Published:Updated:

நாடு முழுவதும் ஒரே விலையில் தங்கம்... வாடிக்கையாளர்களுக்குப் பலன் தருமா..?

தங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தங்கம்

தங்கம்

நாடு முழுவதும் ஒரே விலையில் தங்கம்... வாடிக்கையாளர்களுக்குப் பலன் தருமா..?

தங்கம்

Published:Updated:
தங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தங்கம்

சர்வதேச அளவில் தங்கம் பொதுவான விலையில் வர்த்தகம் ஆனாலும், ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு விலைதான் நிர்ணயிக்கப்படுகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை, ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விலை விற்கப் படுகிறது. இதுபோக ஒவ்வொரு நகைக்கடை நிறுவனத்திலும் சேதாரம் வித்தி யாசப்படுவதால், ஒவ்வொரு விலை யில் விற்பனை செய்கின்றன. இது மக்களிடையே குழப்பத்தை உண்டாக்கிவிடுகின்றன.

இந்த நிலையில், நாடு முழுவதும் ஒரே விலையில் தங்கத்தை விற்பனை செய்வதற்கான முயற்சியை தென் இந்திய தங்க நகை விற்பனை யாளர்கள் முன்னெடுத்துள்ளனர். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங் களைச் சேர்ந்த தங்க நகை விற்பனையாளர்கள் கேரளாவின் கொச்சியில் ஒன்றுகூடி, ஒரே விலையில் விற்பனை செய்வதற்கான பேச்சு வார்த்தையை நடத்தினர்.

நாடு முழுவதும் ஒரே விலையில் தங்கம்... வாடிக்கையாளர்களுக்குப் பலன் தருமா..?

கேரளாவில் நடைபெற்ற இந்த ‘விலை நிர்ணய’க் கூட்டத்தில் மலபார், கல்யாண், லலிதா ஆகிய பிரபல ஜுவல்லரி நிறுவனங் களின் உரிமையாளர்கள் உட்பட பல நகைக் கடை வணிகர்கள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில், அனைவரும் ஒரே விலையில் விற்பனை செய்ய ஒருமனதாக ஒப்புக்கொண்ட தாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சென்னை தங்கம் மற்றும் வைர நகைக் கடை உரிமை யாளர்கள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானியிடம் பேசினோம்.

‘‘தங்கத்தின் விலை இடத்துக்கு இடம், கடைக்குக் கடை வித்தியாசப் படுகிறது. இது ஆபரண விற்பனை யில் தேவையற்ற போட்டியை உருவாக்குவதால், ஒரே விலை நிர்ணய முறையைக் கொண்டு வர முயற்சி செய்தோம்.

ஜெயந்திலால் சலானி
ஜெயந்திலால் சலானி

இதற்கான முயற்சியைப் பல முறை எடுத்து வந்த நிலையில், நகைக்கடை உரிமையாளர்களை ஒன்று கூட்டுவது சவாலாக இருந்தது. சென்னையில் திட்டமிட்டபோது எல்லாம் ஏதேனும் காரணங்களால் கூட்டத்தை ஏற்பாடு செய்ய முடியவில்லை. அதனால் இந்த முறை எல்லோருக்கும் வசதியாக கேரளாவின் கொச்சியில் கூட்டத்தைக் கூட்டினோம்.

இந்த முறை பெரும்பாலான நகைக் கடை உரிமையாளர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தங்கத்தின் விலை ஒவ்வோர் இடத்திலும் ஒவ்வொரு மாதிரியாக இருப்பது மக்களிடையே தேவையற்ற குழப்பத்தை உண்டாக்குவதாக இருந்தது. எனவே, ஒரே விலை நிர்ணய முறையைக் கொண்டு வருவதற் காகப் பேச்சு வார்த்தை நடத்தினோம். ஆரம்பத்தில் பலருக்கு இதில் விருப்பமில்லை என்றாலும், இறுதியில் ஒருமனதாக அனைவரும் ஒப்புக்கொண்டனர்.

கூட்டத்தில் ஒப்புக்கொண்டதும், அதை உடனே அமல்படுத்தவும் கேட்டுக்கொண் டோம். விரைவில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் 93.50% என்ற அளவில் விலை நிர்ணயம் செய்ய உள்ளனர். பல இடங்களில் இது நடைமுறைப்படுத்தப் பட்டு உள்ளது. மற்றவர்களும் இந்த விலை நிர்ணயத்துக்கு மாறுவார்கள் என்று நம்பு கிறோம். அதேபோல, விளம்பரங்களிலும் சேதாரம் குறித்து தெரிவிப்பதில் கவனம் தேவை என்பதையும் வலியுறுத்தியுள்ளோம்.

சங்கத்தின் சார்பில் நிர்ணயிக்கப்படும் விலையில் எந்தவிதத் தள்ளுபடியும் வழங்கக் கூடாது. இதன்மூலம் சமமான போட்டிச் சூழல் உருவாகும்; தங்கம் வாங்கும் வாடிக்கை யாளர்களுக்கும் பலன் கிடைக்கும்’’ என்றார்.

ஜெயந்திலால் சலானி குறிப்பிட்டதுபோல, தங்கம் ஒரே விலையில் நிர்ணயிக்கப்பட்டாலும் டிசைன், சேதாரம் உள்ளிட்ட காரணங்களால் மற்ற கட்டணங்கள் வித்தியாசப்படுவதால், இறுதி விலையானது முன்பின்தான் இருக்கும் என்கிறார்கள் வாடிக்கையாளர்கள். பார்ப்போம், என்ன நடக்கிறதென்று..!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism