Published:Updated:

ஒரே வங்கிக் கணக்கிலிருந்து கட்டணம் செலுத்தப்படும் பத்திரப் பதிவுகளுக்குத் தடையா?

பத்திரப் பதிவு
News
பத்திரப் பதிவு

பொதுமக்கள் பத்திரம் பதிய இடைத்தரகர்களின் பின்னால் தொடர்ந்து செல்கின்றனர். அவர்களது வங்கிக் கணக்குகள் மூலமாகத்தான் கட்டணம் செலுத்தி வருகின்றனர். இடைத்தரகர்களின் ஒரே வங்கிக் கணக்கிலிருந்து கட்டணம் செலுத்துவது தடை செய்யப்பட்டால்தான், மக்கள் கமிஷன் தொல்லையிலிருந்து தப்பிக்க முடியும்.

வீடு, விளைநிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்களுக்கான நடவடிக்கைகள் அனைத்தும், 2018-ம் ஆண்டு முதல் இணையதளம் மூலம் பத்திரம் பதிவு செய்யப்படுகிறது. இந்த பத்திரப்பதிவுக்கான கட்டணத்தையும் ஆன்லைனிலேயே செலுத்தலாம்.

ஆனால், பொதுமக்கள் பலர் இதற்கு நேரடியாக விண்ணப்பிக்காமல் இடைத்தரகர்களையே அணுகுகின்றனர். மேலும், இடைத்தரகர்களின் வங்கிக் கணக்கின் மூலம் பத்திரப்பதிவுக்கான கட்டணத்தையும் செலுத்துகின்றனர்.

Documents (Representational Image)
Documents (Representational Image)
Image by Michal Jarmoluk from Pixabay

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்நிலையில், இடைத்தரகர்களைப் பொதுமக்கள் அணுகுவதைத் தடுக்கும் வகையில் ஒரே வங்கிக் கணக்கில் இருந்து கட்டணம் வந்தால் பத்திரப் பதிவு செய்ய தடை விதிப்பது தொடர்பாகப் பதிவுத்துறை ஆலோசித்து வருகிறது.

மேலும், இது போன்று வங்கிக் கணக்கில் இருந்து கட்டணம் வந்தால், அந்தக் கணக்கை ஆய்வு செய்வது தொடர்பாகப் பதிவுத்துறை மூலம் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

``பத்திரப் பதிவுக்காக மக்கள் இடைத்தரகர்களை அணுகும்போது, கட்டணத் தொகையின் மதிப்பைப் பொறுத்து கமிஷன் தொகை வசூலிக்கப்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் வருகின்றன. இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஆவணத்துக்கு செலுத்தப்பட வேண்டிய கட்டணங்களை ஆவணதாரர்கள் அவர்களது வங்கிக் கணக்கில் இருந்துதான் பணம் செலுத்த வேண்டும். இடைத்தரகர்கள் மூலமாகக் கட்டணம் செலுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

Money (Representational Image)
Money (Representational Image)

ஆனால், பொதுமக்கள் பத்திரம் பதிய இடைத்தரகர்களின் பின்னால்தான் தொடர்ந்து செல்கின்றனர். அவர்களது வங்கிக் கணக்குகள் மூலமாகத்தான் கட்டணம் செலுத்தி வருகின்றனர். இடைத்தரகர்களின் ஒரே வங்கிக் கணக்கில் இருந்து கட்டணம் செலுத்துவது தடை செய்யப்பட்டால்தான், மக்கள் கமிஷன் தொல்லையில் இருந்து தப்பிக்க முடியும்.

இதைக் கருத்தில் கொண்டு, ஒரே வங்கிக் கணக்கில் இருந்து கட்டணம் வந்தால் பத்திரப்பதிவு செய்ய தடை. விதிப்பது தொடர்பாகப் பதிவுத்துறை ஆலோசித்து வருகிறது" என இந்தத் துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

புதிதாகப் பத்திரம் பதிவு செய்ய இருப்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது!