நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

ஏற்றுமதி ஆர்டர்களை சுலபமாகப் பெறுவது எப்படி..? வழிகாட்டிய ஆலோசனைக் கூட்டம்

ஏற்றுமதி
பிரீமியம் ஸ்டோரி
News
ஏற்றுமதி

M E E T I N G

நாணயம் விகடன் மற்றும் ஹெச்.டி.எஃப்.சி பேங்க் இணைந்து ‘ஏற்றுமதி & இறக்குமதி: ஷிப்பிங் & லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மென்ட் – சமீபத்திய போக்குகள் மற்றும் மேம்பாடுகள்’ என்ற நிகழ்ச்சியை நடத்தின.

இதில் முதலில் பேசிய ஹெச்.டி.எஃப்.சி பேங்கின் துணைத் தலைவர் கே.பாலாஜி, “ஹெச்.டி.எஃப்.சி பேங்க் சிறு நகரங்கள், கிராமப்புறங்களில் அதிக எண்ணிக்கையில் இயங்கி வருவதுடன், டிஜிட்டல் வழியாகவும் இயங்கி வருகிறது. ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு பிரத்யேக நிதித் தேவைகளுக்கு கடன் வழங்கிவருகிறது” என்றார்.

கே.எஸ்.கமாலுதீன், எஸ்.நடராஜா,  கே.பாலாஜி
கே.எஸ்.கமாலுதீன், எஸ்.நடராஜா, கே.பாலாஜி

சென்னை கஸ்டம்ஸ் புரோக்கர்ஸ் அசோசியேஷன் பிரசிடென்ட் எஸ்.நடராஜா, இறக்குமதி யாளர்கள், துறைமுகத்திலிருந்து சரக்குகளைத் தங்கள் நிறுவனத்துக்கு எடுத்துவரும் செலவைக் குறைக்கும் விதம் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். புளூபாரத் எக்சிம் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் கே.எஸ்.கமாலுதீன் பேசும்போது, ஏற்றுமதி செய்யும் பொருளுக்கான விலையை எப்படி நிர்ணயிப்பது என்பதை விரிவாக விளக்கினார். இறக்குமதியாளர்களுக்கு எப்படிக் கடிதம் எழுதி ஏற்றுமதி ஆர்டர்கள் பெறுவது என்பதையும் விளக்கினார். இந்த நிகழ்ச்சியில் ஏற்றுமதியாளர்கள் கேட்ட கேள்விக்கு நிபுணர்கள் விரிவான பதிலை அளித்தனர்.

இந்த நிகழ்வை வீடிவோவில் பார்க்க... https://www.facebook.com/NaanayamVikatan/videos/3949202148492158