில் அனைத்து நாடுகளில் பங்குச்சந்தைகளும் ஆட்டம் கண்டன. இதனால் மிகப்பெரிய வீழ்சியை பங்குச் சந்தைகள் சந்தித்தன. இந்தியப் பங்குச் சந்தைகளான சென்செக்ஸ், நிப்ஃடியும் பெருமளவு வீழ்ச்சியைச் சந்தித்தது. இதன் காரணமாக பங்குச்சந்தை மற்றும் பங்குச்சந்தை சார்ந்த முதலீடுகளிலிருந்து பணத்தை எடுத்து, பாதுகாப்பு முதலீடுகளில் ஒன்றான தங்கத்தில் அதிக அளவில் முதலீடு செய்தனர். தங்கத்தில் முதலீடு பெருகியது, தேவை அதிகரித்தது, வரலாறு காணாத உச்சத்தைத் தங்கம் தொட்டது.

கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை, இந்தியா உட்பட உலக நாடுகளில் ஊரடங்கு காலம் நீட்டிக்கப்பட்டுக் கொண்டிருந்தது வரை, கொரோனாவால் நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் செயல்படாமல் முடங்கிப் போயிருந்தது வரை தங்கத்தின் ஏற்றத்தின் போக்கில் மாற்றம் இல்லை. ஆனால், தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, கொரோனாவின் பிடியில் இருந்து உலகம் தளர்வடைந்தது. மீன்டும் பங்குச்சந்தைகள் ஏற்றமடைந்தன. மக்களின் கவனம் தங்கத்திலிருந்து மீண்டும் பங்குச்சந்தை மற்றும் அது சார்ந்த முதலீடுகளின் மீது தாவியது. இதனால் தங்கத்தின் விலை ஏறிய வேகத்தில் இறங்கவும் ஆரம்பித்தது.

ஃபெடரல் கமிட்டி கூட்டம்!

FOMC
FOMC

அமெரிக்காவில் இரண்டு நாள்களாக `Federal Open Market Committee (FOMC)' கூட்டம் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் அந்நாட்டு வங்கி வட்டி விகிதங்களை உடனடியாக உயர்த்துவது குறித்த நடவடிக்கைகளை எடுக்காது என்றாலும், நடப்பு ஆண்டின் இறுதியில் அல்லது 2022-ம் ஆண்டில் எப்போது உயர்த்துவார்கள் என்கிற அறிவிப்புகள் வெளியாக அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. அல்லது வட்டி விகிதங்களை உயர்த்துவது குறித்து ஃபெடரல் கமிட்டியின் நிலைப்பாடு என்ன, உயர்த்தலாமா, வேண்டாமா என்பது பற்றிச் செய்திகள் வெளியாகும்.

குறையும் தங்கம் விலை... இ.டி.எஃப்பில் முதலீ டு வெளியேற்றம் ஏன்?

எப்போது உயர்த்தப்போகிறார்கள், எவ்வளவு உயர்த்தப் போகிறார்கள் என்கிற விஷயங்கள் வெளியானதும், அதன் பிரதிபலிப்பு தங்கத்தின் விலையில் எதிரொலிக்க வாய்ப்பு இருக்கிறது. ஒரு வேளை அடுத்த ஆண்டிலும் வட்டி விகிதங்களின் உயர்வு இருக்காது என்கிற செய்தி வெளியானால், அடுத்த ஆண்டில் நிச்சயமாகத் தங்கத்தின் விலை அதிகரிக்கும். அப்போது 2020-ம் ஆண்டைப்போல, தங்கம் தொடர் விலை ஏற்றத்தை சந்திக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தற்காலிக பணவீக்கம்!

அதே சமயம், கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி அமெரிக்காவின் `ஜாக்சன் ஹோல் (Jackson Hole)' என்கிற இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வல்லுநர்களின் குழு கூட்டம் நடந்து முடிந்திருக்கிறது. இந்தக் கூட்டத்தில் பேசப்பட்ட விஷயங்களையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். பொதுவாக, அமெரிக்காவின் பணவீக்க விகிதம் 1.6%-லிருந்து 2%-ஆக மட்டுமே இருக்கும். ஆனால், தற்போது இந்தப் பணவீக்கம் அமெரிக்காவில் மட்டுமல்லாமல் உலக அளவில் 3%-லிருந்து 3.5%-ஆக அதிகரித்துள்ளது. அதே போல சில்லறை பணவீக்க விகிதமும் அதிகரித்து காணப்படுகிறது.

ஷியாம் சுந்தர்
ஷியாம் சுந்தர்

இதன் காரணமாக அனைத்து வகையான பொருள்களில் விலையும் உயர்ந்துள்ளது. அதே சமயம் மக்களின் நுகர்வும் அதிகரித்து காணப்படுகிறது. இவை அனைத்தும் தற்காலிகமானது என அந்தக் கூட்டத்தில் முடிவாகியிருக்கிறது. தற்காலிக நுகர்வு, தற்காலிக பணவீக்க விகிதம் அதிகரிப்பு போன்ற காரணங்களுக்காக வங்கி வட்டி விகிதங்களை அதிகரிப்பது சரியாக இருக்காது என்கிற யோசனையும் அந்தக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டிருக்கிறது. இவற்றையெல்லாம் கருத்தில் கொன்டுதான் ஃபெடரல் கமிட்டி கூட்டம் நடக்கும் எனத் தெரிகிறது.

இப்போது தங்கம் வாங்கலாமா?

தேவைக்காக தங்கம் வாங்க நினைப்பவர்களுக்கும், முதலீட்டுக் கண்ணோட்டத்தில் தங்கத்தை அணுகுகிறவர்களுக்கும் இந்தத் தருணம் மிகச் சரியான தருணமாகும். இன்னும் விலை இறங்கும் எனக் காத்திருக்காமல் உடனே தங்கத்தை வாங்கலாம். தங்கத்தில் முதலீடு செய்யலாம். ஏனெனில், நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் சீராகி வருகின்றன. அனைத்து தொழில்துறைகளும் தன் பழைய இயக்க நிலைக்கு திரும்பியிருக்கின்றன.

Gold
Gold
தங்கத்தில் முதலீடு செய்யப்போகிறீர்களா? அதன் இந்த வடிவங்களையும் பரிசீலிக்கலாமே! - 19

அதனால் தங்கத்தின் விலையில் இன்னும் சில மாதங்களுக்கு இதே நிலை நீடிக்க வாய்ப்பிருக்கிறது. கடந்த சில மாதங் களாகவே ஒரு சில நூறு ரூபாய்க்குள்ளான ஏற்ற இறக்கத்தைதான் தங்கம் சந்தித்து வருகிறது. இந்த ஆண்டின் இறுதி வரையிலும்கூட இந்த `சைடு வேவ் மூவ்மென்ட்' இருக்கத்தான் செய்யும். மேலே குறிப்பிட்டபடி அடுத்த ஆண்டு தங்கத்தின் விலை ஏறுவதற்கு பிரகாசமான வாய்ப்புகள் இருக்கிறது" என்றார் தெளிவாக.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு