Published:Updated:

`இரான் அமெரிக்கா போர்ப் பதற்றம்!' - ரூ.41,000-த்தை எட்டிய 10 கிராம் தங்கம் விலை

தங்கம்
தங்கம்

நேற்று, 40,330 ரூபாய் என்றிருந்த 10 கிராம் தங்கம் விலையில், இரான்-அமெரிக்கா இடையே போர்ப்பதற்றம் ஏற்பட்டதுமே அதிரடி ஏற்றம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் உத்தரவின்பேரில், இரான்நாட்டு புரட்சிப் பாதுகாப்புப் படைத்தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டதால், இரான்-அமெரிக்கா இடையே போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக மும்பையில், 24 காரட் தங்கம் விலை 10 கிராமுக்கு 41,070 ரூபாயை எட்டியுள்ளது.

தங்கம்
தங்கம்

கடந்த செப்டம்பர் மாதத்தில் பண்டிகைக்கால விற்பனை காரணமாக 10 கிராம் தங்கம் விலை 40,000 ரூபாயைத் தொட்டது. அதன்பின்னர் கடந்த டிசம்பர் இறுதியில் 39,000 ரூபாயாக இறங்கியது.

புத்தாண்டுத் தொடக்கத்தில் மீண்டும் ஏறத் தொடங்கிய தங்கம் விலை, ஜனவரி ஒன்றாம் தேதி ரூ.40,225 என்றிருந்தது. நேற்று, மேலும் 5 ரூபாய் மட்டும் உயர்ந்து ரூ.40,330 என்றிருந்தது. இந்த நிலையில், இரான் - அமெரிக்கா இடையே போர்ப்பதற்றம் ஏற்பட்டதுமே தங்கம் விலையில் அதிரடி ஏற்றம் ஏற்பட்டுள்ளது. இன்று 10 கிராம் தங்கம் விலை 740 ரூபாய் அதிகரித்து 41,070 என்ற விலையை எட்டியுள்ளது. சென்னையில் 10 கிராம் தங்கம் விலை ரூ.41,380 ஆக உள்ளது.

தங்கம்
தங்கம்

இரான் - அமெரிக்கா இடையிலான போர்ப்பதற்றம் குறித்த செய்தியைக் கேள்விப்பட்டதுமே சர்வதேச தங்க மார்க்கெட்டில், மொத்த ஆர்டராக தங்கம் வாங்கப்படுவதால், இந்த விலையேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. போர்ப்பதற்றம் தொடரும்வரை இந்த விலையேற்றம் தொடருமென்றும் தெரிகிறது.

அடுத்த கட்டுரைக்கு