Published:Updated:

ஜி.எஸ்.டி வரி விகிதம் மேலும் உயர்த்தப்படுமா?

தற்போது ஜி.எஸ்.டி வரி விகிதத்தில், பெரும்பாலான பொருள்கள் 12% மற்றும் 18% என்ற விகிதத்தில்தான் இருக்கின்றன. அவற்றை மொத்தமாக 15% என்ற விகிதத்துக்கு மாற்றுவது குறித்து இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படலாம் என்று தெரிகிறது.

ஜி.எஸ்.டி வரி விகிதம்
ஜி.எஸ்.டி வரி விகிதம்

ஜி.எஸ்.டி வரி வருவாய் கடந்த சில மாதங்களாக எதிர்பார்த்ததைவிடக் குறைவாக இருந்துவந்த நிலையில், நவம்பர் மாதத்தில் பண்டிகைக்கால விற்பனை காரணமாக 6% அதிகரித்து ரூ.1,03,492 கோடியாக உள்ளது. இந்த நிலையில், வரும் டிசம்பர் 18-ம் தேதி ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடைபெறவுள்ளது.

ஜி.எஸ்.டி வரி விகிதம்
ஜி.எஸ்.டி வரி விகிதம்

அந்தக் கூட்டத்தில், ஜி.எஸ்.டி வரிவிதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட பொருள்கள், ஜி.எஸ்.டி இழப்பீட்டு வரி விகிதங்கள் மற்றும் ஜி.எஸ்.டி வருவாயை அதிகரிப்பதற்கான நடவடிக்கை குறித்து கலந்தாய்வு செய்யப்படும். கூட்டத்தில் விவாதிப்பதற்கு ஏதுவாக மாநில அரசுகளின் கருத்துகளை அளிக்குமாறு ஜி.எஸ்.டி கவுன்சில் கடிதம் அனுப்பியுள்ளது. அக்கடிதத்தில், ஜி.எஸ்.டி வரி வசூலை அதிகரிப்பதற்கு என்னெவெல்லாம் செய்யலாம் என்பது குறித்த யோசனைகள், ஜி.எஸ்.டி வரிவிதிப்பிலிருந்து விலக்கப்பட்ட பொருள்கள் குறித்த மறுஆய்வு உள்ளிட்டவற்றைக் கேட்டிருக்கிறது.

நாம் தரும் ஜி.எஸ்.டி வரி அரசுக்குச் சென்றடைகிறதா என்பதை உறுதிசெய்வது எப்படி? #DoubtOfCommonMan

தற்போது, ஜி.எஸ்.டி வரி விகிதத்தில் பெரும்பாலான பொருள்கள் 12% மற்றும் 18% என்ற விகிதத்தில்தான் இருக்கின்றன. அவற்றை மொத்தமாக 15% என்ற விகிதத்துக்கு மாற்றுவது குறித்து இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படலாம் என்று தெரிகிறது. அதேபோல், ஜி.எஸ்.டி வசூல் குறையும்போது மாநிலங்களுக்கு வழங்கும் இழப்பீட்டுத்தொகை கிடைப்பது தாமதப்படுவதாகவும், இழப்பீடு குறைவாக இருப்பதாகவும் கூறப்படுகின்றன.

ஜி.எஸ்.டி
ஜி.எஸ்.டி

ஜி.எஸ்.டி கவுன்சில் கலந்தாய்வுக் கூட்டத்துக்குப் பின்னர், சில பொருள்களின் ஜி.எஸ்.டி விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. அதேபோல, ஜி.எஸ்.டி-யிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட பொருள்களிலும் சிலவற்றுக்கு குறைந்த ஜி.எஸ்.டி விதிக்கப்படலாம். மாநிலங்களுக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.டி இழப்பீடும் அதிகரிக்கப்படலாம் என்று தெரிகிறது.