Published:Updated:

அசுர வேகத்தில் வளரும் அதானி... பங்குகள் எப்படி உள்ளன?

கெளதம் அதானி
பிரீமியம் ஸ்டோரி
கெளதம் அதானி

தொழில்

அசுர வேகத்தில் வளரும் அதானி... பங்குகள் எப்படி உள்ளன?

தொழில்

Published:Updated:
கெளதம் அதானி
பிரீமியம் ஸ்டோரி
கெளதம் அதானி

ஏ.எம்.மன்னத்தேவன்

இன்று தொழில் துறையில் பலரும் பரபரப்பாகப் பேசும் பெயர் அதானி. ஆம், மிக சொற்ப கால கட்டத்தில் இன்று உலகின் பெரும் தொழில் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியிருக்கிறார் அதானி என்று சுருக்கமாக அழைக்கப்படும் கெளதம் அதானி.

அதானியின் ஆரம்பம்...

வழக்கம்போல, இந்தியா வின் பெரும் தொழிலதிபர்கள் பலரும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான். அந்த வகையில், கெளதம் அதானியும் குஜராத்திலேயே பிறந்திருக் கிறார். 1988-ம் ஆண்டில் தன்னுடைய பிளாஸ்டிக் பாலிமர் இறக்குமதி செய்யும் நிறுவனத்தைத் தொடங்கி அவருடைய பிள்ளையார் சுழியை ஆரம்பித்தார். துறைமுக நடைமுறைகள் சிறிது சுணக்கம் தரவே, 1998-ல் இந்தியாவின் முதல் தனியார் துறைமுகத்தை ஆரம்பித்தார்.

குஜராத்தின் முந்த்ரா என்னு மிடத்தில் 2001-ல் இந்திய ரயில்வேயுடன் ஒப்பந்தம் செய்துகொண்டபின், 2002-ல் குரு கோவிந்த் சிங் சுத்திகரிப்பு நிறுவனம் மற்றும் இந்தியன் ஆயில் நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆரம்ப ஒப்பந்தமாக ஏற்பட, தொடர்ந்து நிறுவனம் வளர ஆரம்பித்தது.

2007-ல் டாடா பவர் நிறுவனத்துடன் நிலக்கரி பண்டமாற்று தேவைக்காக மின் உற்பத்தி செய்ய சேவை ஒப்பந்தம் போடப்பட்டு, அதே ஆண்டில் பங்குச் சந்தையில் பட்டியல் இடப்பட்டது. வெறும் 12 ஆண்டுகளில், 10 கோடி மெட்ரிக் டன் அளவு பண்டமாற்று செய்து பெரும் சாதனை படைத்தது அதானி துறைமுகம் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலம். சீனாவின் பட்டுப் பாதையிலும் இதன் பங்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.

கெளதம் அதானி
கெளதம் அதானி

அசூர வளர்ச்சி...

மிகக் குறுகிய காலத்தில் அதாவது, 2014 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் மட்டும் கிட்டத்தட்ட 30 நிறுவனங்களை வாங்கியுள்ளார் மற்றும் உருவாக்கியுள்ளார் கெளதம் அதானி. 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது வியாபாரத்தை விஸ்தரித்துள்ளார்.

இவருடைய அதானி குழுமத் தில் ஆறு நிறுவனங்கள் இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிடப் பட்டுள்ளன. அவற்றில் குறிப் பாக, அதானி கிரீன் நிறுவனம் 2019 ஏப்ரல் முதல் 2022 ஏப்ரல் வரையிலான மூன்று ஆண்டுக் காலத்தில் 5,600% வளர்ச்சியைக் கொடுத்துள்ளது. அதாவது, இந்தப் பங்கில் 2019 ஏப்ரலில் ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந் தால், 2022 ஏப்ரலில் 56 மடங்கு வளர்ச்சியை, அதாவது, 56 லட்ச மாக வளர்ந்திருக்கும். அதானி கிரீன் நிறுவனத்தில் அதானி குழுமம் முதலீடு செய்த ரூ.3,400 கோடியானது ரூ.25 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அண்ணாமலை படத்தில் ரஜினி சரசரவென முன்னேற்றம் காண்பதுபோல, மூன்று ஆண்டு களில் மிகப் பெரும் வளர்ச்சியை இந்த நிறுவனம் பெற்றுள்ளது.

ஓல்சிமை வாங்கிய அதானி...

அதானியின் சொந்த நிறு வனங்கள் ஒருபக்கம் வேகமான வளர்ச்சியைக் கண்டு வர, பிற நிறுவனங்களை வாங்குவதிலும் அதானி நிறுவனம் முனைப் புடன் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில்கூட ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஓல்சிம் நிறுவனத்துக்குச் சொந்தமான இந்திய சிமென்ட் நிறுவனங்களான அம்புஜா சிமென்ட் மற்றும் ஏ.சி.சி சிமென்ட் நிறுவனங்களை சுமார் ரூ.8 லட்சம் கோடிக்கும் அதிகமான தொகைக்கு வாங்கி யுள்ளது அதானி குழுமம். இதன் மூலம் சிமென்ட் துறையில் அல்டரா டெக் நிறுவனத்துக்கு அடுத்தபடியான இரண்டாவது பெரிய சிமென்ட் நிறுவனமாக அதானி நிறுவனம் மாறியுள்ளது.

தொழில் துறையில் நிறுவனங்களை வாங்குவதும் விற்பதும் சாதாரண விஷயம்தான். என்றாலும், குறைந்த காலத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட நிறுவனங் களை வாங்கியிருப்பது தொழில் துறையில் இருக்கும் மற்ற போட்டியாளர்கள் மத்தியிலும், முதலீட்டாளர்கள் மத்தியிலும் சந்தேகத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

எதிர்கொள்ள வேண்டிய ரிஸ்க்குகள்...

பொருளாதார நிபுணரும் முன்னாள் கேபினட் அமைச்சருமான சுப்பிரமணியன் சுவாமியின் ட்விட்டர் பதிவு சிறு முதலீட்டாளரின் சந்தேகத்தை அதிகப்படுத்துகிற மாதிரி அமைந்திருந்தது. மொரீசியஸ் நாட்டிலிருந்து அதானி நிறுவனங்களில் ரூ.45,000 கோடி முதலீடு செய்துள்ள மூன்று நிறுவனங்கள் ஒரே முகவரியில் இருப்பதாக வெளியான ஒரு கட்டுரையை மேற்கோள் காட்டி, இந்த நிறுவனத்தின் மீதான சந்தேகத்தைக் கிளப்பியிருக்கிறார் சுவாமி.

அவர் வெளியிட்ட மற்றுமொரு ட்வீட்டில், அமலாக்கத்துறை மூலம் அதானி நிறுவனங்கள் மீது ஹவாலா தடுப்புச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதற்கு முன் விசாரணை யில் எந்தத் தவறும் நடக்காதிருக்க பிரதமர் மோடி, அமலாக்கத் துறையின் உயர் அதிகாரிகளின் பின்புலத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், சில பதிவுகளிலும் அதானி குழுமத்தைச் சாடியுள்ளார் சுவாமி.

நம் நாட்டில் உள்ள வேறு எந்தக் குழுமத்துக்கும் இல்லாத அளவுக்கு அதானி குழுமத்தின் மொத்தக் கடன் அளவு ரூ.2.25 லட்சம் கோடியாக உயர்ந்திருக் கிறது. அதானி குழுமத்திலுள்ள நிறுவனங்களுள் பணப் பரிமாற்றம் நடத்திக்கொள்வதாகவும் அரசல் புரசலாகச் செய்திகள் ஓடிக்கொண்டிருக்கின்றன.

அசுர வேகத்தில் வளரும் அதானி...
பங்குகள் எப்படி உள்ளன?

யோசிக்கும் முதலீட்டாளர்கள்...

அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகள் எதுவும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. தவிர, இந்தக் குழுமத்தின் பல்வேறு நிறுவனங்கள் நன்கு செயல்பட்டுள்ள நிலையில் இருந்து தொடர்ந்து லாபம் ஈட்டிக்கொண்டு, சிறப்பான செயல்பாட்டைக் கொடுத்து வருவதால், பெரிய பாதிப்பும் இல்லை.

ஆனால், ஏதேனும் தவறு நடந்திருப்பதாகத் தெரிந்து நிறுவனத்தின் மதிப்பு குறைந்தாலோ, நிறுவனத்தின் தவறான முன்னெடுப்புக்களால் தொழில் முறையில் தடுமாற்றம் ஏற்பட்டாலோ, முதலீட்டாளர்கள் தங்கள் நலனைப் பாதுகாக்கும் பொருட்டு முதலீட்டைக் குறைத்தாலோ, இந்த நிறுவனம் வாங்கிய பல்லாயிரம் கோடி கடனைத் திரும்பக் கட்ட முடியாமல் போனாலோ இந்த நிறுவனப் பங்குகளின் விலை குறைய வாய்ப்புண்டு.

எனவே, இந்த நிறுவனப் பங்குகளை வாங்கி வைத்திருக்கும் முதலீட்டாளர் கள் மிக மிகக் கண்காணிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். நிறுவனம் பற்றி வரும் செய்திகளின் பின்னணியைத் தொடர்ந்து ஆராய்வது அவசியம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism