Published:Updated:

`வருமான வரி தாக்கல் தேதி நீட்டிப்பு இவர்களுக்கு மட்டும்தான்!' - புதிய அறிவிப்பு சொல்வது என்ன?

வருமான வரி
News
வருமான வரி

நிறுவனங்களுக்கான வரிக் கணக்கு தாக்கல் அவகாசம் ஏற்கெனவே இரண்டு முறை நீட்டிக்கப்பட்ட நிலையில் தற்போது மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை நிறுவனங்களுக்கு பலனளிப்பதாக இருக்கும் என தொழில்துறையினரும், ஆடிட்டர்களும் தெரிவித்துள்ளனர்.

கொரோனா பரவல் காரணமாக வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வதற்கு கடந்த டிசம்பர் 31-ம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆனால், இந்த கால அவகாச நீட்டிப்பு எல்லோருக்குமானது அல்ல. வரிக் கணக்கு தணிக்கைக்கு உள்ளாகும் நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த கால அவகாச நீட்டிப்பு பொருந்தும்.

Tax (Representational Image)
Tax (Representational Image)

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இது தொடர்பாக வருமான வரித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ``நாட்டில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதன் காரணமாக வரி செலுத்துவோர் சந்தித்துள்ள சிக்கலைக் கருத்தில் கொண்டும், இ-பைலிங் தளத்தில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் காரணமாகவும் வருமான வரிக் கணக்குத் தாக்கலுக்கான கால அவகாசம் 2022 மார்ச் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளது.

அதன்படி நிறுவனங்கள் கடந்த 2020-21ம் நிதி ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான அவகாசம் 2022 மார்ச் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரிக் கணக்கு தணிக்கை அறிக்கையைத் தாக்கல் செய்ய பிப்ரவரி 15 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

நிறுவனங்களுக்கான வரிக் கணக்கு தாக்கல் அவகாசம் ஏற்கெனவே இரண்டு முறை நீட்டிக்கப்பட்ட நிலையில் தற்போது மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

Tax (Representational Image)
Tax (Representational Image)

இந்த நடவடிக்கை நிறுவனங்களுக்கு பலனளிப்பதாக இருக்கும் என தொழில்துறையினரும், ஆடிட்டர்களும் தெரிவித்துள்ளனர்.

அதேசமயம் இந்த கால அவகாச நீட்டிப்பு தனிநபர்களுக்குப் பொருந்தாது. தனிநபர்களுக்கான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் டிசம்பர் 31- தேதி உடன் நிறைவடைந்தது. அதுவரை 5.89 கோடி பேர் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்துள்ளனர்.