Published:Updated:

பிசினஸ் வெற்றிக்கான பிராண்டிங்... உருவாக்கி வளர்த்தெடுப்பது எப்படி?

பிராண்டிங்
பிரீமியம் ஸ்டோரி
பிராண்டிங்

பிராண்டிங்

பிசினஸ் வெற்றிக்கான பிராண்டிங்... உருவாக்கி வளர்த்தெடுப்பது எப்படி?

பிராண்டிங்

Published:Updated:
பிராண்டிங்
பிரீமியம் ஸ்டோரி
பிராண்டிங்

பிசினஸ் தொடங்குகிறோம் எனில், முதலீடு, மார்க்கெட்டிங், வருமானம் பற்றிதான் பெரும்பாலானோர் சிந்திப்பார்கள். ஆனால், இவற்றைவிட முக்கியமானது, அந்த பிசினஸுக்கான பிராண்டிங். ஒரு நிறுவனத்துக்கு அவர்கள் செய்யும் பிராண்டிங் வழிமுறைகளே, அந்த நிறுவனத்தின் ஆதாரம்.

பிராண்டிங் என்பது என்ன, ஒரு நிறுவனத் துக்கான பிராண்டிங் எப்படி இருக்க வேண்டும், எப்போது செய்ய வேண்டும் என்பது போன்ற தகவல்களைத் தருகிறார் பிராண்டிங் நிபுணரும், 7 மைல்ஸ் பேர் செகண்ட் நிறுவனத்தின் உரிமையாளருமான சாமுவேல் மேத்யூ.

“ஒரு நிறுவனம், பிராண்டிங், மார்க்கெட்டிங், சேல்ஸ் ஆகிய மூன்று புள்ளிகளில் மக்களுடன் இணைந்திருக்கும். மார்க்கெட்டிங் என்பது என்ன? விளம்பரங்கள் மூலம் பொருள்களை, சேவைகளை வாங்க வைப்பது. விற்பனை என்பது நாம் செய்த மார்க்கெட்டிங் மூலம் நமக்குக் கிடைப்பது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை. அல்லது ஒரு நிறுவனத்துக்கான வருவாய். பிராண்டிங் என்பது ஒரு நிறுவனத்துக்கும் மக்களுக்கும் இருக்கும் உணர்வுபூர்வமான தொடர்பு.

பிசினஸ் வெற்றிக்கான பிராண்டிங்... உருவாக்கி வளர்த்தெடுப்பது எப்படி?

பொதுவாக, பிராண்டிங் எனில், ஒரு நிறுவனத்துக்கான விளம்பரம் என்றோ, லோகோ என்றோ, வடிவமைப்பு என்றோ தான் பலரும் நினைக்கிறார்கள். ஆனால், ஒரு நிறுவனம் அல்லது ஒரு நிறுவனத்தின் பொருள் பற்றி மக்களிடம் உருவாக்கும் நல்லெண்ணமே அந்த நிறுவனத்துக்கான பிராண்டிங் ஆகும்.

உதாரணமாக, ஆப்பிள் நிறுவனத்தின் பொருள்களை எடுத்துக் கொள்ளலாம். விலை அதிகம், ஆனாலும் செயல்பாட்டிலும், தகவல்கள் பாதுகாப்புத்தன்மையிலும் எந்தப் பிரச்னையும் இருக்காது என்கிற எண்ணத்தை ஆப்பிள் நிறுவனம் மக்கள் மனதில் பதிய வைத்துள்ளது. இதுவே அந்த நிறுவனத்துக்கான பிராண்டிங் ஆகும். இந்த எண்ணம், நாளடைவில் அந்த பிராண்டின் மீதான விருப்பமாக மாறிவிடும்.

சில ஆண்டுகளுக்குமுன், கோக் மற்றும் பெப்சி நிறுவனங்களின் குளிர்பானங்கள் மீதும் சில ஆய்வுகள் நடத்தின. அந்த ஆய்வில், கோக் நிறுவனம் நிறைய மக்களின் மனதில் இடம்பிடித்திருந்தது. அடுத்தகட்டமாக பிராண்டிங் தொடர்பான ஆய்வு ஒன்றை செய்தார்கள். அதாவது, ஒரு நபரிடம் கோக் மற்றும் பெப்சி குளிர்பானங்களைக் குடிக்கச் சொல்லி, அவரின் மூளையின் செயல் திறனைப் பரிசோதித்தார்கள். அப்போது கோக் பருகும்போது அவரின் மூளை, பெப்சி பருகியதைவிட மிகுந்த மகிழ்ச்சி யாக இருந்தது தெரிந்தது.

மீண்டும் சில நாள்கள் கழித்து, அதே நபருக்கு, கோக் இருந்த பாட்டிலில் பெப்சி குளிர்பானமும், பெப்சி குளிர்பான பாட்டிலில் கோக்கும் ஊற்றித் தந்தார்கள். இந்த முறை கோக் பாட்டிலில் இருந்த பெப்சியைக் குடிக்கும்போது அவரின் மூளை மகிழ்ச்சியாக இருந்தது தெரிந்தது. இதிலிருந்து அந்த நபர் எவ்வளவு தூரம் கோக் பிராண்டை ரசிக்கிறார் என்பது தெளிவாகத் தெரிந்தது. இப்படி ஒவ்வொரு வாடிக்கையாளரு டனும் உணர்வுபூர்வமாக இணைவதே பிராண்டிங் ஆகும்.

இனி இதை எப்படி உங்கள் நிறுவனத்துக்கு செயல்படுத்தலாம் என்பது குறித்துப் பார்ப்போம். பிசினஸ் தொடங்கிய அனைவருமே மார்க்கெட்டிங் மூலம் பொருள்களை விற்க நினைக்கத்தான் செய்வார்கள். ஆனால், உங்கள் நிறுவனத்தை அல்லது உங்கள் நிறுவனத் தயாரிப்புகளை ஒரு பிராண்டாக ஆக்க விரும்பினால், பிராண்டிங், மார்க்கெட்டிங், விற்பனை ஆகிய மூன்று விஷயங்களிலும் என்னென்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

உங்களின் வாடிக்கையாளர்களைத் தீர்மானியுங்கள்...

நடுத்தர மக்களுக்கான பொருளை அதிக விளம்பரத்துடன் கூடிய ஒரு பிரமாண்ட இடத்தில் வைத்து விற்கிறோம் எனில், முதலில் அந்தப் பொருளின் விலை குறித்து அவர்களுக்குத் தயக்கம் வரலாம். சிலர், விலையை விசாரிக்காமலே, விலை அதிகமாக இருக்கும். எனவே, அதை வாங்க வேண்டாம் என்கிற முடிவுக்குக்கூட வர வாய்ப்பிருக்கிறது. எனவே, முதலில் உங்கள் பிராண்ட் எப்படிப்பட்டது, நீங்கள் என்ன பொருளை விற்்கிறீர்கள், எங்கு விற்பனை செய்கிறீர்கள், உங்களின் வாடிக்கையாளர் எத்தகைய வாங்கும் சக்தியைக் கொண்டவர், அவர்களுக்கு எப்படிப்பட்ட விளம்பரங்கள் பிடிக்கும், எந்த மாதிரியான இடத்தை விரும்புவார்கள் என்பதை எல்லாம் முதலில் தீர்மானிக்க வேண்டும்.

நோக்கத்தை எழுதுங்கள்...

உங்கள் பிராண்ட் பற்றி மக்கள் என்ன நினைக்க வேண்டும் என்பதை இரு வரிகளில் எழுதுங்கள். அந்த வரிகளை மையப் படுத்தி, அதை உருவாக்க ஏற்ற இலக்குகளை நிர்ணயித்து செயல்படுங்கள். பிராண்டிங் பொறுத்தவரை, ஒரு பிசினஸ் தொடங்கும் முன்பே அந்த பிசினஸ் பற்றி மக்களின் எண்ணம் எண்ணவாக இருக்க வேண்டும் என்பது போன்ற எதிர்கால இலக்கு என்பதால், சில பிராண்டிங் எக்ஸ்பர்ட்டுகளிடம் உங்கள் பிராண்டுக்கான ஐடியாக்களைக் கேட்டு வாங்கலாம். நீங்கள் திட்டமிட்டு செயல்படுவதைவிட, எக்ஸ்பர்ட்டு களிடம் கருத்துகள் கேட்கும் போது எளிதில் மக்களைச் சென்றடைய முடியும்.

சாமுவேல் மேத்யூ
சாமுவேல் மேத்யூ

உண்மையைப் பகிரவும்...

நீங்கள் விற்கும் பொருள் அல்லது சேவை தொடர்பாக உண்மையான தகவல்களின்மீது மட்டுமே பிராண்டிங்கின்போது கவனம் செலுத்த வேண்டும். உங்கள் பொருளுக்கு எது ப்ளஸ் என்று எண்ணுகிறீர்களோ, அதை மையப்படுத்தலாம். உதாரணமாக, ஒரு பிராண்ட் மொபைலில் கேமரா சிறப்பாக இருக்கும். ஆனால், பேட்டரியில் நீண்ட நேரம் சார்ஜ் நிற்காது. இந்த மொபைலில் பேட்டரி சார்ந்து பிராண்டிங் செய்யாமல் கேமரா சிறப்பாக இருக்கும் என்பதை மட்டும் மையப்படுத்த வேண்டும். கேமராவும் சிறப் பாக இருக்கும். பேட்டரியும் சிறப்பாக இருக்கும் என்று நீங்கள் பிராண்டிங் செய்தால், அது மக்களை ஏமாற்றுவதற்கு சமம். உங்களால் நீண்ட நாள் நிலைத்து நிற்க முடியாது.

நிலைத்த தன்மையைக் கையாளுங்கள் :

உங்கள் பிராண்டுக்கான தரம் ஒரே மாதிரி இருக்கிற மாதிரி பார்த்துக்கொள்ளுங்கள். உதாரணமாக, மெக் டொனால்ட்ஸின் துரித உணவு கள் எல்லா இடங்களிலும் ஒரே சுவையில் இருக்கும். ஒரே சுவை என்பது அவர்களின் பிராண்டின் அடையாளம். அதேபோல, உங்கள் பிராண்ட்டை வளர்த்தெடுங் கள்’’ என்று முடித்தார் சாமுவேல் மேத்யூ.

அவர் சொன்ன விஷயங் களை மனதில் கொண்டு நீங்கள் உங்கள் தொழிலில் முயற்சி செய்து பார்க்கலாமே!