Published:Updated:

உங்கள் டாக்குமென்ட் பத்திரம்! - அடையாள ஆவணங்கள் ஜாக்கிரதை!

டாக்குமென்ட்
பத்திரம்
பிரீமியம் ஸ்டோரி
News
டாக்குமென்ட் பத்திரம்

யாரேனும் உங்களின் மொபைலுக்கு தொடர்புகொண்டு ஆதார், பான் போன்றவற்றைக் கேட்டால் தர வேண்டாம்!

பான் கார்டு, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு போன்ற அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி நடக்கும் மோசடிகள் சமீப காலமாக அதிகரித்த வண்ணம் உள்ளன.

சில மாதங்களுக்குமுன் திண்டுக்கல்லைச் சேர்ந்த ஒருவரின் பான் கார்டு, ஆதார் கார்டைக் கொண்டு அவருக்கே தெரியாமல் வங்கிக் கணக்கு ஒன்று தொடங்கப்பட்டு, ஒரு ஜவுளி நிறுவனமே இயங்கி வந்துள்ளது. அதன் உரிமையாளர் செய்த பண மோசடிக்கெல்லாம் அந்த ஆதார் கார்டின் உண்மையான உரிமையாளருக்கு நோட்டீஸ் சென்றுள்ளது. இதனால் குழப்பமடைந்துள்ள அவர் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டிருந்த வங்கிக்குச் சென்றுள்ளார். அங்கு தன் பெயரில் தனக்கே தெரியாமல் வங்கிக் கணக்கு ஆரம்பிக்கப்பட்டு, பண மோசடி செய்யப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். சம்பந்தப்பட்ட வங்கியில் இது குறித்து புகார் அளித்தும் அந்த மோசடி ஆசாமியைக் கண்டுபிடிக்க முடியவில்லை!

உங்கள் டாக்குமென்ட் பத்திரம்! - அடையாள ஆவணங்கள் ஜாக்கிரதை!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதுபோன்ற சம்பவங்கள் பல நடப்பதாகத் தகவல்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. பான் கார்டு, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு போன்றவற்றில் நம் சுயவிவரங்கள் உட்பட நம்மைப் பற்றிய அனைத்துத் தகவல்களும் உள்ளடங்கியிருப்பதால், அவை மற்றவர்களின் கைகளுக்குச் செல்லும்பட்சத்தில் அவற்றைத் தவறாகக் கையாளவும் வாய்ப்புள்ளது. வங்கி, மருத்துவமனை, காப்பீட்டு நிறுவனங்கள் போன்றவற்றுக்கு நாம் தரும் ஆவணங்களும் தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. இதுபோன்ற மோசடி சம்பவங்களில் சிக்காமலிருக்க நாம் எந்தவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எல்லாம் மேற்கொள்ள வேண்டும் என வழக்கறிஞர் பரந்தாமனிடம் கேட்டோம்.

எல்லாவற்றுக்கும் அரசு ஆவணம்...

“நம் நாட்டு மக்கள் ஒவ்வொரு வரைப் பற்றிய விவரங்களையும் முழுமையாகச் சேகரித்து வைக்கவே ஆதார் கார்டு, பான் கார்டு போன்ற ஆவணங்கள் கொண்டு வரப்பட்டன. இந்த கார்டுகளில் நம் சுயவிவரங்கள் உள்பட கண் விழி மற்றும் கைரேகை போன்ற பதிவுகளும் உள்ளடங்கி உள்ளன. இந்தியாவில் வசிக்கும் ஒருவரை விரைவில் அடையாளம் காண இந்த ஆவணங்கள் அரசுக்கு உதவுகின்றன. ஆனால், தற்போது அரசு தொடர்பான காரணங்களுக்கு மட்டுமன்றி, வங்கியில் கடன் வாங்குவதில் தொடங்கி மொபைலுக்கு சிம் கார்டு வாங்குவது வரை அனைத்து இடங்களிலும் ஆதார், பான் கார்டுகளின் நகலை வழங்குகிறோம்.

இந்த அடையாள ஆவணங்களில் நம் சுய விவரங்கள், முகவரிகள் உள்பட நம் பொருளாதாரம், நிதி சார்ந்த அனைத்து விஷயங்களும் இணைந்திருப்பதால், இவற்றை மற்றவர்கள் தவறாகப் பயன்படுத்தி மோசடி செய்வதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். அதனால் நீங்கள் எங்கெல்லாம் இதுபோன்ற ஆவணங்களை வழங்குகிறீர்கள் என்பதில் அதிக கவனமும் எச்சரிக்கையும் அவசியம்.

சில நிறுவனங்களிடம் நீங்கள் தரும் ஆவணங்கள் உங்களின் அனுமதி இல்லாமலேயே வியாபார நோக்கத்துக்காக மற்ற நிறுவனங்களுக்கும் பகிரப்படுகின்றன. நீங்கள் ஒரு வங்கியில் கணக்குத் தொடங்கி யிருக்கலாம். அதற்கு உங்கள் இ-மெயில் ஐ.டி, மொபைல் நம்பர் உள்பட அனைத்துத் தகவல்களையும் வழங்கியிருக்கலாம். இந்த வங்கிக் கணக்கு தொடரப்பட்ட சில நாள்களிலேயே உங்கள் மொபைலுக்கோ, இ-மெயில் ஐ.டிக்கோ வீட்டு மனைகள், மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் குறித்த விளம்பரங்கள் வரத் தொடங்குவதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். நீங்கள் கணக்குத் தொடங்கிய வங்கி உங்கள் விவரங்கள் அனைத்தையும் அதனுடன் இணைப்பில் இருக்கும் மற்ற நிறுவனங் களுக்கு உங்களின் அனுமதி இல்லாமல் வழங்கியதே இதற்குக் காரணம். இதுபோன்ற சம்பவங்கள் பள்ளி, கல்லூரிகள் உட்பட அனைத்து இடங்களிலும் நடந்த வண்ணமே உள்ளன.

சில இடங்களில் உங்களின் முகவரியை உறுதி செய்வதற்கான ஆவணத்தைக் கேட்பார்கள். அதற்கு ஆதார், பான் கார்டுகள் தேவையில்லை. இருப்பிடச் சான்றிதழே போதுமானது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பாதுகாப்பது எப்படி?

அரசு தொடர்பான விஷயங்கள் தவிர, மற்ற காரியங்களுக்கு உங்களின் அடையாள ஆவணங்களைத் தருவதற்குமுன் நன்றாகச் சிந்தியுங்கள். உங்களின் ஆவணங்களை பாதுகாப்பான இடத்தில்தான் தருகிறீர்களா... அதனால் பின்விளைவுகள் எதுவும் ஏற்பட வாய்ப்புள்ளதா... என்று நன்கு ஆராய்ந்த பிறகே ஆவணங்களைப் பகிர வேண்டும்.

உங்கள் டாக்குமென்ட் பத்திரம்! - அடையாள ஆவணங்கள் ஜாக்கிரதை!

விவரங்களைத் தராதீர்கள்...

யாரேனும் உங்களின் மொபைலுக்கு தொடர்புகொண்டு ஆதார், பான் போன்ற ஆவணங்களின் விவரங்களைக் கேட்டால், தர வேண்டாம். சம்பந்தப்பட்ட நிறுவனங் களிடமிருந்து அதிகாரப்பூர்வமான முறையில் ஆவணங்கள் கேட்கப்பட்டால் மட்டுமே அவற்றை வழங்க வேண்டும். எல்லா இடங்களிலும் ஆதார், பான் கார்டுகளை வழங்க வேண்டாம். சில இடங்களில் உங்களின் முகவரியை உறுதி செய்வதற்கான ஆவணத்தைக் கேட்பார்கள். அதற்கு ஆதார், பான் கார்டுகள் தேவையில்லை. இருப்பிடச் சான்றிதழே போதுமானது. இதுபோல் எங்கே எந்த ஆவணம் தர வேண்டும் என்பதைத் தெரிந்துகொண்டு, அதன்படி நடப்பது அவசியம்.

உங்கள் டாக்குமென்ட் பத்திரம்! - அடையாள ஆவணங்கள் ஜாக்கிரதை!

அரசு என்ன செய்ய வேண்டும்?

ஆதார், பான் கார்டுகளை மக்களை எடுக்க வைப்பதில் ஆர்வம் காட்டும் அரசு அவற்றின் ரகசியங்களைப் பாதுகாப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. அரசு இதற்கென தனி அமைப்பை ஏற்படுத்தி மக்களின் அடையாள ஆவணங்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி நடக்கும் மோசடிகளின் தந்திர முறைகளைக் கண்டறிந்து தடுப்பதற்கான நடவடிக்கைகளில் அரசு முழுவீச்சுடன் இறங்க வேண்டும். இந்த மோசடிகள் குறித்த எச்சரிக்கையையும் மக்களிடையே ஏற்படுத்த வேண்டும்” என்றார்.

ஆவணங்கள் விஷயத்தில் நாம் அலட்சியமாக இருந்தால், பிறகு கஷ்டப்பட வேண்டியிருக்கும்!