Published:Updated:

தொழில்முனைவோரின் சமூக வலைதளப் பக்கம் எப்படி இருக்க வேண்டும்? நிபுணரின் வழிகாட்டல்...

சமூக வலைதளப் பக்கம்
பிரீமியம் ஸ்டோரி
சமூக வலைதளப் பக்கம்

S O C I A L M E D I A

தொழில்முனைவோரின் சமூக வலைதளப் பக்கம் எப்படி இருக்க வேண்டும்? நிபுணரின் வழிகாட்டல்...

S O C I A L M E D I A

Published:Updated:
சமூக வலைதளப் பக்கம்
பிரீமியம் ஸ்டோரி
சமூக வலைதளப் பக்கம்

இப்போது ஆன்லைன் மூலம் பலரும் பிசினஸ் செய்து வருகிறார்கள். குறைந்த செலவில் சமூக வலை தளங்கள் மூலம் விளம்பரப்படுத்திக் கொள்வது, வாடிக்கையாளர்களை உருவாக்குவது என்பதெல்லாம் தொழில்முனைவோருக்கு எளிதாகி விட்டது. பலரின் வெற்றிக்கு சமூக வலைதளங்கள் ஒரு வலுவான காரணமாகவும் இருக்கிறது. சமூக வலைதளப் பக்கத்தை எவ்வளவு கவனமாகக் கையாள வேண்டும் புரொஃபஷனலாக இருக்க எவற்றை யெல்லாம் கருத்தில் கொள்ள வேண்டும் என்பது குறித்து விளக்கினார் ‘சாய் காந்த்’ நிறுவனத்தின் உரிமையாளர் சுரேஷ் ராதாகிருஷ்ணன்.

சுரேஷ் ராதாகிருஷ்ணன்
சுரேஷ் ராதாகிருஷ்ணன்

புரொஃபைல் முக்கியம் பாஸ்...

‘‘சமூக வலைதளப் பக்கத்தின் புரொஃபைல் படத்தில் எப்போதும் உங்களின் படத்தையே வைக்க வேண்டும். உங்களின் பிசினஸ் பக்கம் எனில், உங்களின் லோகோவை வைத்துக்கொள்ளலாம். நீங்கள் வைக்கும் புகைப்படமே உங்களின் அடையாளம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களின் கல்வி, ஆர்வம், நீங்கள் செய்யும் தொழில் போன்றவை சார்ந்த சரியான தகவல்களைப் பதிவிடுங்கள். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என அனைத்து சமூக வலைதளப் பக்கங்களையும் லிங்க் செய்து வைத்துக்கொள்ளலாம். உங்களின் அலுவலகரீீதியான தொலைபேசி எண் அல்லது இ-மெயில் ஐடி போன்றவற்றைப் பதிவிட்டு வைத்திருங்கள்.

பயனுள்ள கருத்துக்களைப் பகிரலாம்...

தொழில் சார்ந்த பயனுள்ள கருத்துகளை அடிக்கடி பகிருங்கள். உங்களின் பதிவுகள் உங்கள் தொழிலுக்கான விளம்பரமாக மட்டும் இல்லாமல், மற்றவர்களுக்குத் தேவைப்படும் தகவல்களாகவும் இருந்தால், இன்னும் அதிக ஃபாலோயர்கள் உங்களுக்குக் கிடைப்பார்கள். உதாரணமாக, பிசினஸ் சார்ந்த ஈவென்ட்டுகள், கருத்தரங்குகள் போன்றவை நடப்பது குறித்து உங்களுக்குத் தெரிந்தால், அதைப் பகிர்ந்துகொள்ளலாம். பிசினஸில் ஜெயித்தவர்களின் கதைகள், கருத்துகளை குட்டிக் குட்டி பதிவுகளாக வெளியிடலாம். தொழில் சார்ந்த கருத்துகளைத்தான் எப்போதும் பகிர வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அவ்வப் போது பர்சனல் விஷயங்களையும் பகிரலாம்.

உங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் எப்போதும் ஒரு கதை சொல்லியாக இருங்கள். உங்களுக்கு தெரிந்தவற்றைக் கதை வடிவில் பதிவிடலாம். உதாரணமாக, உங்கள் தொழிலில் நீங்கள் சந்தித்த சவால் களையும் கடந்து வந்த பிரச்னை களையும் பதிவிடலாம். இது மற்றவர்களுக்கு உங்கள் மீதான நன்மதிப்பை அதிகரிக்கும். உங்களின் எல்லா கருத்துகளும் எழுத்து வடிவில் தான் பதிவிட வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. குட்டிக் குட்டி வீடியோக்களாக, கார்டுகளாக பதிவிடலாம்.

நீங்கள் பகிரும் எந்தத் தகவலும் உங்கள் தொழிலுக்கு எதிரானதாக இருக்கக் கூடாது. அதேபோல, தேவையில்லாத மீம்கள், புகைப் படங்கள் போன்றவற்றைப் பகிராதீர்கள். இது உங்கள் மீதான நன்மதிப்பைக் குறைக்கும்.

தொழில்முனைவோரின் சமூக வலைதளப் பக்கம் எப்படி இருக்க வேண்டும்? நிபுணரின் வழிகாட்டல்...

கட்டாயப்படுத்தாதீர்கள்...

உங்களின் சமூக வலைதளப் பக்கங்களில் நீங்கள் பதிவிடும் பதிவுகளை ‘லைக்’ செய்யச் சொல்லியோ, ‘ஷேர்’ செய்யச் சொல்லியோ மற்றவர்களைக் கட்டாயப்படுத்தாதீர்கள். உங்கள் பதிவுகளும் கருத்துகளும் மற்றவர் களுக்குப் பிடிக்கும்பட்சத்தில் உங்களின் ஃபாலோயர்களே அதைச் செய்வார்கள்.

உங்களின் பதிவுகளுக்கு எப்போதும் பாசிட்டிவ் கமென்ட்டுகள் மட்டுமே வரும் என்று எதிர்பார்க்காதீர்கள். நெகட்டிவ் கமென்ட்டுகள் வந்தாலும் அதையும் பாசிட்டிவாக எடுத்துக்கொள்ளுங்கள். மற்றவர்கள் உங்களைப் பற்றி, சொல்லும் நிறை குறைகளையும் ஏற்றுக் கொள்ளுங்கள். ஒரு பதிவில் ஒருவரை ‘tag’ செய்யும்போது பல முறை யோசியுங்கள். ‘tag’ செய்யும்போது சம்பந்தப்பட்ட நபர் அசெளகரியமாகவும் உணரலாம். அல்லது நீங்கள் பணம் சம்பாதிக்க அவரைத் தவறாகப் பயன்படுத்திக்கொள்வதாக நினைக்கலாம். எனவே, கவனமாக இருக்கவும். மேலும், ஒரே கருத்தையே திரும்பத் திரும்ப பதிவிடாதீர்கள். இது பார்ப்பவர்களுக்கு எரிச்சல் உணர்வை ஏற்படுத்தும். சிலர் அன் ஃபாலோகூட செய்யலாம்.

உண்மைத்தன்மை முக்கியம்...

மற்றவர்கள் உங்களுக்கு ஃபார்வேடு செய்த பதிவு களின் உண்மைத்தன்மை தெரியாமல் எந்தவொரு கருத்தையும் சமூக வலைதளங் களில் பகிராதீர்கள். இது போன்ற செயல்பாடு உங்கள் மீதான நம்பகத்தன்மையைக் குறைக்கும். சமூகத்தில் நடக்கும் நியாமான பிரச்னைகளுக்கு குரல் கொடுக்கலாம் தவறில்லை. ஆனால், பிசினஸ் அல்லாது அரசியல், சமூகம் மீதான உங்களின் தனிப்பட்ட பார்வை குறித்த கருத்துகளை சமூக வலைதளங் களில் பகிர வேண்டாம். அந்தக் கருத்துகளை பிடிக்காதவர்களுக்கு உங்களையும் பிடிக்காமல் போகலாம்.

#hashtag பயன்படுத்தலாம்...

முக்கியமான பதிவுகளைப் பதிவிடும் போது அதற்குரிய ஹேஸ்டேக் சேர்த்து பதிவிடலாம். அதனால் நீங்கள் சொல்ல வரும் கருத்து எளிதாக மற்றவர்களைச் சென்றடையும். அதற்காக எல்லா பதிவுகளிலும் ஹேஸ்டேக் சேர்க்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு கான்செப்ட் சார்ந்த கருத்துகளைத் தொடர்ந்து பதிவிடும்போது ஹேஸ்டேக் பயன்படுத்துங்கள். நீங்கள் பதிவிடும் ஹேஸ்டேக் உங்கள் கருத்துடன் தொடர்பு உடையதாக இருக்க வேண்டும்.

ஸ்மார்ட்டாக இருங்கள்...

சமூக வளைதளங்களில் நீங்கள் ஸ்மார்ட்டாக இருப்பது அவசியம். பதிவுகளை இலக்கணப் பிழை இல்லாமல் எழுத, வீடியோக்களை எடிட் செய்ய, ஒரே நேரத்தில் அனைத்து சமூக வலைதளப் பக்கத்திலும் ஒரே கருத்துகளை பகிர எனப் பலவிதமான டூல்ஸ்கள் இருக்கின்றன. இவை உங்களின் வேலைகளையும் நேரத்தையும் மிச்சப்படுத்தும். எந்த ஒரு பதிவையும் லைக் செய்வதற்கு முன்பும், ஷேர் செய்வதற்கு முன்பும் பல முறை யோசி யுங்கள். உங்களின் தவறான ஒரு லைக் கூட உங்கள் மீதான எண்ணத்தை மாற்றும்.

நெகட்டிவிட்டி வேண்டாமே...

சமூக வலைதளத்தில் ஒருவரையோ, அவரின் கருத்து களையோ விமர்சனம் செய்யாதீர்கள். ஒருவரின் கருத்துகள் உங்களுக்குப் பிடிக்க வில்லையெனில், கருத்து சுதந்திரத்தைக் காட்ட சமூக வலைதளங்கள் சரியான இடம் இல்லை. தேவையில்லாமல் நெகட்டிவ் எண்ணங்களை பரப்பாதீர்கள் . சமூக வலைதளப் பக்கம் ஒருவரின் இன்னொரு முகமாகப் பார்க்கப்படுகிறது என்பதே உண்மை. எப்போதும் கவனமாக இருந்து சமூக வலை தளங்களை உங்களின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism