Published:Updated:

தொழில் தொடங்குவதை எளிமைப்படுத்த புதிய இ-பார்ம்!

Representational Image
Representational Image

தொழில்முனைவோர், தொழில் தொடங்குவதற்குப் பல்வேறு துறைசார்ந்த அனுமதிகளைப் பெறவேண்டியிருக்கிறது. இதற்காகப் பல்வேறு ஆவணங்களைத் தயாரிப்பதும், அந்தந்த அலுவலகங்களில் அனுமதி பெறுவதற்காக மாதக்கணக்காக அலைவதுமாகப் பெரும் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள்.

தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்துவதற்காகப் புதிய இ-பார்ம் ஒன்றை மத்திய அரசு அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த இ-பார்ம் விண்ணப்ப முறை, வரும் பிப்ரவரி 15 முதல் அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது.

Representational Image
Representational Image

தொழில்முனைவோர்கள், தொழில் தொடங்குவதற்குப் பல்வேறு துறைசார்ந்த அனுமதிகளைப் பெறவேண்டியுள்ளது. இதற்காகப் பல்வேறு ஆவணங்களைத் தயாரிப்பதும், அந்தந்த அலுவலகங்களில் அனுமதி பெறுவதற்காக மாதக்கணக்காக அலைவதுமாகப் பெரும் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். எனவே, இந்த நடைமுறைகளை எளிமைப்படுத்துமாறு தொழில்துறை சார்பாகத் தொடர்ந்து குரல்கொடுக்கப்பட்டு வந்தது.

ஏற்கெனவே ஸ்பிக்-இ (SPICe) என்ற ஆன்லைன் விண்ணப்ப முறை இருந்தது. தற்போது அதை மேம்படுத்தி ஸ்பிக்-இ+ (SPICe+) என்ற விண்ணப்ப முறையைக் கொண்டுவரவுள்ளார்கள். புதிதாக தொழில் தொடங்குவோர், கார்ப்பரேட் விவகாரங்களுக்கான துறை, தொழிலாளர் நலத்துறை அமைச்சகம், வருவாய்த்துறை ஆகிய மூன்று அமைச்சகங்களைச் சேர்ந்த 10 விதமான சேவைகளுக்கு இந்த இ-பார்ம் மூலமாகவே விண்ணப்பிக்கலாம். பான் கார்டு எண், டான் எண் (TAN), டின் எண் (DIN), ஜி.எஸ்.டி.இன் (GSTIN) உள்ளிட்ட சேவைகள் இவற்றில் அடங்கும்.

Representational Image
Representational Image

இந்தியாவில் மாதந்தோறும் ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் புதிதாகத் தொடங்குகின்றன. மொத்தம் சுமார் 11.5 லட்சம் பதிவுபெற்ற நிறுவனங்கள் உள்ளன. இந்த இ-பார்ம் மூலமாகப் பல்வேறு நடைமுறைச்சிக்கல்களைக் குறைக்க முடியும். நேரவிரயத்தைத் தவிர்க்கலாம். தொழில் தொடங்குவது தாமதப்படுவதால் ஏற்படும் இழப்புகளைத் தவிர்க்கலாம். இது தொழில்முனைவோருக்கு மகிழ்ச்சியான செய்தியே.

அடுத்த கட்டுரைக்கு