Published:Updated:

சிறுதொழில் நிறுவனத்தைத் தொடங்கத் தயாரா? அரசாங்கம் உங்களுக்கு உதவத் தயார்..!

சிறுதொழில்
பிரீமியம் ஸ்டோரி
சிறுதொழில்

தொழில்

சிறுதொழில் நிறுவனத்தைத் தொடங்கத் தயாரா? அரசாங்கம் உங்களுக்கு உதவத் தயார்..!

தொழில்

Published:Updated:
சிறுதொழில்
பிரீமியம் ஸ்டோரி
சிறுதொழில்

ஒரு தொழில் நிறுவனத்தைத் தொடங்க வேண்டும் என்கிற ஆர்வமும், ஐடியாவும் உங்கள் மனதில் நீண்ட நாளாக இருக்கலாம். அல்லது ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தைத் தொடங்கி நடத்த வேண்டும் என்கிற எண்ணம் உங்கள் மனதில் சமீப காலமாக உருவாகி இருக்கலாம்.

ஆனால், இந்தத் தொழில் நிறுவனத்தை ஆரம்பிப்பது எப்படி, எங்கு பதிவு செய்வது, எப்படி நிதி உதவி பெறுவது என்கிற பல கேள்விகள் உங்களுக்குள் எழுந்து, உங்கள் தொழில் கனவை நிஜமாக்க முடியாமல் தடுத்துக்கொண் டிருக்கலாம். இப்படித் தடுமாறி நிற்பவர்களுக்கு உதவுவதற்காகவே தமிழக அரசாங்கம் ஒரு திட்டம் தீட்டியிருக்கிறது.

வெளிநாடு மற்றும் உள்நாட்டுத் தொழில் நிறுவனங்கள் நமது மாநிலத் தில் தொழில் தொடங்க உதவி செய்யும் வகையில் ‘கைடன்ஸ் தமிழ்நாடு’ (Guidance Tamilnadu) என்னும் அரசு நிறுவனம் இந்தத் திட்டத்தை நடத்துகிறது. இந்தத் திட்டம் பற்றி நம்மிடம் விளக்கமாக எடுத்துச் சொன்னார்கள் ‘கைடன்ஸ் தமிழ்நாடு’ நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள்.

சிறுதொழில் நிறுவனத்தைத் 
தொடங்கத் தயாரா? அரசாங்கம் உங்களுக்கு உதவத் தயார்..!

உதவக் காத்திருக்கும் எட்டு நிறுவனங்கள்...

‘‘ஒரு எஸ்.எம்.இ நிறுவனம் அல்லது ஸ்டார்ட்அப் நிறுவனத்தை ஆரம்பிப்பது எப்படி என்று உங்களுக்குத் தெரியவில்லை எனில், கவலையே வேண்டாம். https://tntecxperience.com என்கிற இணையதள முகவரிக்குச் சென்று முதலில் உங்கள் பெயரை முதலில் பதிவு செய்துகொள்ளுங்கள். அது முடிந்தவுடன், உங்களுக்கு நேரடியாக உதவி செய்ய எட்டு நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன.

உதாரணமாக, உங்கள் நிறுவனத்தைத் தொடங்கத் தேவையான அனைத்து உதவிகளையும் வக்கில் சர்ச் (Vakil Search) என்கிற நிறுவனம் அளிக்கத் தயாராக இருக்கிறது.

நீங்கள் புதிதாகத் தொடங்கும் நிறுவனமானது ஆன்லைனில் 5000 முறை இலவசமாகப் பணப் பரிவர்த்தனை செய்ய உதவுகிறது பேயு (PayU) நிறுவனம்.

நீங்கள் விற்பனை செய்ய விருக்கும் பொருள்களுக்கான பில்லிங், இன்வென்ட்ரி மற்றும் அக்கவுன்டிங் தொடர்பான வேலையை ஆறு மாதத்துக்கு செய்துதரவுள்ளது வியாபார் ஆப் (Vyapar App) நிறுவனம்.

உங்கள் நிறுவனத்துக்கு பார்ட் டைம் வேலை ஏதும் இருந்தால், அதை தகுதி யானவர்களிடம் தந்து அந்த வேலையை முடிக்க உதவுகிறது ஃப்ளெக்ஸிபீஸ் (Flexibees) நிறுவனம்.

உங்கள் நிறுவனந்துக்குத் தேவையான நிதி சார்ந்த தொழில்நுட்பங்களை எம்2பி (M2P) என்கிற நிறுவனம் ஒரு வருட காலத்துக்கு இலவசமாகத் தருகிறது.

உங்கள் ஸ்டார்ட்அப் நிறுவனத்துக்கு முதலீடு தேவைப்படுமெனில், அதற்குத் தேவையான விஷயங் களை குவபிட்டா (Qapita) என்கிற நிறுவனம் செய்து தரத் தயாராக இருக்கிறது.

ஒரு நிறுவனம் என்று வந்துவிட்டால், மார்க் கெட்டிங் என்பது இல்லாமல் இருக்காது. உங்கள் நிறுவனத்துக்குத் தேவையான மார்க்கெட்டிங் உதவிகளை கப்ஷப் (Gupshup) நிறுவனம் உங்களுக்கு இலவசமாகவே செய்து தரும்.

ஒரு பக்கம் நிறுவனத்தை நடத்திவந்தாலும், கொஞ்சம் பணத்தை ஒதுக்கி முதலீடு செய்வது அவசியம். மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை, பாண்டுகளில் நீங்கள் முதலீடு செய்ய விரும்பினால், ப்ரைம் இன்வெஸ்டார் நிறுவனம் வெளியிடும் ஆய்வுக் கட்டுரைகளை சில மாதங்களுக்கு பணம் எதுவும் கட்டாமல் நீங்கள் படிக்கலாம்.

இப்படி புதிதாகத் தொடங்கும் நிறுவனங்களுக்கு உதவ எட்டு நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன. புதிதாக நிறுவனங்களைத் தொடங்குபவர்கள் இதற்கு முன்பு செலவு செய்துதான் இந்த வசதிகளைப் பெற வேண்டியிருந்தது. ஆனால், புதிதாக நிறுவனம் தொடங்குபவர்களிடம் நிறைய பணம் இருக்காது. எனவே, அவர்களால் அதிகம் செலவு செய்ய முடியாது என்பதால்தான், தமிழக அரசு இந்த எட்டு நிறுவனங்களுடன் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டு, புதிதாகத் தொழில் தொடங்குபவர்களுக்கு இலவச சேவையைத் தரும்படி ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது.

புதிதாகத் தொழில் தொடங்கியவர்களுக்கு ஆறு மாதம் முதல் ஒரு வருட காலத்துக்கு இந்த உதவிகள் பெரிய செலவு எதுவும் இல்லாமல் இலவசமாகக் கிடைக்கும். பிற்பாடு உங்கள் பிசினஸின் தேவைக்கேற்ப நீங்கள் இந்த உதவிகளைப் பணம் கட்டி பெறலாம்.

தமிழகம் முழுக்க உள்ள புதிய தொழில்முனை வோர்களும் ஸ்டார்ட்அப் நிறுவனம் தொடங்கி ஜெயிக்க நினைப்பவர்களும் இந்த உதவி தேவை எனில், https://tntecxperience.com என்கிற இணைய தளத்துக்குச் சென்று தாராளமாகப் பெறலாம்.

சிறுதொழில் நிறுவனத்தைத் 
தொடங்கத் தயாரா? அரசாங்கம் உங்களுக்கு உதவத் தயார்..!

முதலீட்டைத் திரட்டவும் உதவுகிறோம்...

இது தவிர, இன்னும் இரு முக்கியமான வேலை களையும் ‘தமிழ்நாடு கைடன்ஸ்’ அமைப்பு செய்து வருகிறது. அதில் முதலாவது, ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்குத் தேவையான முதலீட்டைப் பெற உதவும் பிட்ச்ஃபெஸ்ட் (pitchfest).தமிழகத்தில் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் முதலீட்டைத் திரட்ட நினைத்தால், எங்கே போக வேண்டும், யாரை அணுக வேண்டும், எப்படி நிதி திரட்ட வேண்டும் என்பது தெரியாமல் தவிப்பவர்கள், எங்களை அணுகினால், அவர்களை தொழில் முதலீடு செய்பவர்களின் முன்பு கொண்டுபோய் நிறுத்துவோம். அவர்களிடம் உங்கள் தொழில் ஐடியாவை விளக்கமாக எடுத்துச் சொல்லி, உங்கள் முதலீட்டைப் பெற முயற்சி செய்யலாம். இதற்கும் இந்த இணையதளத்தை நீங்கள் தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

கல்லூரி மாணவர்களுக்கு இன்ஃபோசிஸ் ஸ்பிரிங்போர்டு...

நாங்கள் வழங்கும் இன்னொரு முக்கியமான சேவை, இன்ஃபோ சிஸ் ஸ்பிரிங்போர்டு...இப்போது கல்லூரி மாணவர் கள் ஆர்ட்டிஃபீஷியல் இன்டலி ஜன்ஸ், மெஷின் லேர்னிங், ஐ.ஒ.டி (IoT), டிஜிட்டல் மார்க்கெட்டிங் எனப் பல விஷயங்கள் பற்றி படிக்க நினைக்கிறார்கள். ஆனால், ஏதோ ஒரு நிறுவனத் தில் சேர்ந்து கட்டணம் கட்டி படிக்க வேண்டிய கட்டாயத் தில் இருக்கிறார்கள். இந்தப் படிப்புகளைப் படிக்க அவர்களிடம் போதிய நிதி வசதி இருக்காது. இது மாதிரியானவர்கள் எங்கள் இணையதளத்தில் உள்ள இன்ஃபோசிஸ் ஸ்பிரிங்போர்டில் உள்ள வீடியோ களைப் பார்ப்பதன் மூலம் இந்தத் துறைகள் பற்றி நன்கு தெரிந்துகொள்ளலாம்.

இந்த வீடியோக்களைப் பார்த்தபின் ஒரு டெஸ்ட்டும் ஆன்லைனிலேயே வைக்கப் படும். இந்த டெஸ்ட் முடிந்தபின் உங்களுக்கு ஒரு சர்ட்டிஃபிகேட்டை இன்ஃபோசிஸ் நிறுவனம் தரும். இந்தப் பயிற்சியும், டெஸ்ட்டும் முழுக்க முழுக்க இலவசம் என்பதால், தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்துக் கல்லூரி மாணவர்களும் இந்த வசதியைப் பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.

புதிதாக சிறுதொழில் தொடங்க நினைப்பவர்களும், ஸ்டார்ட்அப் நிறுவனம் தொடங்க விரும்புவர்களும், கல்லூரி மாணவர்களும் இந்த இணையதளத்தில் கிடைக்கும் வசதிகளைத் தாராளமாக பயன்படுத்தத் தொடங்கலாமே!