Published:Updated:

“மகளுக்காக செய்த மரபொம்மை... இப்போ பிசினஸ் ஆகிடுச்சு!”

கைத்தொழில்
பிரீமியம் ஸ்டோரி
கைத்தொழில்

கைத்தொழில்

“மகளுக்காக செய்த மரபொம்மை... இப்போ பிசினஸ் ஆகிடுச்சு!”

கைத்தொழில்

Published:Updated:
கைத்தொழில்
பிரீமியம் ஸ்டோரி
கைத்தொழில்
கள்களுக்காக அப்பாக்கள் வாங்கிக் கொடுக்கும் பொம்மைகளில் அன்பு அடைக்கப்பட்டிருக்கும். ஓர் அப்பா, தன் மகளுக்காகச் செய்த மரபொம்மை, அவரை அதில் தொழில்முனைவோராக மாற்றியிருப்பது, ஆச்சர்ய செய்தி!

கொரோனா ஊரடங்குக் காலத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், பெரியவர்களை வேலைக்குச் செல்ல மட்டுமல்ல, குழந்தைகளை வீட்டுக்கு வெளியே விளையாடவும் அனுமதிக்கவில்லை. அப்படியான சூழலில், தன் மூன்றரை வயது மகள் வீட்டுக்குள் விளையாட மரபொம்மை ஒன்றைச் செய்து கொடுத்தார் துரைமுருகன். மூன்றே மாதங்களில், மரபொம்மைகள் ஆர்டர்கள் பெற்று அவற்றை ஆன்லைனில் விற்கும் அளவுக்கு அதில் தொழில்முனைவோராக வளர்ந்திருக்கிறார். அவரை சந்திக்க திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டிக்குச் சென்றோம்.

மரபொம்மை
மரபொம்மை

“எங்கப்பா 30 வருஷத்துக்கு மேல மர வியாபாரம் செய்துகிட்டு வர்றார். நான் 12-ம் வகுப்பு முடிச்சுட்டு அப்பாவுக்கு உதவியா மர வியாபாரத்துக்கு வந்துட்டேன். இப்போ மேட்டுப்பட்டியில சொந்தமா பிளைவுட் கடை வெச்சிருக் கேன். கொரோனா ஊரடங்கு எல்லோரையும்போல, எனக்கும் ரொம்ப கஷ்டமான காலம்தான். கஸ்டமர்கள் யாரும் கடைக்கு வரமாட்டாங்கனு தெரிஞ்சும், கடையை பூட்ட மனசு வரலை. தினமும் கடைக்கு வந்து கதவை மூடிட்டு உள்ளே உட்கார்ந்திருப்பேன். தனியாவே இருக்க ரொம்ப போர் அடிக்கும். அப்போ, பிளைவுட்டை எடுத்து ஏதாவது செய்யலாம்னு தோணுச்சு. என்ன செய்யலாம்னு யோசிச்சப்போ, என் மக ஞாபகம்தான் வந்தது’’ எனப் பேச ஆரம்பித்தார் துரைமுருகன். இவரின் மனைவி சுபாஷினி இல்லத்தரசி. மகள் ராகவிக்கு மூன்றரை வயது, மகன் ஜெகன் பிறந்து மூன்று மாதங்கள் ஆகின்றன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘‘எம்பொண்ணு ராகவி, படுசுட்டி. ஒரு இடத்துல இருக்க மாட்டா. பக்கத்து வீடு, எதிர் வீடுனு ஓடிட்டே இருப்பா. இந்தக் கொரோனா ஊரடங்கு ஆரம்பிச்சதுல இருந்து அவளை வெளியே விளையாடவிடுறதில்ல. ஒருநாள் என்கிட்ட, ‘அப்பா விளையாட பொம்மை வேணும்’னு கேட்டாள். கடைகள் எல்லாம் மூடி இருக்கும்போது பொம்மையை எங்க வாங்குறதுனு சொன்னா, அதெல்லாம் அவளுக்குப் புரியாது. அந்தப் பெரிய மனுஷிக்கு உடனே அழுகை, கோபம் எல்லாம் வந்துடும்.

“மகளுக்காக செய்த மரபொம்மை... இப்போ பிசினஸ் ஆகிடுச்சு!”

’சரிம்மா… பொம்மை வாங்கிட்டு வர்றேன்’னு சொல்லிட்டு, நேரா என் கடைக்கு வந்தேன். அங்கயிருந்த பிளைவுட்டை எடுத்து சின்னதா ஒரு கார் செய்ய ஆரம்பிச்சேன். ஸ்க்ரூ, போல்டுனு அங்க இருந்த பொருள்களை வெச்சு கார் செஞ்சேன். கடைசியில பார்த்தா, காருக்கு சக்கரம் இல்ல. பிளைவுட்டை சக்கரம்போல அறுக்க மெஷின் வேணும். அது என்கிட்ட இல்ல. அதனால, நாற்காலியின் கால்களுக்குப் பொறுத்தும் ‘புஷ்’ஐ எடுத்து காரின் சக்கரமா பொருத்தினேன். கார் தயார்! அதை எடுத்துக்கிட்டு வீட்டுக்கு வந்து பொண்ணுகிட்ட கொடுத்தேன். பார்த்ததும் அவளுக்கு அப்படி ஒரு சந்தோஷம்” எனப் புன்னகையோடு துரைமுருகன் பேசிக் கொண்டிருக்க, பேச்சில் இணைந்தார் அவர் மனைவி சுபாஷினி.

சுபாஷினி - ராகவி - துரைமுருகன்
சுபாஷினி - ராகவி - துரைமுருகன்

“ராகவியைச் சாப்பிட வைக்கிறது பெரிய வேலையா இருக்கும். கையில செல்போனை கொடுத்தாதான் சாப்பிடுவா. இல்லேன்னா ஒரு வாய் ஊட்டவே அரை மணி நேரம் ஆகும். ஆனா, அவங்க அப்பா செஞ்சு கொண்டு வந்த கார் பொம்மையை கையில கொடுத்தா போதும், 10 நிமிஷத்துல சாப்பாட்டு வேலை முடிஞ்சுரும். அதுமட்டுமல்லாம, அந்த காரை எடுத்துக்கிட்டு ஒவ்வொரு நாளும், எங்களை ஒவ்வோர் இடத்துக்கும் டூர் கூட்டிட்டுப் போவாங்க குட்டி மேடம். நேத்துகூட கொடைக்கானல் போனோம்” என்று பலமாகச் சிரித்தார் சுபாஷினி.

“கார் பொம்மையை வெச்சு ராகவி விளையாடியதைப் பார்த்துட்டு பக்கத்து வீடுகள்ல இருக்குறவுங்க, அதேபோல அவங்க குழந்தைகளுக்கும் கார் செஞ்சு கொடுக்கச் சொல்லிக் கேட்டாங்க. நானும் செஞ்சு கொடுத்தேன். அப்படி நான் செய்யும் மரச்சாமான்களை எல்லாம் வாட்ஸ் அப், ஃபேஸ்புக்னு பகிர்ந்தேன். அதைப் பார்த்த என் நண்பர்களும் உறவினர்களும், ‘எங்களுக்கும் இதே மாதிரி கார் வேணும்’னு கேக்க ஆரம்பிச்சாங்க. சரினு அவங்களுக்கும் செஞ்சு கொடுத்தேன்.

இதுக்கு இடையில, ‘அப்பா... கார் போதும். பைக், டிரெயின் செஞ்சுதாங்க’னு ராகவி கேட்க ஆரம்பிச்சுட்டா. அவற்றையெல்லாம் செய்ய பிளைவுட் செட் ஆகலை. உடனே, ஓக் மரத்தில் பொம்மைகள் செய்ய ஆரம்பிச்சேன். கடந்த ஒரு மாசமா ஓக் மரத்தில்தான் பொம்மைகள் செய்றேன். இப்படி மக விளையாட விளையாட்டா ஆரம்பிச்சது, ஒரு கட்டத்துல மரபொம்மைகள் கேட்டு அழைப்புகள், ஆர்டர்கள்னு வர்ற அளவுக்கு வளர்ந்துச்சு. அப்போதான், இதையே நாம ஏன் ஒரு தொழிலா செய்யக் கூடாதுனு தோணுச்சு.

“மகளுக்காக செய்த மரபொம்மை... இப்போ பிசினஸ் ஆகிடுச்சு!”

ஊரடங்குத் தளர்வுகள் அமலுக்கு வந்த நேரம், மரபொம்மை செய்யத் தேவையான பொருள்களை வாங்க முடிஞ்சது. இன்னும் தரமான பொம்மைகளைச் செய்ய ஆரம்பிச்சேன். சிலர், தனக்கு இதுமாதிரிதான் பொம்மை வேணும்னு ஆர்டர் கொடுப்பாங்க. அதனால, பொறுப்பும் அதிகமாயிடுச்சு. ஓக் மரத்தின் ஆயுள் காலம் அதிகம். குழந்தைகள் பெரும்பாலும் பொம்மைகளை வாயில் வெச்சு கடிப்பாங்க என்பதால, பொம்மைகள்ல பாதிப்பற்ற (Non Toxic) அக்ரலிக் பெயின்ட்தான் அடிக்கிறேன். இது குழந்தைகளுக்கு எந்தக் கெடுதலும் கொடுக்காது” என்றவர், தற்போது அவர் செய்யும் பொம்மை ரகங்கள் பற்றிப் பகிர்ந்தார்.

“கார், பைக், லாரி, டிரெயின்னு ஆரம்பிச்சு, குழந்தைகளுக்குக் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல்னு கணக்கு சொல்லிக்கொடுக்கும் மரப்பொருள்கள் வரை செய்றேன். கூடவே, செஸ் போர்டு, வாய்ப்பாடு கற்றுக்கொடுக்கும் மரச்சாமான்னு இவையெல்லாம் இருக்கு. எனக்கு பிளைவுட் பிசினஸ்தான் ஆதாரம். என் மகளுக்காக ஆரம்பிச்சது, என் மகளைப்போல, எல்லா குழந்தைகளும் சந்தோஷமா விளையாடணும்னு, பொம்மையைக் குறைந்த விலையில்தான் விற்கிறேன்.

சின்ன கார், பைக் போன்ற மர பொம்மைகள் ரூ. 150 முதல், வாய்ப்பாடு, கணக்கு மரச்சாமான்கள் ரூ. 1,500 வரை விற்கிறேன். அதுக்கு மேல விலை இல்ல. பொம்மை செய்யும் வேலைகளை நான் மட்டும்தான் பார்க்கிறேங்கிறதால, ஆர்டர் கொடுத்தா டெலிவரி செய்ய நாலு நாள் ஆகும். அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற ஆன்லைன் ஷாப்பிங்லயும் ‘Roaring Cars’ங்கிற பெயர்ல என் பொருள்களை விற்பனை செய்றேன். அதில் ஆர்டர் கொடுக்கலாம். பல ஆயிரங்கள் செலவழிச்சு சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பிளாஸ்டிக் பொம்மைகளை வாங்குறதைவிட, அதிக நாள்கள் உழைக்கக்கூடிய இந்தக் குழந்தைகளோட உடல் நலனுக்குத் தீங்கு தராத மர பொம்மைகளை பெற்றோர்கள் விரும்புறாங்க. அடுத்தகட்டமா, தமிழ் எழுத்துகளைக் குழந்தைகளுக்கு எளிமையா கற்றுக்கொடுக்க வசதியா ஒரு மரச்சாமான் செய்யத் திட்டமிட்டிருக்கேன்’’ என்றார் துரைமுருகன்.

‘‘மர கார் பொம்மை எப்படி இருக்கு..?’’ என்றோம் வாண்டு ராகவியிடம். “ம்ம்ம்… சூப்பர். கொடைக்கானலுக்குப் போவோமா..?” என்றார்.

ரைட் ரைட்!