Published:Updated:

வந்தாச்சு ஓ.என்.டி.சி... ஆன்லைன் நிறுவனங்களுக்கு `செக்!’

மின் வணிகம்
பிரீமியம் ஸ்டோரி
மின் வணிகம்

மின் வணிகம்

வந்தாச்சு ஓ.என்.டி.சி... ஆன்லைன் நிறுவனங்களுக்கு `செக்!’

மின் வணிகம்

Published:Updated:
மின் வணிகம்
பிரீமியம் ஸ்டோரி
மின் வணிகம்

Entrepreneur Anand Mahindra has always been a supporter and motivator of innovative ventures. He said last week, “We are at the peak of the retail revolution. This will democratize e-commerce; It frees us from the domination of a few giants and empowers millions of small shop owners. We must all support this. Congratulations to Nandan Nilekani and Prime Minister Narendra Modi! ” As tweeted.

சித்தார்த்தன் சுந்தரம்
சித்தார்த்தன் சுந்தரம்

இந்த ட்வீட்டின் பின்னணியில் இருந்தது `ஓ.என்.டி.சி என்று அழைக்கப்படும் தொழில் நுட்பம். அதாவது, Open Network for Digital Commerce’ சுருக்கமாக, ONDC ஆகும்.

மின் வணிகத்தை ஏறக்குறைய தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற ஜாம்பவான்களிடம் இருந்து விடுவித்து சிறு வியாபாரிகளும் தொழில்களும் பயன்பெற வேண்டும் என்கிற நோக்கத்தில் ஆதார் அட்டை வடிவமைப்பில் சூத்திரதாரியாக இருந்த நந்தன் நிலேகனியும், தேசிய சுகாதார ஆணையத்தின் (National Health Authority) தலைமைச் செயல் அதிகாரி ஆர்.எஸ்.ஷர்மாவும் இந்தத் திட்டத்தை வடிவமைப்பதில் ஈடுபட்டிருக்கிறார்கள். இவர்களுடன் சேர்ந்து இதற்காக ஒன்பது உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது.

வந்தாச்சு ஓ.என்.டி.சி... ஆன்லைன் நிறுவனங்களுக்கு `செக்!’

ஓ.என்.டி.சி என்றால்..?

இது யு.பி.ஐ (UPI) போல சந்தையில் பொருள் களை விற்பவர்களுக்கும் நுகர்வோர்களுக்கும் இடையேயான ஒரு பாலமாக அமைவதுடன், பொருள்களின் விவரம் அடங்கிய பட்டியல், உற்பத்தியாளர் / விற்பனையாளர் விவரம், பொருள்களின் விலையைக் கண்டறிதல் போன்ற பல அம்சங்களைக் கொண்டிருக்கும். தவிர, இந்த ஓ.என்.டி.சி தளம் யார் வேண்டு மானாலும் யாரிடம் வேண்டுமானாலும் பொருளை வாங்க முடியும், விற்கவும் முடியும்.

இந்தத் தொழில்நுட்பம் `திறந்த கட்டமைப்பு’ (Open Source) என்பதன் அடிப்படையில் இயங்குவதால், யார் வேண்டுமானாலும் தங்கள் பயன்பாட்டுக்கேற்றபடி மாற்றிக் கொள்ள முடியும். உதாரணமாக, ஆப்பிள் போனில் ஐ.ஓ.எஸ் தொழில்நுட்பத்தை மாற்ற முடியாது. ஆனால், ஆண்ட்ராய்டு போனில் இருக்கும் ஐ.ஓ.எஸ்ஸை யார் வேண்டுமானாலும் தங்கள் தேவைக்கு மாற்றிக்கொள்ளலாம்.

என்ன செய்யும் இந்த ஓ.என்.டி.சி..?

இதன்மூலம் மின் வணிகம் சம்பந்தப்பட்ட அனைத்து செயல்முறைகளையும் அதாவது, செயல்பாடுகளைத் தரப்படுத்துவது, சப்ளையர் களைச் சேர்ப்பது, லாஜிஸ்டிக்ஸ் செயல் திறனை அதிகரிப்பது மற்றும் நுகர்வோருக்கான மதிப்பை அதிகரிப்பது என அனைத்தையும் இந்த ஓ.என்.டி.சி தளம் டிஜிட்டல்மயமாக்கும்.

மின் வணிகத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் இந்த ஓ.என்.டி.சி தளத்தைக் கட்டாயம் பயன் படுத்த வேண்டும் என அரசு அனைவருக்கும் வரும் ஆகஸ்ட் மாதத்தில் கோரிக்கை வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி எல்லோரும் பயன்படுத்தும்பட்சத்தில் சிறிய அளவில் இயங்கிவரும் ஆன்லைன் விற்பனை யாளர்களுக்கும் கண்டுபிடிப்பு, இயங்குதன்மை, உள்ளடங்கல் (Inclusivity) ஆகியவற்றை எதிர்பார்த்து புதிதாக நுழைபவர்களுக்கும் ஊக்கம் அளிக்கும் வகையில் இது அமையும்.

மிகவும் வெளிப்படையான விதிமுறைகளையும் சட்ட திட்டங்களையும் இது கொண்டிருப்பதால் அனைவருக்கும் இது பயனுள்ளதாக அமையும்.

எதிர்க்கும் ஃப்ளிப்கார்ட்டும் அமேசானும்...

பெரிய மின் வணிக நிறுவனங்கள் ஏற்கெனவே தங்கள் நிறுவனங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவற்றுக் காக அதிகமாக முதலீடு செய்திருப்பதால், அரசின் இந்த முன்னெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. ஆனாலும், 2027 ஆண்டுக்குள் மின்வணிகத்தின் விற்பனை சுமார் 200 பில்லியன் டாலரைத் தொட்டுவிடும் என ஸ்டாடிஸ்டா (Statista) என்கிற ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை கூறுவதால், அனைத்துப் போட்டியாளர்களுக்கும் சம வாய்ப்பு வழங்கும் வகையில் இந்தத் தளம் அமையும் என இதில் ஈடுபட்டிருப் பவர்கள் கூறுகிறார்கள்.

மின் வணிகத்தில் சுமார் 80% பங்கைப் பெற அமேசானும் ஃப்ளிப்கார்ட்டும் சுமார் 24 பில்லியன் டாலரை முதலீடு செய்துள்ளன. தவிர, தீவிர தள்ளுபடி தருவது, குறிப்பிட்ட சில விற்பனையாளர்களை மட்டும் தேர்வு செய்து, அவர்களை மட்டும் ஊக்குவிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ரிலையன்ஸ், டாடா ஆகிய நிறுவனங்களும் சில்லறை வணிகத்தளங்களையும், சூப்பர் செயலிகளையும் அறிமுகப்படுத்தியிருக்கின்றன.

சில்லறை வணிகத்தில் மின்வணிகத்தின் பங்கு

தற்சமயம், மொத்த சில்லறை வணிகத்தில் மின் வணிகத்தின் (இ-காமர்ஸ்) பங்கு 6% மட்டுமே. ஆனால், இது எவ்வளவு விரைவாக அதிகரிக்கும் என்பதை பாரம்பர்ய சில்லறை வணிகர்கள் அறிந்தே இருப்பதால், இந்த வாய்ப்பை நழுவ விட மாட்டார்கள். இந்தியாவில் ஸ்மார்ட்போனை உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை சுமார் 80 கோடி என்பதால், வெளிநாட்டு சில்லறை வணிக வர்த்தகர்களும் இந்த வாய்ப்பை விட்டுவிட விரும்ப மாட்டார்கள்.

இந்தியாவெங்கும் அறிமுகப்படுத்துவதற்கு முன்பான இந்த ஓ.என்.டி.சி தளம் டெல்லி, போபால், பெங்களூரு, ஷில்லாங், கோயம்புத்தூர் என ஐந்து நகரங்களில் மட்டும் ஏப்ரல் மாத இறுதியில் வெள்ளோட்டம் விட்டு அதற்கான வரவேற்பையும் செயல்பாட்டையும் கவனித்து வருகிறது.

33 மில்லியன் டாலர் முதலீடு...

இந்த முன்னெடுப்பில் 33 மில்லியன் டாலரை முதலீடு செய்ய அரசு மற்றும் தனியாரின் 20 நிறுவனங்கள் உறுதியளித்திருக் கின்றன. இந்த ஓ.என்.டி.சி-யில் ஹெச்.டி.எஃப்.சி, கோட்டக் மஹிந்திரா, ஆக்ஸிஸ் பேங்க், எஸ்.பி.ஐ, பஞ்சாப் நேஷனல் பேங்க், போன்ற வங்கிகளும் இதில் முதலீடு செய்ய உள்ளன.

In addition, there are about 80 companies operating on the site to integrate marketers / manufacturers into the market. These companies are involved in designing the enterprise software, vendors, buyers, processors, logistics sites, and payment gateways required for the site.

It is widely rumored in the industry that the purpose of the initiative will be to curb the dominance of one or two companies that now dominate the e-commerce business.

Let’s wait until August to see what happens!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism