Published:Updated:

உங்கள் பிசினஸ் பிராண்டை பிரபலப்படுத்த உதவும் ஹேஸ்டேக்!

ஹேஸ்டேக்
பிரீமியம் ஸ்டோரி
ஹேஸ்டேக்

பிசினஸ்

உங்கள் பிசினஸ் பிராண்டை பிரபலப்படுத்த உதவும் ஹேஸ்டேக்!

பிசினஸ்

Published:Updated:
ஹேஸ்டேக்
பிரீமியம் ஸ்டோரி
ஹேஸ்டேக்

பிசினஸுக்கு முதலீடு எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு புரமோஷனும் முக்கியம். அப்படி விளம்பரம் செய்யும்போது ஹேஸ்டேக் (hastag) பகிர்வது வழக்கமான ஒரு விஷயமாக மாறிவிட்டது. ஆனால், ஹேஸ்டேக் பகிரும்போது எதையெல்லாம் கவனிக்க வேண்டும் என விளக்கமாக எடுத்துச் சொன்னார் டிஜிட்டல் மீடியா எக்ஸ்பர்ட் தங்கவேல்.

வாடிக்கையாளர்களை எளிதாக சென்றடைய...

‘‘ஹேஸ்டேக் என்பது நமது வாடிக்கையாளர்களை எளிதாக அணுக உதவும் ஒரு டூல் . முதல்முதலாக ட்விட்டர் பயன்பாட்டில் தொடங்கி இது, இன்று எல்லா சமூக வலைதளங்களிலும் பயன் படுத்தப்படுகிறது. ஹேஸ் டேக்கை ஸ்மார்ட்டாக பயன்படுத்தத் தெரிந்தால் அதிக வாடிக்கையாளர்களை எளிதில் சென்றடைய முடியும்.

ஹேஸ்டேக் பொறுத்த வரை, நிறைய வகைகள் உண்டு. ஆனால், பயன் பாட்டின் அடிப்படையில், டிரெண்டிங் ஹேஸ்டேக், கன்டென்ட் ஹேஸ்டேக், பிராண்ட் ஹேஸ்டேக் என பிரிக்கலாம்.

உங்கள் பிசினஸ் பிராண்டை
பிரபலப்படுத்த உதவும் ஹேஸ்டேக்!

ஹேஸ்டேக் செயல்படும் விதம்...

டிரெண்டிங் ஹேஸ்டேக் என்பது சமூக வலைதளங் களில் டிரெண்டிங்கில் இருக்கும் ஒன்றை மக்கள் தேடும்போது, நீங்கள் அது சார்ந்து ஹேஸ்டேக் பதிவிட்டு இருந்தால், அதிக மக்களுக்கு உங்கள் பதிவு சென்றடையும்.

கன்டென்ட் ஹேஸ்டேக் என்பது வேறு விதம். உதாரண மாக, நீங்கள் ஒரு புடவை விற்பனையாளர், உங்களுடையது காட்டன் புடவைகளுக்கான பிராண்ட் எனில், #diwali2022 என்பது டிரெண்டிங் ஹேஸ்டேக்கி லும் #sarees, #cottonsarees #traditional என நீங்கள் ஹேஸ்டேக்குகளைப் பயன்படுத்துவது கன்டென்ட் ஹேஸ்டேக்கிலும் வரும். குறிப்பாக, காட்டன் புடவை களைத் தேடுபவர்களுக்கான ஒரு பிராண்ட் உங்களுடையது என்பதை வெளிப்படுத்த இந்த கன்டன்ட் ஹேஸ்டேக் உதவும்.

பிராண்ட் ஹேஸ்டேக் என்பது உங்களுடைய பிராண்டையும், பெயரையும் ஹேஸ்டேக்காக பதிவிட்டு உங்களின் பிராண்ட் பற்றி வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்துவது. #NanayamVikatan #Vikatan என்பது போன்று உங்களுடைய பிராண்டின் பெயரை நீங்கள் ஹேஸ்டேக்காக உருவாக்கலாம்.

தங்கவேல்
தங்கவேல்

ஹேஸ்டேக்கைப் பயன்படுத்தும் முறை...

இன்ஸ்டாகிராமைப் பொறுத்த வரை, ஒரு பதிவுக்கு 30 ஹேஸ்டேக் வரை பயன்படுத்த லாம். முகநூலில் ஒரு பதிவுக்கு அளவில்லாத ஹேஸ்டேக்குகள் பயன்படுத்த முடியும். ட்விட்டரில் உங்கள் பதிவு, ஹேஸ்டேக் எல்லாம் சேர்த்தே 250 வார்த்தை களுக்குள் இருக்க வேண்டும் என்பதால், டிரெண்டில் இருக்கக் கூடியவற்றைத் தேர்வு செய்து பயன்படுத்த வேண்டும். யூடியூபில் 15 ஹேஸ்டேக் வரை பயன்படுத்தலாம்.

எந்த சமூக வலைதளமாக இருந்தாலும் நீங்கள் பயன்படுத்தும் ஹேஸ்டேக் எண்ணிக்கையை மேற்சொன்ன மூன்று பயன்பாட்டுக்கும் சமமாகப் பிரித்து பயன்படுத்தினால் நல்லது. இதுவரை இல்லாத ஒரு ஹேஸ்டேக்கை நீங்கள் உருவாக்கி பயன் படுத்துகிறீர்கள் எனில், அதை நீங்கள்தான் ட்ரெண்ட் செய்ய வேண்டும். சமூக வலைதளத்தில் அந்த ஹேஸ்டேக்கை நீங்கள் எத்தனை முறை பயன்படுத்திப் பதிவிடுகிறீர்களோ, அதைப் பொறுத்து நீங்கள் உருவாக்கிய ஹேஸ்டேக்கும் ட்ரெண்ட் ஆகும்.

கவனத்தில் கொள்ள வேண்டியவை...

ஹேஸ்டேக்குக்குப்பின் நீங்கள் பதிவிடும் வார்த்தை சுருக்கமாகவும், எளிதில் புரியும் விதமாகவும், முடிந்தளவு ஒரே வார்த்தையாகவும் இருக்க வேண்டும். ஹேஸ்டேக்குக்குப்பின் எந்த நிறுத்தல் குறியீடுகளும் பயன்படுத்தக் கூடாது. வன்முறைகள் சார்ந்த ஹேஸ்டேக்களைத் தவிர்த்துவிடுங்கள்.

அதிக ஹேஸ்டேக்களைவிட மூன்று ஹேஸ்டேக்கள் நல்ல பயன் தரும். ஹேஸ்டேக் என்பது உங்கள் வாடிக்கையாளரைச் சென்றடைய பயன்படுவதுடன் உங்களின் போட்டியாளர்களையும் அறிந்து கொள்ள உதவும். உங்கள் தொழில் சார்ந்து இயங்கும் செலி பிரட்டிகள் என்ன ஹேஸ்டேக்கள் பயன்படுத்து கிறார்கள் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை கவனித்து அதை உங்கள் பிசினஸிலும் அப்ளை செய்யலாம். ஹேஸ்டேக் தேடும்போதே, அதில் எத்தனை பேர் இந்த ஹேஸ்டேக்கைப் பயன்படுத்து கிறார்கள் என்ற எண்ணிக்கை வந்துவிடும். அந்த எண்ணிக்கையில் அதிகமானவர்கள் பயன்படுத்தியதை நீங்களும் தேர்வு செய்யுங்கள்’’ என்றார்.