Published:Updated:

25% மூலதன மானியம்... யாருக்கெல்லாம் பயன்..?

எம்.எஸ்.எம்.இ
பிரீமியம் ஸ்டோரி
எம்.எஸ்.எம்.இ

எம்.எஸ்.எம்.இ

25% மூலதன மானியம்... யாருக்கெல்லாம் பயன்..?

எம்.எஸ்.எம்.இ

Published:Updated:
எம்.எஸ்.எம்.இ
பிரீமியம் ஸ்டோரி
எம்.எஸ்.எம்.இ

தொழில் செய்பவர்கள் தங்கள் தொழிலை உற்சாகமாகச் செய்ய அரசால் அளிக்கப்படுவதுதான் மானியம். எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் என அழைக்கப்படும் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தங்கள் தொழிலை சிறப்பாகச் செய்வதற்கு 25% மூலதன மானியத்தை அளித்து வருகிறது. தமிழக அரசாங்கம் அளிக்கும் இந்த மூலதன மானியம் குறித்து பல எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களுக்குத் தெரியவே இல்லை. இந்த மூலதன மானியம் குறித்த தகவல்களை தொழில் ஆலோசகரான எஸ்.சிவகுமாரிடம் கேட்டோம். அவர் விளக்கமாக எடுத்துச் சொன்னார். இனி அவர் சொன்னதாவது...

ஜி.டி.பி-யை உயர்த்தும் எம்.எஸ்.எம்.இ-கள்...

‘‘நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) மிகப் பெரிய பங்களிப்பை செய்துவரும் மாநிலங்களில் நம் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இந்தப் பங்களிப்பு மிகப் பெரிய அளவில் இருக்கக் காரணம், நமது மாநிலத்தில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்தான்.

தமிழகத்தில் மட்டும் செயல்படும் எம்.எஸ்.எம்.இ தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 6.89 லட்சம். இவை ரூ.32,008 கோடிக்கு மேலான மொத்த முதலீட்டில் 8,000 வகையான பல்வேறு பொருள்களை உற்பத்தி செய்கின்றன. மேலும், அதிகமானவர்களுக்கு வேலை வாய்ப்பைத் தருவதும் இந்த எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள்தான்.

25% மூலதன மானியம்... யாருக்கெல்லாம் பயன்..?

மூலதன மானியத் திட்டம் என்றால்..?

இப்படிப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையை முன்னேற்ற தமிழக அரசு பல்வேறு நல மற்றும் மானியத் திட்டங்களை அளித்து வருகிறது. அதில் ஒன்றுதான், எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களுக்கான 25% மூலதன மானியம் அளிக்கும் திட்டம். அதாவது, ரூ.1 கோடி மூலதனம் செய்து நடத்தப்படும் தொழில் எனில், அதில் ரூ.25 லட்சத்துக்கு மானியம் கிடைக்கும் என்பதுதான் இந்தத் திட்டத்தின் சிறப்பம்சம்.

தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் மூலதனச் சொத்துகளின் (ஆலை மற்றும் இயந்திரங்கள்) முதலீட்டுக்கு தமிழக அரசு 25% மானியம் அளிக்கும். இந்த மானியம் அதிகபட்சமாக ரூ.1.5 கோடி முதலீட்டில் அமைக்கப் பட்டுள்ள தொழில் நிறுவனங்களுக்கு மட்டுமே அளிக்கப்படும்.

இந்தத் திட்டம் கடந்த 2020, ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப் பட்டது. புதிதாகத் தொழில் தொடங்குவோரும் அல்லது ஏற்கெனவே தொழில் நிறுவனம் வைத்திருப்போரும் இந்த மூலதன மானியத்தைப் பெறலாம். கடன் பெற்றுத் தொழில் நடத்திவந்தாலும், கடன் பெறாமல் தொழில் நடத்திவந்தாலும் இந்த மானியத்தைப் பெற விண்ணப்பிக்கலாம்.

எஸ்.சிவகுமார்
எஸ்.சிவகுமார்

எந்தெந்த துறை நிறுவனங்களுக்கு மானியம் வழங்கப்படும்?

மின் மற்றும் மின்னணுப் பொருள்கள், தோல் மற்றும் தோல் பொருள்கள், வாகன உதிரி பாகங்கள், மருந்து மற்றும் மருந்துப் பொருள்கள், சூரியசக்தி பயன்பாட்டு உபகரணங்கள், ஏற்றுமதிக்கான தங்கம் மற்றும் வைர நகைகள், மாசுக் கட்டுப் பாடு தொடர்பான உபகரணங் கள், விளையாட்டுப் பொருள் கள் மற்றும் உபகரணங்கள், கட்டுமான பொருள்கள், ஆயத்த ஆடைகள் தயாரிப்பு, உணவு பதப்படுத்துதல், ஒரு முறை தூக்கி எறியப்படாத பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தி, ரப்பர் உற்பத்தி, ஒரு முறை தூக்கி எறியப்படு வதற்கான மாற்று பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தி, மின் வாகனங்களுக்கான உதிரி பாகங்கள் மற்றும் சார்ஜிங் உள்கட்டமைப்பு வசதிகள், மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு, தொழில்துறை மற்றும் மருத்துவத்துக்குத் தேவையான டெக்ஸ்டைல்கள், விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறை சார்ந்த உபகரணங்கள் தயாரிப்பு, எலெக்ட்ரானிக் சிஸ்டம் டிசைனிங் மற்றும் உற்பத்தி, உயிரி தொழில்நுட்பம், பெட்ரோ கெமிக்கல் மற்றும் ஸ்பெஷாலிட்டி கெமிக்கல், தொழில்துறை 4.0, எலெக்ட் ரானிக் பொருள்கள் கழிவு என மொத்தம் 23 தொழில் துறை களுக்கு இந்த மானியம் வழங்கப்படுகிறது.

ஆனால், சர்க்கரை மற்றும் வெல்லப்பாகு, சுற்றுச்சூழலுக்கு உவப்பில்லாத தொழில் நிறுவனங்களுக்கு இந்த மூலதன மானியம் வழங்கப்படாது எனவும் சொல்லப்பட்டுள்ளது.

எங்கே விண்ணப்பிக்கலாம்?

அனைத்து மாவட்டத் தலை நகரத்தில் உள்ள மாவட்ட தொழில் மையங்களில் (District Industries Centres) நேரடியாக விண்ணப்பிக்கலாம். மேலும், வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் விண்ணப்பிக்கலாம். மூலதன மானியத்துக்கு http://msmeonline.tn.gov.in/incentives என்ற இணைய முகவரியிலும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டிய தகவல்கள்...

தொழில் செய்யும் நிறுவ னத்தின் வகை, நிறுவனத்தின் திட்ட விவரங்கள், நிலையான மூலதன முதலீடு, நிதி வழி முறைகள், பெறப்பட்ட கடன் தகவல்கள், நிறுவனத்தின் மின் பயன்பாடு குறித்த விவரங்கள், வேலைவாய்ப்பு மற்றும் வேலையாட்கள் குறித்த தகவல்கள், தேதியுடன் கூடிய வணிக வரித்துறை தொடர்பான பதிவு விவ ரங்கள், வணிக உற்பத்தி தொடக்கத் தேதி, முதல் விற்பனை விலைப்பட்டியல் தேதி அல்லது முதல் டெலிவரி சலான் தேதி, மானியக் கோரல் விவரங்கள் மூலதன மானியம் பெறும் விண்ணப் பத்துடன் கட்டாயம் இணைக் கப்பட வேண்டும்.

25% மூலதன மானியம்... யாருக்கெல்லாம் பயன்..?

பதிவேற்ற வேண்டிய ஆவணங்கள் என்னென்ன?

1. உத்யோக் (Udyog) ஆதார் குறிப்பாணை, 2. மீட்டர் கார்டின் நகல் மற்றும் மின் வாரியத்திடம் இருந்து மின்சார அனுமதி உத்தரவு நகல், 3. விலைப்பட்டியல், பில்கள் மற்றும் முத்திரையிடப்பட்ட ரசீது நகல், 4. வணிக உற்பத்தி தொடங்கிய தேதியில் உருவாக்கப்பட்ட நிலையான சொத்துகளுக் கான பட்டயக் கணக்காளர் சான்றிதழ், 5. பட்டய கணக்காளர் கையொப்ப மிடப்பட்ட வணிக உற்பத்தி தொடக்கச் சான்றிதழ், 6. ஆலை யின் மதிப்பு மற்றும் சுயமாக தயாரிக்கப்பட்ட ஆலை மற்றும் இயந்திரங்களின் மதிப்புக்கான பொறியாளர் சான்றிதழ், 7. வணிக உற்பத்தி நிறுவனங்களின் முதல் விற்பனை விலைப்பட்டியல் நகல், 8. வணிக உற்பத்தி தொடங்கிய நாளிலிருந்து குறைந்தபட்சம் 11 ஆண்டுகளுக்கு ரூ.10 முத்திரைத் தாளில் செயல்படுத்தப்பட்ட குத்தகை ஒப்பந்தப் பத்திரத்தின் நகல் என அனைத்து முக்கியமான ஆவணங்களையும் பி.டி.எஃப் வடிவில் பதிவேற்ற வேண்டும்.

விண்ணப்பித்த பிறகான நடைமுறைகள்?

மூலதன மானிய விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து விண்ணப்பித்த பிறகு, அதிகாரிகள் தொழில் நிறுவனத்தை வந்து பார்வையிடுவார்கள். இதன்பிறகு தான் மானியம் தரும் முடிவு எடுக்கப்படும்.

சிறப்பு சலுகை உண்டா?

பின்தங்கிய பகுதிகளாக அறிவிக்கப்பட்ட 251 தொகுதிகளுக்கு 50% மானியம் உண்டு. பெண்கள், பட்டியலின சமூகத்தினர் மற்றும் பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் அல்லது திருநங்கைகளின் தொழில் நிறுவனங்கள் அதிகபட்ச ரூ.5 லட்ச முதலீட்டில் தொடங்கப் பட்டால் கூடுதலாக 5% மானியம் வழங்கப்படும். மேலும், ரூ.5 லட்சத்துக்கு உட்பட்ட குறு நிறுவனங் களுக்கு 10% கூடுதல் மூல தன மானியம் தரப்படும்.

இந்த மானியம் பெற கல்வித் தகுதி எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனால், தொழில் அனுபவம் இருந்தால் நல்லது. இந்தத் திட்டத்தில் பினாமி அல்லது வேறொருவர் பெயரில் செயல்பட முடியாது. மூலதன மானியம் வழங்குவதில் நிலம் மற்றும் கட்டடம் ஆகியவற்றின் மதிப்பு சேர்க்கப்பட மாட்டாது. இந்த மானியத்தில் இயந்திரங்களின் மதிப்பு மட்டுமே கணக்கில் எடுக்கப்படும் என்பது முக்கியமான விஷயம்.

இந்த மூலதன மானியத்தைப் பெறும் தகுதி உங்களுக்கு இருந்தால், நீங்களும் விண்ணப்பிக்கலாமே?